ஷெய்க் கலாநிதி அப்துல் ரஹ்மான் ஷாமி


கலாநிதி அப்துல் ரஹ்மான் அல் ஷாமி சமகால இஸ்லாமிய உலகின் சிறந்த சட்டத்துறை அறிஞராக நோக்கப்படுகிறார்கள். 1943ஆம் ஆண்டு சிரியாவின் டமஸ்கஸ் நகரில் பிறந்த இவர்கள் 1967ஆம் ஆண்டு டமஸ்கஸ் பல்கலைக்கழத்தின் சட்டத்துறையின் பட்டதாரியாக கல்விப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.


இவர்கள் இராணுவ சேவையிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார்கள். சிறிது காலம் லெபனானின் பைரூத் அரபுப் பல்கலைக்கழத்திலும் கற்றுள்ளார்கள். இஸ்லாமிய ஹம்பலி சட்டத்துறையில் மிகச் சிறு தொகையிலான நிபுணர்களுக்கு மத்தியில் இவரது பெயரும் இடம்பெறுகிறது.



ஷெய்க் ரமலான் பூத்தி தலைமையில் இயங்கம் நஸீம் அல் ஷாம் என்ற இணையதளத்தின் பத்வா குழவிலும் கலாநிதி அப்துல் ரஹ்மான் அல் ஷாமி பணியாற்றுகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை