MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலானா ஷெய்க் அப்துல் ரஷீத் ​ரஹ்மதுல்லாஹி அலைஹி


இவர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பில் காணப்படும் இலட்ச தீவுகளில் ஒன்றான அந்துரூ தீவில் பிறந்தார்கள்.

காதிரிய்யா வர்ரிபாஇய்யா தரீக்காக்களின் ஷெய்காகவும், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் 34வது தலை முறையிலும், ‘குத்புல் அக்தாப்’ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (கத்தஸல்லாஹு..) அவர்களின் 17வது தலைமுறையிலும் வந்தவர்கள்.

இலங்கையின் கிழக்கில் காத்தான்குடியிலும், மத்திய இலங்கையில் படுபிடியவிலும், மேற்கில் தெஹிவளையிலுமாக தனது பிரதான தளங்களை நிறுவி குறிப்பாக காதிரிய்யா மற்றும் ரிபாஇய்யா தரீக்காகக்களின் வளர்ச்சியிலும், பொதுவாக இலங்கை முஸ்லீம்களின் ஆன்மீக முன்னேற்றத்திலும் அக்கறையுடன் செயற்பட்டு வந்தார்கள்.

அவ்வகையில் இஸ்லாத்தின் ஷரீஆ சட்டக்கலை கற்ப்பிக்கும் பல்கலைக் கழகமாகவும் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்டையாகவும் தெஹிவலையில் அல்ஜாமியதுல் கௌஸிய்யா அரபுக் கல்லூரியை நிருவினார்கள்.

மற்றும் பட்டுப்பிட்டியில் அல் மத்ரஸதுல் மின்ஹாஜிய்யயாவையும் அமைத்தார்கள். இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவனில் தெஹிவலையில் வசிக்கும் சிங்களவர்கள் எவ்விடத்தை தங்களின் புனித பூமி என்று குறிப்பிடுகின்றார்களோ அவ்விடத்தில்தான் அல்ஜாமியதுல் கௌஸிய்யா அரபுக்கல்லூரி நிருவப்பட்டுள்ளது. என்பது தங்கள் வாப்பா (ரழியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களின் கராமத்துக்களிள் நின்றும் உள்ளது என்பதாக இன்றும் நினைவு கூறப்படுகின்றது.

அல்குர்ஆனின் அடிப்படையிலான வைத்தியத்துறை இவர்களின் பரம்பரையினருக்கே அல்லாஹ்வினால் அருளப்பட்ட பெருங்கொடையாகும். நவீன விஞ்ஞான மருத்துவம் வளர்ச்சியடைந்திராத 18ம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு வருகைதந்த இவர்களின் முன்னோர்கள் இம்மருத்துவ சிகிச்சை மூலமாகவே மூலை முடுக்கெங்கும் பிரசித்தமாகினர்.

நீண்ட காலமாகத் தீராதிருந்த தமது பிணிகளை இன்னோர்களின் அல்குர்ஆன் மற்றும் அப்ஜத் கணக்கீடுகளைக்கொண்டு கூறப்படும் வைத்திய சிகிச்சைகளைச்செய்து அதிசயிக்கத்தக்க விதமாகக் குணம் அடைந்த ஏராளமானோர் இவர்களின் தரீக்காக்களில் இணைந்து ‘பைஅத்’என்னும் ஞானதீட்சை பெற்று தத்தமது பிரதேசங்களிலும் இத்தரீக்காக்களை நிறுவி இன்றும் அவ்வழியில்செயற்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் தாய் மாமா முறையான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு யூசூப் கோயா தங்கள் மௌலானா அவர்களோடு சின்னஞ் சிறுவராக பாய்க் கப்பல் மூலம் பயணித்து முதன் முதலாக மன்னார் கரையில் கால் பதித்து நம் நாட்டிற்கு வருகை தந்த ஷெய்கவர்கள், போக்குவரத்து வசதியற்ற அக்காலத்தில் தன் மாமனாரோடு கூடுதலாக கால் நடையாகவே இத்தேசத்தில் பயணித்தார்கள்.

அவர்களின் மறைவுக்குப் பின் அவ்விரு தரீக்காக்களினதும் ஷெய்கான இவர்கள் மிக வேகமாக தரீக்கா வளர்ச்சியில் ஆர்வங்காட்டி செயற்பட்டார்கள். அல்லாஹ்வின் நேசர்களான வலீமார்களுக்கே சொந்தமான ‘கராமாத்’ எனும் அற்புத நிகழ்வுகளை இவர்களிடமும் கண்டதாக இன்றும் அதிகமானோர் சாட்சியமளிக்கின்றனர்.

கொடிய விஷ ஜந்துக்களின் நடமாட்டமும், தீண்டுதலும் அதிகமான அக்காலத்தில் அவற்றினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக தங்கள் வாப்பா அவர்கள் காங்கேயனோடையிலும், காத்தான்குடியில் முஹ்யித்தீன் தைக்காவிலும், பட்டுபிட்டி போன்ற இடங்களிலும் விஷமிறக்கும் அற்புதக் கற்களை நிறுவினார்கள்.

அதன் மூலம் இன மத வேறுபாடுகளின்றி விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் பயனடைந்தனர். இத்தகைய மகிமையும், சிறப்பும் உடைய எங்களின் திங்கள் மதிமுகத்தங்கள் நாயகம் அப்துர் றஸீத் மௌலானா வாப்பா அவர்கள்2 6.06.1997 வெள்ளிக்கிழமை இரவு 09:40 மணிக்கு எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து அமைதியான கேரளக் கடலோரம் அமைந்துள்ள கண்ணூர் பட்டணத்தில் நல்லடக்கம் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்