MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸுரா யாஸீனின் சிறப்புகள்

  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.  


திர்மிதீ 2812, தாரமி 3282


  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.


ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு  -  தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்.


மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு

அபூதாவுத் 2717, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19842, இப்னு அபீஷைபா 10473



  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.


மஃகில் ரலியல்லாஹு அன்ஹு

முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178