MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது ஸுன்னத்தா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னதா? என்பது பற்றி ஓர் ஆய்வு.

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

இன்று நவீன குழப்பவாதிகளால் பிரச்சினையாக்கப்பட்டுள்ள விஷயங்களில் குனூத்தும் ஒன்றாகும். அந்த அடிப்படையில் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் என்றும் குனூத்திற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை என வஹ்ஹாபிகள் அங்கலாய்கின்றனர்.


​​ஹதீஸ்களில் தராதரங்களைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத அப்பாவிகள் நபிமொழிகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றுவிட்டவர்களைப் போன்று பசப்பு வார்த்தைகளால் பாமர மக்களின் உள்ளத்தில் விஷ வித்துக்களை தூவி அவர்களை குழப்பி அற்ப சுகம் காணுகின்றனர். வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

ஆகவே ஹதீஸ்கள் அடிப்படையில் ஸஹாபாக்கள், இமாம்கள் குறிப்பாக ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். இதற்கான தக்க ஆதாரங்கள் பின்வருமாறு:

♣  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதியதற்கான ஆதாரங்கள்:

♦ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் (வபாத்) வரை ஸுப்ஹில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.


ஹழ்ரத் ​​அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்கள்: தாரகுத்னி 2 - 39 - 41, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 3 - 110, அத்காறுந் நவவி 57

♦   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் பர்ராஃ ரலியல்லாஹு அன்ஹு.

​நூல்: அபூ தாவூத்- 1229


​♦  அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஸுப்ஹுத் தொழுகையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குனூத் ஓதினார்களா? என வினவப்பட்ட போது ஆம் எனப் பதிலிருத்தனர். ருகூஉக்கு முன்னரா? பின்னரா? என வினவ ருகூஉக்குப் பின்னர் என விடை பகர்ந்தனர்.


​​நூல் அபூதாவுத் 1 - 313, நஸாயீ 1061

♦   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைமறுப்பாளர்களை சபித்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பிறகு அதை (மற்ற தொழுகைகளில்) விட்டுவிட்டார்கள். ஆனால், சுப்ஹ் தொழுகையில் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றவரை குனூத் ஓதி வந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு.

​நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 201,தாரகுத்னீ -1712

♦ ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் (வபாத்) வரை ஸுப்ஹில் குனூத் ஓதுபவர்களாக  இருந்தார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்கள்: தாரகுத்னி 1712, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 3 - 110, அத்காறுந் நவவி 57

♦   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு.

​நூல்: ஹாகிம்-1061

♦   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் ஃபர்ராஃ இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: தாரமீ - 1650

♦   கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையின் போது, அல்லாஹும்மஹ்தினா…. (எனத் தொடங்கும் வாசகங்களை) குனூத்தில் ஓதுவார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 210

♦  அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஸுப்ஹுத் தொழுகையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குனூத் ஓதினார்களா? என வினவப்பட்ட போது ஆம் எனப் பதிலளித்தனர். ருகூஉக்கு முன்னரா? பின்னரா? என வினவ ருகூஉக்குப் பின்னர் என விடை பகர்ந்தனர்.


​​அபூதாவுத் 1 - 3133

♣   ஸஹாபா பெருமக்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதியதற்கு ஆதாரங்கள்:

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஃகில் ரலியல்லாஹு அன்ஹு.

நூல்: இப்னு அபீ ஷைபா, பாகம் 2 பக்கம் 211

♦ இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். குனூத் ஓதினார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ரஜா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 211

♦ இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுதார்கள். குனூத் ஓதினார்கள். (கீழ்காணும் வசனத்தையும்) ஓதிக் காண்பித்தார்கள். நீங்கள் குனூத் ஓதி அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்குர்ஆன் 2:238


​​நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 205

♦ ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகையை உங்களை விட அருகில் இருந்து அறிந்தவன் நான். இதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சுப்ஹ் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமான் ஹமிதஹ்' என்று கூறியதற்குப் பின்னால் குனூத் ஓதுவார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஸல்மா ரலியல்லாஹு அன்ஹு.

​நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 206

♦ அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு இருவரும் ஸுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின்னர் குனூத் ஓதினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ உத்மான் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் தாரகுத்னி - பைஹகி

♦   நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊரிலும், பிரயாணத்திலும் தொழுதிருக்கிறேன். அன்னார் ட ஸுப்ஹில் ருகூஉக்குப் பின் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். மற்ற தொழுகையில் குனூத் ஓதுவதில்லை.

அறிவிப்பவர்: ஹழ்ரத் அல் அஸ்வத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் பைஹகீ : பாகம் 2 பக்கம் 203


​​

♣  குனூத் ஓதும் போது கையை உயர்த்துவதற்கான ஆதாரங்கள்:

♦   இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் மக்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினார்கள். இரு கைகளையும் உயர்த்தி குனூத் ஓதினார்கள்.


​​நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215

♦   உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ருடைய குனூத்தில் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.


​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ உத்மான் ரலியல்லாஹு அன்ஹு.

​நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215

♦ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின் இரு கரங்களையும் உயர்த்தி சப்தமிட்டு துஆ கொண்டு குனூத் ஓதுவார்கள்.


அறிவிப்பாளர்: ஹழ்ரத் ​​அபூராபி (ரலியல்லாஹு அன்ஹு).

​நூல் : பைஹகீ