MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு  - இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு


இவர்களின் இயற்பெயர் அஹ்மத் என்பதாகும். இவர்களின் தந்தை ஹன்பல் என்பவராவர். ஹன்பல் என்பவர் மறவு எனும் ஊரிலிருந்து வந்து பஃதாதில் குடியேறியவர். ஹன்பலி இமாம் என்றே அஹ்மத் அவர்களை நாம் அழைக்கின்றோம். இவர்களின் மத்ஹபுக்கு ஹன்பலி மத்ஹப் என்கிறோம்.


இவர்கள் ஹிஜ்ரி 164 இல் மஹ்தீ எனும் அரசர் காலத்தில் பஃதாதில் பிறந்தார்கள். பஃதாதிலும், சுற்றுப்புறங்களிலுமுள்ள பற்பல மேதாவிகளிடம் கூபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஸிரியா, எகிப்து முதலிய நாடுகளில் சென்று பல வருடக்காலமாய் அருங் கல்விகளை அள்ளி எடுத்தார்கள். அவர்கள் பஃதாதில் இமாம்களான புகாரி, முஸ்லிம், அபூதாவுத் போன்றவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோருக்குக் கல்வியூட்டினார்கள். பல கிரந்தங்கள் இயற்றினார்கள். "மஸானித் அஹமத்" எனும் ஹதீஸ் கிரந்தம் இவர்கள் இயற்றியதாம்.


மஃமூன் எனும் அரசர் காலத்தில் குர்ஆன் படைக்கப்பட்டதா? அருளப்பட்டதா? எனும் தர்க்கத்தில்

அரசரின் கொள்கைக்கு மாறாய்த் தீர்ப்பளித்த காரணத்தால் சிறையுள் தள்ளப்பட்டுப் பல காலம்

கசையால் அடிக்கப்பட்டார்கள். தாங்கள் உண்மையெனக் கண்ட அவ்விஷயத்தில் இறுதிவரை

விட்டுக்கொடுக்கவில்லை. இவர்களின் மத்ஹபை மிகச் சிலரே இப்போது பின்பற்றுகின்றனர்.



இவர்கள் ஹிஜ்ரி 241 ரபியுல் அவ்வல் 13 ஆம் தேதி இறையடி எய்தினார்கள். இவர்களின் பிரேத ஊர்வலத்தில் 1,000,000 க்கும் அதிகமானோர் பங்குபற்றினர் என்றும் 20,000 பிற மதத்தினர் இஸ்லாமைத் தழுவினர் எனவும் கூறப்படுகின்றது.


இவர்கள் போற்றற்கரிய குணசீலராகவும், வணக்கவாளியாகவும், எளிய வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருந்தார்கள். உபதேசிக்கும் நேரமும், கல்வி கற்பிக்கும் நேரமும் தவிர்ந்த ஏனைய நேரங்களிலெல்லாம் இறைவணக்கமே இவர்களின் தொழில். உற்ற நண்பர்களிடமேயன்றி எத்தகைய வெகுமதியாவது, நேர்ச்சையாவது பெறாதிருந்தனர்.


அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.