MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இஃதிகாப்


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.


இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 2025



நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.


அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 2026



  ​நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.


அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 2044



நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள். நான் அதை வாருவேன். இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.


ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

புகாரி 2029



'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார். அதற்கு நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.


இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 2032