MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத்


எழுதியவர்  -  பஸ்ஹான் நவாஸ்  (இலங்கை வானொலி தமிழ் சேவை செய்தி ஆசிரியர்)


இஸ்லாமிய வரலாற்றில் சிறந்த ஆட்சியாளர்களின் வரிசையில் இறுதியாக ஆட்சி செய்தவர் சுல்தான்  2ம் அப்துல் ஹமீத் ஆவார். 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் 1876ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி ஸ்தான்பூல் நகரில் பிறந்தார். இஸலாமிய கிலாபத் சரிவை எதிர்நோக்கிய நிலையில் அவர் தனது 34ம் வயதில் கலீபாவாகப் பொறுப்பேற்றார். ஆட்சிப்பொறுப்பை ஏற்றுகும் போது துருக்கி, பாரசீகம், அரபு ஆகிய மொழிகளில் அவர் பாண்டித்தியம் பெற்றிருந்தார். பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து இஸ்லாமிய ஆள்புலத்தை பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் இஸ்லாமிய வராலாற்றில்  பாரியளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். அவரது சீர்த்திருத்த சிந்தனைகளே அவரை மேற்கு உலக நாடுகளின் எதிரியாக அவரை மாற்றியமைத்தது.


சுல்தான்  2ம் அப்துல் ஹமீத் கல்வித்துறையில் எதிர்பாராத திருத்தங்களை மேற்கொண்டார். துருக்கியின் ஸ்தான்பூல் பல்கலைக்கழகம் 1900 ம் ஆண்டு சுல்தான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1882ம் ஆண்டுக்கும் 1894ம் ஆண்டுக்கும் இடையிலான 12 ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதியில் மாத்திரம் 51 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. சுல்தான் அப்துல் ஹமீத் நிர்மாணித்த சகல பாடசாலைகளும்  இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை அடைப்படையாகக் கொண்டே இயங்கியதாக அமெரிக்காவின் வரலாற்று ஆசிரியர் வில்லியம் க்லேவலண்ட்  தனது History of the Modern Middle East  என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1901ம் ஆண்டு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் Hamidiye பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.


முதலவாது நீதி அமைச்சும் சுல்தானின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. டெலிகிராம் என்று அழைக்கப்படும் தந்தி சேவையும் விஸ்தரிக்கப்பட்டது. ஹிஜாஸ் ரயில்வே திட்டமும் சுல்தானின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மதீனா நகரையும் துருக்கியின் தலைநகர் ஸ்தான்பூலையும் இணைப்பது சுல்தான் அவர்களின் இலக்காக இருந்தது. ஐரோப்பிவில் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இலகுவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது சுல்தானின் மற்றுமொரு இலக்காகும். ஹிஜாஸ் ரயில்வே கட்டமைப்பு 1903ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை இயங்கியது. T. E. Lawrence என்ற பிரித்தானிய உளவாளியின் தலைமயில் இயங்கிய அரபு சவுதிய புரட்சிப்படையினர் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஹிஸாஜ் ரெயில்வே கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்தது. அயர்லாந்தின் திரைப்பட இயக்குனர்  Peter O'Toole   இயக்கி 1962ஆம் ஆண்டில் வெளியிடப்பட  Lawrence of Arabia என்ற திரைப்படத்தில் காணலாம்.    


சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் ஏனைய உஸ்மானிய ஆட்சியாளர்களைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அதிகளவில் நேசம் வைத்திருந்தார். துருக்கியில் அமைந்துள்ள அரச மாளிகைக்கு மின்சாரம் வழங்குவதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த பொறியிலாளர் குழுவினர் முன்வந்தார்கள். ஆனால் தான் வசிக்கும் அரச மாளிகைக்கு முன்னாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கே முதன் முதலாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கு அமைய 1909ம் ஆண்டு சுல்தான்  2ம் ஹமீதின் உத்தரவுக்கு அமைய இஸ்லாமிய உலகில் மஸ்ஜிதுன் நபவியில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு  மின்சாரம் வழங்கப்பட்டது.


சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் சிறந்த மார்க்கப்பற்றாளராக இருந்தார். அவர் ஷாதுலியா தரீக்காவின் ஓர் உறுப்பினராகவும் இருந்தார். திக்ர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக அவர் தலைநகர் இஸ்தான்பூலில் ஓரு ஸாவியாவையும் நிர்மாணித்தார்.


சியோனிஸ அமைப்பு யூதர்களுக்கான நாடொன்றை அமைக்க மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. யூதர்களை பலஸ்தீனில் குடியமர்த்துவதற்காக அனுமதி கோரி சியோனிஸ அமைப்பின் தலைவர் தியேட்டர் ஹேர்ஸில் 1901ம் ஆண்டு துருக்கி சென்று சுல்தானை சந்தித்தார். பலஸ்தீனில் யூதர்களை குடியமர்த்த 150 மில்லியன் பவுண்களை சுல்தானுக்கு பரிசாகத் தருவதாகக் கூறினார். ஆனால் ஹேர்ஸிலை சந்திக்க சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டி சுல்தான் பின்வருமாறு உரையாற்றினார்.


"பலஸ்தீனை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஹெர்ஸிக்கு அறிவிக்கவும். பலஸ்தீனின் ஒரு பிடி மண்ணை கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். முஸ்லிம் உம்மத் தனது இரத்தத்தை தண்ணீராக புனித புமியில் தியாகம் செய்திருக்கிறது. யூதர்களின் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய கிலாபத் ஒழிக்கப்படும் நாளில் பணம் கொடுக்காமலேயே அவர்கள் பலஸ்தீனை பெற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடுக்கும் போது பலஸ்தீன் துண்டாடப்படுவதை விட எனது உடல் வாளால் வெட்டப்படுவதையே விருகிறேன்."


சுல்தான் 2ம் அப்துல் ஹமீதை கொலை செய்வதற்காக பல தடகைள் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியாக ஆர்மேனிய புரட்சிகர சம்மேளனம் என்று அழைக்கப்படும் Armenian Revolutionary Federation  சுல்தானை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள். சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள்  ஸ்தான்பூல் நகரில் அமைந்துள்ள யில்திஸ் பள்ளிவாசலில் ஜூம்ஆ தெர்ழுகையை நிறைவேற்றுவதை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். சுல்தான் அவர்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றி வெளியேறும் போது குண்டை வெடிக்கச் செய்வது இவர்களின் இலக்காக இருந்தது. உஸ்மானிய கடற்படை 1900ம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியா, பிரான்ஸ் கடற்படைகளுக்கு அடுத்தபடியாக உலகின் வல்லமை மிக்க கடற்படையாக இருந்தது. சுல்தான் அப்துல் 2ம் ஹமீதின் காலப் பகுதியில் எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரத்து 300க்கும் அதிகமான பத்திரிகைளும், சஞ்சிகைளும் வெளிவந்தன. அல் அஹ்ரம், ரஷீத் ரிழா அவர்களால் வெளியிடப்பட்ட அல் மனார் சஞ்சிகைளுகம் இதே காலத்தில் வெளியிடப்படன.   


1905ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை........ சுல்தான் பள்ளிவாசலில் இருந்து  வெளியேறி 42 செக்கனில் குண்டை வெடிக்கைச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழமைக்கு மாற்றமாக சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் இஸ்லாமிய கிலாபத்தின் பிரதம முப்தியாக இருந்த ஷெய்குல் இஸ்லாமுடன் உரையாட ஆரம்பித்தார். சுல்தானை நோக்கு குண்டு வீசப்பட்டது. சுல்தான் காயங்களுடன் உயிர்தப்பினார். ஒரு சில  செக்கன்கள் தாமதமடைந்ததால் சுல்தான் காப்பாற்றப்பட்டார். சம்பவத்தில் சுல்தானின் 28 மெய்ப்பாதுகாவலர்கள் உயிரிழந்தார்கள். சுல்தானுக்கு எதிராக Armenian Revolutionary Federation மேற்கொண்ட கடைசி படுகொலை முயற்சி இதுவாகும் என்று ஓஸ்ரிய நாட்டின் எழுத்தாளர் Erich Feigl தனது A Myth of Terror: Armenian Extremism, Its Causes and Its Historical Context என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சுல்தான் 2ம் ஹமீத் சகல அதிகாரங்களையும் கொண்ட இறுதி உஸ்மானிய கலீபாவாகக் கருதப்படுகிறார். சுல்தான் அவர்களை பதவி கவிழ்க்க பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டன. சிறுபான்மை கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் போர்வையில் Armenian Revolutionary Federation ஐ இந்த நாடுகள் இஸ்லாமிய அரசுக்கு எதிராக  அடிக்கடி தூண்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. பிரித்தானியாவிடம் இருந்து இஸ்லாமிய அரசைப் பாதுகாக்க சுல்தான் அப்துல் ஹமீத் ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தார். ஆனால் உஸ்மானியக் கிலாபத்தின் ஒரு பகுதியைத் துண்டாடுவதே ஜேர்மனியின் நோக்கமாக இருந்தது என்பதை அறிந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் தன் மேல் ஒரு கட்டடத்தின் சுவர் விழுந்ததைப் போன்று இருந்ததாக தனது சொந்த நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.



