MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஆன்மீகம், ஞானம், அஞ்ஞானம், மெய்ஞானம் என்றால் என்ன?


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♣ ஆன்மீகம் என்றால் என்ன ?

ஆன்மீகம் (இறை ஞானம்) என்பது பரந்து விரிந்து காணப்படும் சமுத்திரத்தை விட பெரியது. அதை விட ஆழமானதும் விசாலமானதுமாகும். கடலை அளந்து கணக்கெடுத்தாலும் கூட இறைஞானக் கடலை அளப்பதற்க்கு எவராலும் முடியாது. அதற்கு அளவு கோல் இல்லை.

மனிதா! நீ சிற்றின்பத்தை அடைய வேண்டும் என்று நினைத்தால் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக் கொள். அது உனக்கு புரியும், நீ பேரின்பத்தை நுகர வேண்டும் என்று விரும்பினால் அல்லாஹ்வை காதல் கொள்.


​​அவனிடம் திக்ரில் அழிந்து போ. அது உனக்கு புரியும், பேரின்பம் என்றால் எப்படி என்று கேட்காதே அது நீ அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று உன்னையும் உலகையும் திக்ரினால் மறந்து விடு. அப்பொழுது புரியும் பேரின்பம் என்பது எப்படி என்று.


​​ஆன்மீக பல முள்ளவனாக இருந்தால் பேரின்பத்தை ருசித்துக் கொள். அல்லாஹ்வை அவனின் தரத்திற்கு ஏற்றவாரு அறிந்து கொள்ள எவராலும் முடியாது. ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே கூறினார்கள் : "வமா அரப்னாக்கா ஹக்கை மஃரிஃபதிக" (உனது தரத்திற்கு ஏற்றவாரு உன்னை நாங்கள் அறியவில்லை) என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைஞானக் கடலில் மூழ்கி விளையாடுவார்கள். அதன் மீதும் நீந்தி மகிழ்வார்கள் அவர்கள் தான் நபிமார்களும், ஆவார்கள்.இருளை நீக்கி ஒளித்திரை பெற்று உத்தமர் ஆவார்கள் .

இன்னும் சில அடியார்கள் இறைஞானக் கடலில் கரையில் நின்று காலை மட்டும் அதில் நனைத்து கொண்டு மகிழ்வார்கள். அவர்கள் வலிமார்கள் ஆவார்கள்


இன்னும் பலர் இறைஞானக் கடலை கூட காணாதவர்கள். அதன் கறையோரம் கூட போகாதவர்கள். அக்கடலின் இரைச்சல் கூட கேட்காதவர்கள். பூமிக்கும் வானத்துக்கும் வித்தியாசம் தெரியாத .போலிகளிடம் கேட்காதே அவர்கள் உன்னைப் புதை குழிக்கு அனுப்பிவிடுவார்கள். அதனால் வலிமார்கள் சென்ற இறைஞான கடலில் நீந்தவா அப்பொழுது நீ யார் ? உலகம் எப்படி என்று புரியும்.


​​

♣  ஞானம் என்றால் என்ன?

ஞானம் என்பது தூய உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணம், சிந்தனை, செயல், உறுதி, இதுதான் ஞானமாகும். (உண்மைப் பொருளை உணர்ந்து அறிந்துக் கொள்வதுதான் ஞானமாகும்)


​​

♣  அஞ்ஞானம் என்றால் என்ன?

அஞ்ஞானம் என்பது அறியாமையை அதாவது மனத்தெளிவில்லாமையைக் குறிக்கும். உள் மனதால் உணராமல், இருப்பது போன்று தோன்றுவதை உண்மை என்று உணருவது அஞ்ஞானமாகும்.


​​

♣  மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்பது தூய உள் மனத் தெளிவைக் குறிக்கும் மனம் தெளிவுபெற்று உண்மைப் பொருளை உணர்த்துவது மெய்ஞானமாகும்.

♦ ஆகவே நபிமார்கள், ஸஹாபாபெருமக்கள், இமாம்கள், இறை நேசச் செல்வர்களின் வாழ்க்கை வழிமுறைகளை அறிந்து அதன்படி நம்மை வாழச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக! மேலும் இறைவா! எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக!


​​எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​