MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தின் ﷺ  முன் அறிவிப்பும்

​நக்ஷ்பந்தி தரீக்காவின் சிறப்பும்


இமாம் முஹம்மத் முதவ்லியுஷ் ஷஹ்ராவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

20 ம் நூற்றாண்டின் தலைசிறந்த முபஸ்ஸிர்


​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலைத் தவிர, சகல வாயில்கள் (கதவுகள்) மூடப்பட வேண்டும் என கட்டளையிட்டார்கள். (ஸஹீஹ் புகாரி, திர்மிதி)

.

உலகில் 70 ற்கும் அதிகமான தரீக்காக்கள் காணப்படுகின்றன. நக்ஷபந்தியா தரீக்காவின் ஸில்ஸிலாவைத் தவிர உலகில் தோன்றிய அதிகளவிலான தரீக்காக்களின் ஸில்ஸிலா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் முடிவடைகிறது. ஆனால் நக்ஷபந்தியா தரீக்காவின் ஸில்ஸிலா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் முடிவடைகிறது.

.

21ம் நூற்றாண்டில் பல தரீக்காக்களின் தஃவா பணிகள் சுருங்கிவிட்டன. அல்லது முற்றுப்பெற்றுவிட்டன. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற இஸ்லாமிய வாசனையை அறிந்திராத இடங்களுக்கு தஃவாவை எடுத்துச் சென்றவர் நக்ஷபந்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் மௌலானா ஷெய்க் நாஸிம் அல் ஹக்கானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

.

இன்றும் அவர்களது முரீதீன்கள் அவர்களின் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியின் சகல வாயில்களையும் மூடிவிட்டார்கள். அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நுழையும் வாயிலைத்தவிர அதற்குரிய அர்த்தம் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சில்ஸிலா (நக்ஷபந்தியா) மறுமை நாள் வரை மூடப்படமாட்டாது என்பதாகும்

.

ஆக்கம்: முஹம்மத் பஸ்ஹான் நவாஸ்

​​