MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெருநாள் தொழுகை தொழவேண்டிய சிறந்த இடம் எது?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டிய சிறந்த இடம் மஸ்ஜிதா? திடல் எனும் மைதானமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

பெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத திறந்த திடல்களில் தான் தொழ வேண்டும். பள்ளி வாசல்களில் தொழுவது பித்'அத்தான செயலாகும். என பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டும் என்று அடம்பிப்பது அவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை சரியாக விளங்காத காரணமாகும்.


​​அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இடவசதி இல்லை என்ற காரணத்தினால் மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள். இதனை புரிந்து கொள்ளாமல் ஏதோ உலருகிறார்கள்.

பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழவேண்டுமா? அல்லது திடலில் (மைதானத்தில்) தொழவேண்டுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் மார்க்கம் இரண்டுக்குமே அனுமதி வழங்கியுள்ளது. அவ்விரண்டில் எது சிறந்தது என்று வரும்போது பள்ளிவாசலில் தொழுவதுதான் சிறந்தது என்று இமாம்கள் கூறுகிறார்கள்.


​​குறிப்பாக இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலும் ஷாபிஈ மத்ஹபை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலானவர்களோ ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப் போதுமான இடவசதி இருந்தால் மைதானத்தில் தொழுவதை விட அந்த மஸ்ஜிதில் தொழுவதுதான் சிறந்தது என்றும் மைதானத்தில் தொழுதாலும் தவறில்லை என்றும் ஃபத்வா வழங்கியுள்ளார்கள்.


​​

♣  பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நிறைவேற்றுவது சிறந்தது என்பதற்காக ஆதாரம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகைக்காக திடலை நாடிச் சென்றதற்கான சில அடிப்படை காரணங்கள்:


நபிகளாருடைய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலகட்டத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு மஸ்ஜிதுகள் விசாலமாக இருக்கவில்லை என்பதும் காபிர்களின் மத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கிலுமே.


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் திடலை நாடிச் சென்றார்களே தவிர பள்ளிகளை விட திடல் தான் பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் சிறந்த இடம் என்ற கருத்தில் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறும் ஊகமாக அல்லாது தெளிவான சான்றுகளின் அடிப்படையிலேயே நாம் முன்வைக்கிறோம்.

♦ உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய ஆட்சி காலத்தில் பெருநாளுடைய தினத்தில் கடும் மழை பெய்துகொண்டிருந்தது. ஆகவே மக்கள் திடலுக்கு செல்லாமல் பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். பின்னர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அப்துல்லாஹ் இபுனு ஆமிர் இபுனு ராபியா அவர்களிடம் நீங்கள் எதை என்னிடம் சொன்னீர்களோ அதை மக்களுக்கு அறிவிக்கும் படி கட்டளையிட்டார்கள்.


அப்துல்லாஹ் இபுனு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவித்தார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பெருநாளுடைய தினத்தில் கடும் மழை பெய்துகொண்டிருந்தது. மக்கள் திடலை விட்டு ஒதுங்கினார்கள். உமர் ரழியல்லாஹு அன்னவர்கள் மக்களை பள்ளிவாசலில் ஒன்றுதிரட்டி பெருநாள் தொழுகையை நடத்தி முடித்தார்கள். பிறகு உமர் ரழியல்லாஹு அன்னவர்கள் மிம்பரில் ஏறி “நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவார்கள்,காரணம் என்னவெனில் அது அவர்களுக்கு இலகுவாகவும் போதுமானதாகவும் இருந்தது. மேலும் அவர்களுக்கு பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்ற போதுமானதாக இருக்கவில்லை.”

(இமாம் பைஹக்கி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் அஸ்ஸூனன் அல் குப்ரா 3/310)


மேலும் பெருநாள் தொழுகைக்காக மாதவிடாய்ப் பெண்களையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் திடலுக்கு அழைத்திருந்தமையை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். பெண்கள் தாம் மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை எவ்விதமான தொழுகைகளிலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்திய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மாதவிடாய்ப் பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக திடலுக்கு அழைத்து துஆவில் பங்கெடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணி குறித்து அலச வேண்டும்.


