MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மைய்யித்  - ஜனாஸா  தொழுகை 


   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்

அபூசயீதுல் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1316


  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். இறந்து போனவர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் அவர்கள் தாம் செய்த செயல்களின் பக்கம் சென்றடைந்து விட்டனர்.


அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

ஸஹிஹுல் புகாரி 1393




   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப் பின் தொடர்ந்து செல்பவர்கள் , (அதைக் கப்ரில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்.


அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1309




  யார் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன நாயகமே என கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு நன்மை என்றார்கள்.


ஸஹிஹுல் புகாரி 1325




♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். உங்களில் ஒருவர் மவ்த்தாகிவிட்டால் அவரை (நீண்ட நேரம்) தடுத்து வைக்காதீர்கள். அவரது மண்ணறைக்கு விரைந்து எடுத்துச் செல்லுங்கள். இன்னும் அவரது தலைக்கு அருகில் சூரத்துல் பகராவின் ஆரம்பத்தையும் அவரது காலடியில் அதே சூராவில் இறுதி வசனங்களையும் ஓத வேண்டும்.


பைஹகி 7097




♣   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மைய்யத்துக்களை கப்ரில் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரசூலில்லாஹி என்று கூறுவார்கள்.”


இப்னுமாஜா 1597




♣   நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது மகளாரின் அடக்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது கப்ருக்கருகில் உட்கார்ந்திருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். (கடந்த) இரவு வீடுகூடாதவர் உங்களில் யாரும் உண்டா என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நான் இருக்கிறேன் என்றதும் “இந்தக் கப்ரில் இறங்குங்கள் என்றார்கள். உடனே அவர் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்.”


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1342




♣   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (மையத்தை) அடக்கம் செய்யும் போது தங்களின் இருகரங்களாலும் மூன்று முறை பிடிமண் அள்ளிப் போடுவார்கள். மேலும் தங்களின் மகன் இப்றாகீமுடைய கப்ரின் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.


ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு

முஸ்னது அஹ்மது 20862




♣   ஒரு மைய்யித்தை அடக்கம் செய்து முடித்ததும் அங்கு சிறிது நேரம் நின்று “உங்கள் சகோதரருக்காக பாபமன்னிப்பு தேடுங்கள். அவரது ஈமானின் உறுதிக்காக துஆ கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசரிக்கப்படுகிறார்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுவார்கள்.


உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு

அபூதாவுது 3223




♣   ஒரு ஜனாஸா சென்றது (ஒரு ஜனாஸாவை மக்கள் எடுத்துச் சென்றனர்.) அதன் பொருட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (எழுந்து) நின்றனர் (அதைப்பார்த்து) நாங்களும் எழுந்து நின்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அது யூதப்பெண்ணின் ஜனாஸாவாகும் எனக்கூறினோம். (அதற்கவர்கள்) மரணம் என்பது நிச்சயமாக திடுக்க(ம் தரும் செய்தியாகும்)மாகும். ஆகவே ஜனாஸாவை (எடுத்துச் செல்லக்) கண்டால் அதன் நிமித்தம் எழுந்து நில்லுங்கள் எனக்கூறினார்கள்.


ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹ் முஸ்லிம் 472




      ஒரு இஸ்லாமியர் இறந்து அவருடைய ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்விற்கு இணைவைக்காத நாற்பது நபர்கள் கலந்துகொண்டு அந்த மையித்திற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்களானால் அல்லாஹு தஆலா அவர்களின் பரிந்துரையை கண்டிப்பாக அங்கீகரித்துக் கொள்வான் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள்.


ஸஹிஹ் முஸ்லிம் 948,  அபூதாவுத் 3170, மிஷ்காத் 1660




♣    கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒரு மைய்யித்திற்காக முஸ்லிம்களிலிருந்து நூறு பேர் கொண்ட ஒரு கூட்டம் தொழுது அவர்கள் யாவரும் அந்த மைய்யித்திற்காக பரிந்துரை செய்வார்களானால் கண்டிப்பாக அல்லாஹுதஆலா அவர்களின் பரிந்துரையை அங்கீகரித்துக் கொள்வான்.


