MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இப்னு பதூத்தா ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியது - அப்துல் ரஹீம் முஹம்மத் ஜௌபர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்)


இவரது முழுப் பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் லவாத்தீ தன்ஜீனி பதூதா.

.

இவ்வுலகம் முன் எப்போதும் கண்டு கேட்டிராத மாபெரும் இஸ்லாமிய தேச சஞ்சாரி. இவரைப் போற்றி புகழாத நல்லறிஞர்கள் இல்லை.

.

மாமேதையான இவர்கள் மொரோக்கோ நாட்டில், நல்லறிஞர்கள் குடும்பத்தில் தன்கியர் நகரில் கி.பி 1304 பெப்ரவரி 25 ல் பிறந்தார்கள். ஸுன்னி மாலிகி மத்ஹப் நல்லறிஞர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்கள்.

.

1325 ல் தனது 21 வது வயதில் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு சென்றார்கள். அக்காலத்தில் 16 மாதப் பயணம் அது. அதன் பிறகு 24 வருடங்களுக்குப் பிறகுதான் இப்னு பதூத்தா மொரோக்கோ தன் தாய்நாடு வந்து சேர்ந்தார்கள்.

.

இந்த 24 வருடங்களும் ஆபிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா என உலகம் பூராவும் சுற்றித் திரிந்தார்கள்.

.

இப்பிரயாணத்தின் போதே சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸையும் வந்தடைந்தார்கள். அன்று ஜுமூ'ஆ தினம். டமாஸ்கஸ் மஸ்ஜிதை அடைந்தார்கள்.

.

அன்று வழிகேடர் இப்னு தைமியா ஜுமூ'ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். பிரசங்கத்தில் அல்லாஹ் عزوجل வானுலகிலிருந்து பூமிக்கு இறங்கும் விடயம் வந்தது. "அல்லாஹ் எப்படி இறங்கினான் தெரியுமா?... இப்படிதான் நான் இப்போது இறங்குவது போல்தான் இறங்கினான் " என்று பிம்பர் படியிலிருந்து கீழே இறங்கிக் காட்டினான். ஸுப்ஹானல்லாஹ் எப்படி வழிகேட்டின் ஆரம்பம்?


இச்சம்பவம் தேச சஞ்சாரி இப்னு பதூத்தா எழுதிய, 'துஹ்fபதுன் நுஸ்ஸார்' என்ற கிதாபில் பதிவாகி உள்ளது.