நிச்சயம் இது காபிர்கள் மத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த ஏற்பாடு என்பதே நம்முடைய இமாம்களின் முடிவாகும். பர்ழான ஐவேளைத் தொழுகையே மாதவிடாய்ப் பெண்களுக்கு விலக்களிக்கப்பட்டிருக்க, மேலும் பெண்களுக்கு தொழுகை நிறைவேற்ற மிகச் சிறந்த இடம் வீடு என்று அடையாளப்படுத்திய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மாதவிடாய்ப் பெண்களையும் துஆவில் பங்கெடுக்க தொழுகை நடைபெறும் இடத்துக்கு வருகை தரவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார்கள் என்றால் மேற்படிய காரணத்தை நிரூபிக்க இச்சான்று வலுவானதாகும்.


பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவது கூடாது என்றோ அது தடுக்கப்பட்டது என்றோ நாம் சொல்லவில்லை. பெருநாள் தொழுகையை பள்ளிகளிலும் நிறைவேற்றலாம். திடலிலும் நிறைவேற்ற முடியும். அனால் திடலை விட பள்ளிகளை முற்படுத்துவதே நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய வழிமுறை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். இதனையே இமாம் ஷாபீஈ ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்


”ஊரிலுள்ள பள்ளிவாசல் பெருநாள் தொழுகைக்காக மக்களை உள்ளடக்கக்கூடிய போதிய இடவசதியை கொண்டிருப்பின் மக்களை திடலுக்கு செல்லும்படி நான் வலியுறுத்தமாட்டேன்.திடலுக்கு சென்றாலும் தவறில்லை. தொழுகை கூடும். (இமாம் ஷாபியி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய கிதாபுல் உம்மு (1/207)


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப் போதுமான இடவசதி இல்லாதிருந்ததாலும் திடலில் தொழுதது ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டும் என்பதினாலாகும். அந்த இருநோக்கமும் மஸ்ஜிதில் கைகூடி விட்டால் அங்கு தொழுவதே சிறந்தது.


​​பைஹகியில் இடம்பெரும் பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாகும். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மழைபெய்த போது பெருநாள் தொழுகயை மஸ்ஜிதில் நிறைவேற்றிவிட்டு பின்வருமாறு கூறினார்கள். “மக்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை திடலுக்கு அழைத்துச் சென்று தொழுகை நடத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில் திடலே மக்களுக்கு இலகுவானதாகவும் விசாலமானதாகவும் (போதுமானதாகவும்) இருந்தது. மஸ்ஜிதோ அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மழை பெய்துவிட்டால் மஸ்ஜிதே மக்களுக்கு இலகுவானதாகும் (வசதியானதாகும்).”

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்த போது பள்ளிவாசலில்தான் பெருநாள் தொழுகையை நடாத்தினார்கள். ஸஹாபாக்களும் பள்ளியில்தான் தொழுதார்கள். மாறாக மைதானத்திற்க்கு அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில் அன்று மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபவர்கள் குறைவானவர்களாக இருந்தார்கள். மக்கா பள்ளிவாசலும் விசாலமாக பெரிதாக இருந்தது. அதனால் மக்கா பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நடாத்தினார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்க்கு சென்றபோது அதிகமாகனவர்கள் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டார்கள். அன்று மதீனா பள்ளிவாசலும் சிறியதாக இடவசதி இல்லாமல் இருந்ததோடு மக்கள் தொகையும் அதிகமாக காணப்பட்டன. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை தொழுவதற்க்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்த காரணத்தினால் மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள். அதே சமயம் மதீனாவில் மழைபெய்த போது பள்ளிவாசலில் தொழுகையை நடாத்தியுள்ளார்கள்.

குறிப்பு : வஹ்ஹாபிகள் திடலில்தான் தொழவேண்டும் என்று அடம்பிப்பது அவர்களின் அறியாமைதான் காரணம்.

பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்றிருந்தால் மேலே கூறியது போல், நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருந்த போது ஸஹாபாக்களை மைதானத்திற்க்குதான் அழைத்துச் சென்று தொழுகை நடாத்திருக்க வேண்டும். இன்னும் மதீனாவில் மழைபெய்ந்த போதும் மைதானத்திற்க்குதான் அழைத்துச் சென்று தொழுகை நடாத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை மாறாக பள்ளியில்தான் தொழுகை நடாத்தினார்கள்.

