கலாநிதி  ஷெய்க்  ஆரிப்  அலி  நய்யித்


கலாநிதி ஆரிப் அலி நய்யித் லிபியாவின் தலைசிறந்த அறிஞராவார்கள். 1962ம் ஆண்டு திரிப்போலி நகரில் பிறந்தார்கள். ஆரம்பக்கல்வியை லிபியாவிலும் மேலதிகக் கல்வியை கனடாவிலும் மேற்கொண்டார்கள். கனடாவில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்கள். 2011ம் ஆண்டில் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள்.


லிபியாவில் ஏற்பட்ட புரட்சிக்கு முன்னர் திரிப்போலி நகரில் அமைந்துள்ள உஸ்மான் பாஷா மத்ரஸாவில் விரிவுரையாளராக பணியாற்றினார்கள். கேர்ணல் கடாபியின் மறைவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த National Transitional Council என்று அழைக்கப்படும் தேசிய நிலை மாற்றுப் பேரவையின் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்கள். கலாநிதி ஆரிப் அலி நய்யித் அவர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கான லிபியாவின் தூதுவராக பணியாற்றுகிறார்கள்.


இதேவேளை ஊடக மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளராவார்கள். லிபிய சுயாதீன உலமாக்கள் வலையமைப்பின் Network of Free Ulama செயலாளராகவும் கலாநிதி நய்யித் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


ஜஸாகல்லாஹு கைர்:  பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை