MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சுல்தான்‬ ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - அப்துல் ரஹீம் முஹம்மத் ஜௌபர்


மேற்கத்திய நாடுகளில் 'சலடின்' என அழைக்கப்படும் இவர்கள் கிறிஸ்தவ சிலுவை போராளிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக் கெதிராக நூற்றுக்கணக்கான போர்களை நடாத்தி வெற்றிக் கொண்டவர்கள். அவர்களிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டுத் தந்தவர்கள்.

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அவர்களின் கிடைத்தற்கரிய து'ஆவே சாதாரண போர் சிப்பாயின் மகனாரை அத்தனைப் பெரிய வீரராக சுல்தானாக உருவாக்கியது.

அப்போது அவர்களுக்கு வயது ஒன்பது. அவர்களின் தந்தையார் நஜ்முத்தீன் அய்யூபி சிரியாவில் படைத்தளபதிகளுள் ஒருவராக இருந்தார். தன் மகனை மாவீரனாக உருவாக்கிப் பார்க்க ஆசையுற்ற அவர்கள் மகனாரோடு பக்தாத் சென்று ஔதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்தார்கள். கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை தடவி விட்டு 'மாவீரராய் உருவாகுவார்கள்' என்று வரமருளினார்கள்.

இதன் பலனாய் கிறிஸ்தவ சிலுவைப் போராளிகளை வாகை சூடினார்கள். எகிப்து, சிரியா, மொஸப்பதேமியா, ஹிஜாஸ், ஆபிரிக்காவின் வடக்கிலுள்ள நாடுகள் யாவும் அவர்களுக்கு கீழ் வந்தன.

சுல்தான் அய்யூபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் அஷ்ஷைகு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பை'அத் செய்து முரீதானவர்கள்.

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாதத்தடியில் அமர்ந்தவர்கள். இதற்கான அத்தாட்சி துருக்கியிலுள்ள டொல்காப்பி மியூஸியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அவர்களின் வாளில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் காதிரி ஸில்ஸிலாவில் உள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த அப்புனித வாளின் ஒரு பக்கத்தில் புனித கலிமா பொறிக்கப்பட்டுள்ளது. மறு பக்கத்தில் 'யா ஷைகு அப்துல் காதிரு ஷையன்லில்லாஹ்' என்று பொறிக்கப்படடுள்ளது.

அது மாத்திரமல்ல அவர்களின் படையணியில் இருந்தப் போராளிகளில் 50% மானவர்கள் காதிரியா தரீக்காவைச் சார்ந்தவர்கள்.

அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் அலா ஸையதினா முஹம்மதின் மஃதினுல்ஜூதி வல்கரம் வாலிஹில் கிராமி வப்னில் கரீம் வபாரிக் வ ஸல்லம் தாயிமன் அபதா பி தவாமி முல்கில்லாஹ்...

யா ஷைகு ஔதுல் அஃலம் தஸ்தகீர் ஷையன் லில்லாஹ் அல் மதத்