♦ எனவே இதிலிருந்து பள்ளிவாசல்களில் ஊரில் உள்ள அனைத்து மக்களும் தொழுவதற்க்கு விசாலமான போதுமான இடவசதி இருந்தால் பள்ளியில்தான் தொழுவது சிறந்ததாகும். பள்ளிவாசலில் இடம்மில்லை என்றால்தான் மைதானத்திற்க்குச் செல்ல வேண்டும். ஆகவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் மதீனா பள்ளிவாசல் சிறியதாக இருந்தது. எனவே மைதானத்தில் தொழுதார்கள். இப்போதெல்லாம் பள்ளிவாசலில் போதுமான இடவசதிகள் இருக்கின்றெதல்லவா? பின்பு ஏன் திடலில் தொழ வேண்டும்? அந்த அடிப்படையில் மாஷா அல்லாஹ் இன்று மக்கா, மதீனா பள்ளிவாசலில் போதுமான இடவசதிகள் உள்ள காரணத்தினால் பெருநாள் தொழுகையை பள்ளியில்தான் தொழுகிறார்கள்.


​​

♣  பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :ஒருவர் காலைலும், மாலையும் தொழுவதற்க்காக பள்ளிவாசளுக்கு நடந்து சென்றால் அவருக்காக வேண்டி சுவர்கத்தில் ஒரு வீட்டை இறைவன் கட்டுகிறான்.

​​

நூல் : புகாரி

இந்த ஹதீஸ் பிரகாரம் அதிகாலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு நடந்து சென்றால் சுவர்கத்தில் ஒரு வீடு கிடைக்கும் ஆனால் திடலுக்கு சென்றால் இந்த பாகியம் கிடைக்கமாட்டாது. ஆனால் தொழுகை கூடும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு தொழுவதற்காக நடந்து சென்றால் அவன் வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு நன்மை எழுதப்படுகிறது.

​​​

நூல் :புகாரி

இந்த ஹதீஸ் பிரகாரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக அதிகாலையில் பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதனால் ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது, ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஆனால் திடலுக்கு சென்றால் இந்த நன்மை கிடைக்காது ஆனால் தொழுகை கூடும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :ஒருவர் பள்ளிவாசலுக்குள்ளே இருக்கும் போது அவருக்குகாக மலக்குமார்கள் துஆ செய்கிறார்கள். இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவருக்கு ரஹ்மத் செய்வாயாக!. ஆனால் திடலுக்கு தொழச் சென்றால் இந்த துஆ கிடைக்காது ஆனால் தொழுகை கூடும்.


​​

♣  நபிவழியில் "திடல் தொழுகை" என்று விளம்பரம் செய்கின்றார்கள். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா?

இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது. பர்ளுத் தொழுகை, சுன்னத் தொழுகை, ஆனால் திடல் தொழுகை என்று ஒரு பெயரில் தொழுகை இல்லை. (நவூதுபில்லாஹ்) இந்த பெயரில் ஒரு தொழுகையை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தவுமில்லை.

இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர், இது போன்ற புதுமை பெயர்களைக்கூறி மக்களிடையில் பிரசாரம் செய்கின்றார்கள். பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழவேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஒரு ஆதாரமும் இல்லை என்று மக்களிடத்தில் போலித் தவ்ஹீத் வஹ்ஹாபிகள் பொய் மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விடுகின்றார்கள். இறைவனை பயந்து கொள்ளுங்கள்!

♦ ஆகவே வஹ்ஹாபிகள் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டும் என்று அடம்பிப்பது அவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை சரியாக விளங்காத காரணமாகும். அன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இடவசதி இல்லை என்ற காரணத்தினால் மைதானத்திற்க்கு அழைத்துச் சென்று தொழுகையை நடாத்தினார்கள்.


​​இதனை புரிந்து கொள்ளாமல் ஏதோ உலருகிறார்கள். எனவே பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதை விட பள்ளிவாசலில் தொழுவதுதான் சிறப்பாகும். மாஷா அல்லாஹ் இன்று எமது ஊர்களில் விசாலமான பெரிய பள்ளிவாசல் உள்ளன. ஆகையினால் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி மேலே கூறப்பட்ட நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.