இஸ்லாமிய கிலாபத்தைப் பாதுகாக்க  இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளின் ஆதரவை சுல்தான் அவர்கள் திரட்டினார்கள். 1881ம் ஆண்டில் தூனிஸியா பிரான்ஸ் படையினரால் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியா 1882ம் ஆண்டில் எகிப்தை கைப்பற்றியது. இந்தோனேசியா  நெதர்லாந்தினால் கைப்பற்றப்பட்டது. மேற்கு நாடுகளில் கல்வி கற்ற  தேசிய இளம் துருக்கியர்களினால் சுல்தான் அப்துல் ஹமீதை பதவி கவிழ்பதற்கான முயற்சிகள் தீவரமான முறையில் மேற்கொள்ளப்பட்ன. சுல்தான் அப்துல் ஹமீதை பதவி நீக்குமாறு துருக்கி பாராளுமன்றத்திற்கு தேசிய இளம் துருக்கியர்கள் அமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்தது. கி.பி 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி துருக்கி சட்டமன்ற செனட் சபையின் 240 உறுப்பினர்களும் சுல்தான் பதவி விலக வேண்டும் என்று சட்டமூலத்தை நிறைவேற்றினார்கள். அன்றை ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் தியாஅத்தீன் எபந்தி சுல்தான் பதவி நீக்கபட்டமைக்கான பத்வாவை வாசித்தார்.


பதவி விலகப்பட்டதை அறிவிப்பதற்கான சுல்தானிடம்  4 பேர் அடங்கிய பிரதிநிகள் சென்றார்கள். இதில் இமானுவேல் க்ரஷோவ் என்ற யூதனும் அடங்கியிருந்தான்.  நாட்டு மக்கள் உங்களைப் பதவியில் இருந்து அகற்றியுள்ளார்கள் என கூறிய போது ஆத்திரம் அடைந்த சுல்தான் அவர்கள் மக்கள் என்னை பதவியில் இருந்து அகற்றினார்கள் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஒரு கலீபாவை பதவி விலக்க ஏன் ஓரு யூதனை அழைத்து வந்திருக்கிறீர்கள் என இமர்னுவேல் கிரஷோவை சுட்டிக் காட்டி சுல்தான் கேட்டார். சுல்தான் அப்துல் ஹமீதின் பின்னர் ஆட்சி செய்த 3 கலீபாக்களும் தேசிய இளம் துருக்கியரின் கைபொம்மையாகவே செயற்பட்டார்கள். 33 வருட ஆட்சியின் பின்னர் சுல்தான்  2ம் அப்துல் ஹமீத் 1918ம் ஆண்டு பெப்ரவரி மாதம்  10ம்  திகதி இவ்வுலைவிட்டும் பிரிந்தார்கள். 1924ம் ஆண்டு  நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கமால் அத்தா துருக்கினால் இரத்துச் செய்யப்பட்டது. 1300 வருடங்களாக இருந்த இஸ்லாமிய ஆட்சி அன்று முடிவுக்கு வந்தது.


சூரியன் மறைந்துவிட்டது. இறைவன் நாடினால் மறைந்த மீண்டும் சூரியன் உதிக்கும்.