அஸ்ஸையித்  ஷெய்க்  முஹம்மத்  ஸக்காப்


ஸையித் முஹம்மத் அப்துல் றஹ்மான் அலவி அல் ஸக்காப் 1972ம் ஆண்டு ஜித்தாவில் பிறந்தார்கள். ஸையித் முஹம்மத் அல் ஸக்காப் இமாம் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்களாவார்கள். ஆரம்பக் கல்வியை தனது தந்தையிடம் பெற்றுக் கொண்டார்கள். ஹிஜாஸை சேர்ந்த பிரபலமான அறிஞர்களிடம் ஆன்மீக அறிவைப் பெற்றுக் கொண்டார்கள்.


அப்துல் காதிர் பின் அஹமத் அல் ஸக்காப் அஹமத் மஸ்ஹுர் பின் தஹா அல் ஹத்தாத் பேராசிரியர் முஹம்மத் பின் அலவி அல் மாலிகி ஹபீப் அபூபக்ர் மஸ்ஹுர் ஹபீப் உமர் பின் ஹபீஸ் போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்க வர்களாவர்கள். செய்யித் முஹம்மத் அல் ஸக்காப் தஃவாப் பணியில் கூடுதலாக ஆர்வம் செலுத்தி வருவதோடு கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கும் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடு கிறார்கள். யமன் ஹழரமவுத் “தாரிம்” தார் அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் உள்ளார்கள்.


ஸையித் முஹம்மத் அல் ஸக்காப் பா-அலவி குடும்பத்தை சேர்ந்தவராவார்கள் என்பதும் சிறப்பம்சம் ஆகும். இதே வேளை ஜித்தாவைத் தளமாக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சியில் இவர்கள் நடத்திவரும் “பத்தபிஊனி” நிகழ்ச்சி மத்திய கிழக்கிலும் மேற்குநாடுகளிலும் புகழ்பெற்று விளங்குகிறது.


ஜஸாகல்லாஹு கைர்:  பஸ்ஹான் நவாஸ்



< Back

English  -  தமிழ்

WWW.ISLAMICSCHOLARS.TK

உலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை