MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு (அதான்) சொல்வது கூடுமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு (அதான்) சொல்வது கூடுமா? என்பது பற்றி ஓர் ஆய்வு.


♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்குதான் கூறவேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்குதான் சொல்லப்பட்டது. உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சி காலத்தில்தான் இரண்டாவது பாங்கு உருவாக்கப்பட்டது.


​​ஆகவே ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு சொல்வது பித்அத் என்றும் ஸஹாபாக்களை (உஸ்மான்) ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றுவது கூடாது என்று விமர்சிக்கும் சில வாதங்களுக்கான தெளிவாக விளக்கங்கள் பின்வருமாறு:

♣  பாங்கு (அதான்) என்றால் என்ன?

தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழியில் ‘பாங்கு’ என்றும் கூறப்படும். தமிழிலும் பாங்கு என்றே சொல்லப்படுகிறது. தொழுகைக்கு முன்னால் பாங்கும், இகாமத்தும் சொல்வது சுன்னத்து, பர்ளுத் தொழுகைக்கும், விடுப்பட்ட (கழா) தொழுகைக்கும் தனியாகவோ, கூட்டாகவோ தோலும் போது பாங்கும், இகாமத்தும் சொல்வது சிறந்ததாகும்.


​​

♣  பாங்கு (அதான்) கூ றுவதன் சிறப்புகள்

தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கு வணக்கமாக்கியுள்ளார்கள். ஒருவன் தன்னுடைய வீட்டில் தொழுதாலும், கடைவீதியில் தொழுதாலும், காட்டில் தொழுதாலும் பாங்கு சொல்லித் தொழுவதைத் தான் மார்க்கம் வழிகாட்டுகிறது. பல பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கென்று முஅத்தின்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முஅத்தின்கள் நியமிக்கப்படாத பள்ளிகளும் உள்ளன. முஸ்லிம்களில் அதிகமானோர் பாங்கு கூறுவதற்கு வெட்கப்படுகின்றனர்.


​​இதன் காரணமாகவே பல பள்ளிவாசல்களில் சப்தமிட்டு பாங்கு கூறுவதற்குச் சக்தியில்லாத வயோதிகர்கள் முஅத்தின்களாக உள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூட விளங்க முடியாத வகையில் பாங்கின் வாசகங்களைக் கூறுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சமாகும். தொழுகைக்காக நாம் கூறுகின்ற பாங்கிற்கு, பாங்கு சொல்பவருக்கு ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.

♦இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.


​​​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) 

​​நூல் : புகாரி (615, 654, 2689)

♦"மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: முஸ்லிம் 631


​​

♣  ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு சொல்வது யாருடைய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர் (ரலியல்லாஹு அன்ஹு, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜும்ஆவுக்கு மக்கள் தொகை பெருகியபோது இரண்டாவது பாங்கு அதிகப்படியான சொல்லப்பட்ட செய்தியினை புகாரியில் பார்க்கலாம்.

♦ மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ் அடிப்படையில் இன்று ஜும்ஆவிற்கு இரண்டு அதான்கள் அனைத்து ஊர்களில் குறிப்பாக சுன்னத் வல் ஜமாஅத் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஜும்ஆவிற்கு இரண்டு அதான்கள் சொல்வதைப் பார்க்க முடியும். ஆரம்பத்தில் 12.30 மணியளவில் ஒரு அதான் கூறி விடுவார்கள். இமாம் மிம்பரில் உட்கார்ந்த பிறகு உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் மற்றொரு அதானைச் சொல்வார்கள். இது இரண்டாவது அதான் இவ்வாறு அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் ஊர்களில் எந்தப் பள்ளிவாசல்களில் பார்த்தாலும் ஹதீஸ் அடிப்படையில் இந்த அழகான வழிமுறையை காண முடியும்.

♦ இந்த அழகிய வழிமுறையை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு சுபசெய்தி கூறிய, 'எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறிய உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் அதிகமாக இஸ்லாத்திற்கு வந்த காரணத்தினால் உரையைக் கேட்பதற்கு மக்கள் வருவதில்லை இமாம் மிம்பரில் ஏறிய பிறகுதான் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.


​​அப்போது மக்களுக்கு அதான் சொல்லும் சப்தம் கேட்கும் அப்போது தான் மக்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அவசர அவசரமாகத் தயாராவதைப் பார்த்த உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்த ஒரு அதான் போதாது மக்கள் தொழுகைக்கு நேரகாலத்துடன் ஜும்ஆவிற்கு வருகிறார்கள் இல்லை என்ற காரணத்தினால் மக்களுக்கு ஜும்ஆவைப் பற்றி நினைவு படுத்துவதற்கு இன்னும் ஒரு அதானை (இரண்டாவது அதான்) அதிப்படுத்தினார்கள்.

♦ ஸாயிப் இப்னு யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவித்தார்கள். மக்கள் பெருகியபோது ஜும்ஆ நாளின் இரண்டாம் பாங்கை உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) ஏற்படுத்தினார்கள். (அதற்கு முன்னர்) இமாம் அமரும்போது பாங்கு சொல்வது மட்டுமே இருந்தது.


​​ஷஹீஹ் புகாரி 915, மேலும் பார்க்க 916, 913, 912


​​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டதை நாம் பின்பற்றலாமா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவாக்கியதை செய்யக் கூடாது என்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறிக் கொண்டு, இன்று ஜும்ஆவுக்கு ஒரு பாங்குதான் சொல்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பார்வையில் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவாக்கிய இரண்டாவது பாங்கு பித்அத்தாகும், அந்த அடிப்படையில் இதற்கு ஆதரமாக ஒரு குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுவார்கள். 'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன், ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 5:3)

♦ ஆகவே இஸ்லாம் மார்க்கம் முழுமையாகி விட்டது எனவே உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததை நாம் செய்யக் கூடாது என்று குர்ஆன் வசனத்தை அவர்களின் வழிகெட்ட கொள்கைகளுக்கு தோதுவாக வழைத்து பேசுகிறார்கள். இப்படியொரு கேள்வியை முன்வைப்பது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமாகும். மேலே கூறப்பட்ட வசனம் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு கடைசி ஹஜ்ஜின் போது அரபா மைதானத்தில் இறங்கிய வசனம் இந்த வசனம் இறங்கிய பின் வட்டி, கடன் சம்பந்தமான வசனங்களும் இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது என்று வழிகெட்ட முட்டாள் வஹ்ஹாபிகள் வட்டி, கடன் சம்பந்தமான வசனங்களை குர்ஆனிலிருந்து நீக்கிவிடுவார்களா? ஆகவே அல்லாஹ் மார்க்கத்தினை பூர்த்தியாக்கிக் விட்டானென்றால் என்ன விளக்கம்: 'இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்களை முழுமையாக்கி விட்டான் என்பதாகும்'. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களோடு மக்களாக இந்த உலகத்தில் இருந்த போதெல்லாம் சட்டங்கள் வந்து கொண்டே இருந்தது.


​​

♣  இஸ்லாம் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற அல்குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன?

இறைவன் இஸ்லாம் மார்க்கத்தை பூர்த்தியாக்கிக் விட்டானென்றால் என்ன விளக்கம்? 'இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை சட்டங்களை முழுமையாக்கி விட்டான். அந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸைக் கொண்டுதான் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது, எனவே ஸஹாபாக்களை, இமாம்களை பின்பற்றுங்கள் என்று அவ்விரண்டிலும் அல்லாஹுதஆலாவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.

♦ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகின்றான். அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள். அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.


​​அல்குர்ஆன் : 9:100

♦ எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் (ஸஹாபாக்கள், இமாம்கள்) செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம் அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.


​​அல்குர்ஆன் : 4:115

இறைவன் இந்த நீண்ட இரு வசனத்திலும் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்கும், சுவர்க்கம் கிடைக்கும், ஆகவே முழுமையாக மார்க்கம் குர்ஆன் ஆகும். அந்த குர்ஆனில் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என இறைவன் கூறியுள்ளான். ஸஹாபி உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜும்ஆவுக்கு இரண்டாவது பாங்கினை ஒரு நல்ல நோக்கத்துடன் உருவாக்கியுள்ளார்கள். அதனை நாமும் பின்பற்ற வேண்டும் அதில் எவ்வித தவறும் கிடையாது.

♦ மேலும் முழுமை பெற்ற மார்க்கம் என்பது ஹதீஸ் ஆகும். அந்த ஹதீஃதில் ஸஹாபாக்களை பின்பற்றுங்கள் என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்: மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.

திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607

♦ உங்களில் ஒருவர் நேர்வழியில் செல்ல நாடினால், உங்கள் முன் மரணமானவர்களின் பாதையில் செல்லுங்கள். உயிரோடுள்ளோர்கள் குழப்பத்தில் உள்ளாக்கப்படலாம். இறையடி சேர்ந்தவர்கள் எம் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனிதத் தோழர்களாகும். அவர்கள் இந்தச் சமுதாயத்தின் சிரேஷ்ட மாணவர்களும் ஆழமான அறிவுகளையும் நல்ல மனப்பக்குவம் உள்ளவர்களாகவும் முற்றிலும் இக்லாஸ் உடையவர்களாகவும் காணப்பட்டனர். அல்லாஹ் அவர்களை அவனது நபியின் தோழமைக்காகவும், அவனது மார்க்கத்தை நிலைநிறுத்தவும் தேர்ந்தெடுத்தான். அவர்களை உயர்ந்த நன்மக்களாக நம்புங்கள். அவர்கள் சென்ற வழியைப் பின் தொடருங்கள். முடியுமானவரை அவர்களது குணங்களையும் வாழ்க்கை நெறியையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியிலேயே இருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : மிஷ்காத்

♦கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.


​​நூல் மிஷ்காத்: 6018

ஆகவே முழுமை பெற்ற மார்க்கம் ஹதீஸுமாகும் அந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஸஹாபாக்களை (உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பின்பற்றுங்கள் என்று, அந்த அடிப்படையில் முழுமை பெற்ற மார்க்கத்தில்தான் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உருவாக்கியதை நாம் செய்ய மாட்டோம் என்பது ஸஹாபாக்களை (உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை) புறக்கணிப்பது மற்றுமல்லாமல் குர்ஆன், ஹதீஸை புறக்கணிப்பதாகும்.

♦ ஏனெனில் முழுமை பெற்ற மார்க்கமாகிய குர்ஆன், ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. 'ஸஹாபாக்களை பின்பற்றுங்கள்' என்பதாக ஆகவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் போன்றவைகளாகிய, எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். என்ற ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்களையும் பின்பற்றி வாழ்வதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்