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

முஸ்லிம் 947,  திர்மிதி 1029,  நஸாஇ 1993, 1994,  முஸ்னத் அஹ்மத் 281,  மிஷ்காத் 1661




♣    ஒரு முஸ்லிமான மைய்யித்திற்கு தொழுகை நடத்தும் நேரத்தில் முஸ்லிம்கள் மூன்று ஸஃப்புகளாக நின்று தொளுவார்களானால் கண்டிப்பாக அல்லாஹுதஆலா அந்த மைய்யித்திற்கு சுவர்க்கத்தை வாஜிபாக்கி (கடமையாக்கி) விடுவான் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள் என்று மாலிக் இப்னு ஹுபைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் மாலிக் இப்னு ஹுபைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஜனாஸா தொழுகை தொழுவதற்காக வந்த மக்கள் குறைவாக இருப்பார்களானால் அவர்களை மூன்று பகுதிகளாக (ஸப்புகளாக) பிரிப்பார்கள். மேலும் எவருக்காக மூன்று ஸப்புகள் தொழுகின்றதோ அவருக்கு அல்லாஹு தஆலா சொர்க்கத்தை வாஜிபாக்கி விடுவான் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள் என்றும் சொல்வார்கள்.


அபூதாவுத்: 3166, திர்மிதி: 1028, இப்னுமாஜா: 1490, ஹாக்கிம்: 1372, மிஷ்காத்: 1687




   கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களின் மகனார் இப்ராஹீம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய கபூரின் மீது தண்ணீர் தெளித்தார்கள். மேலும் அதன் மீது பொடிக்கற்களை வைத்தார்கள்.


ஜஃபர் இப்னு முஹம்மத் (ரலியல்லாஹு அன்ஹு)

மிஷ்காத் 1708, ஷர்ஹுஸ் ஸுன்னா 1515




♣     கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை (மைய்யித்தை அடக்கம் செய்வதற்காக வைத்துக் கொண்டு வரப்படும் பலகையிலிருந்து) மெதுவாக எடுத்தார்கள். மேலும் அவர்களின் கபுரின் மேல் தண்ணீரைத் தெளித்தார்கள்.


அபூராபிஃ (ரலியல்லாஹு அன்ஹு)

இப்னுமாஜா 1551, மிஷ்காத் 1719




♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கபூருக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கபூருக்கு தோல் துருத்தியின் மூலம் தண்ணீர் ஊற்றியவர்கள் பிலால் பின் ரபாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களாகும். தலைமாட்டிளிருந்து துவங்கி கால்மாடு முடியும் வரை ஊற்றினார்கள்.


பைஹகி, மிஷ்காத் 1710




​​மைய்யித்திற்கு கேட்கும் சக்தி உண்டு


♣     நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்.


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1338, ஸஹிஹ் முஸ்லிம் 5115



♣ (பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், ‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள்.’ இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும்,‘ அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’‘ எனக் கூறினார்கள்.


இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1370




மைய்யித்திற்கு பேசும் சக்தி உண்டு


♣    நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :

ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.


அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி 1316




மைய்யித்திற்கு பார்க்கும் சக்தி உண்டு


♣ இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், என் தந்தையார் அவர்களையும், ஸியாரத் செய்வதற்காக செல்வேன். சாதாரணமாக உடை அணிந்த நிலையில். (மற்றவர்களிடம்) அங்கிருப்பது என் கணவரும் என் தந்தையும்தான் என்பேன். ஆனால், அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! என் ஆடைகளை நன்றாக அணிந்த வண்ணமே செல்வேன். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கப்பட்டதின் காரணமாக.


அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா

அஹ்மத் 24480




​​மையத்திற்கு தல்கீன் ஓதுதல் 

​​

♣ மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தோழர்களுள் ஒருவரான அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு வஸிய்யத் செய்துள்ளார்கள். அதாவது ஒரு ஒட்டகத்தை அறுத்து அதன் மாமிசத்தை பங்குவைக்க எந்தளவு நேரம் தேவைப்படுமோ அந்தளவு எனது கப்றுக்குப் பக்கத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், எனது இரட்சகனின் தூதர்கள், அதாவது மலக்குகளிடம் நான் எதனை உரையாட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும். உங்களின் மூலம் நான் மறுகுதல் பெறவும் என்றார்கள்.


​முஸ்லிம், மிஷ்காத் - 149



♣ ஸஹதுப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், தஸ்பீஹும், தக்பீரும் ஓதினார்கள். உடனே ஸஹாபாக்கள் அவைகளை அதிகமாக ஓதினார்கள். பின்பு ஸஹாபாக்கள் காரணத்தை வினவிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு பதிலளித்தார்கள்.


"ஸாலிஹான இந்த நல்லடியாரை கப்ரு நெருக்கிக்கொண்டே இருந்தது. அல்லாஹுதஆலா கப்ருடைய நெருக்கத்தை அகற்றும் வரைக்கும் நான் தஸ்பீஹும், தக்பீரும் ஓதிக்கொண்டே இருந்தேன்" என்றார்கள்.


​அஹ்மத், மிஷ்காத் - 26​​

​​