MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கப்ர் ஸியாரத்


  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.


இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.


புரைதா ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.



  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ​ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.


தபரானி 3 - 241



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.



  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ​தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்.


ஸஹிஹுல் முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154



  கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.


பைஹகி, மிஷ்காத் - 154



  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள்.


மிஷ்காத் 2 – 407



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.


ஸஹிஹுல் முஸ்லிம், மிஷ்காத் - 154



   நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

மிஷ்காத் 4 – 382



  ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.


மிஷ்காத் – 154



  அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.


முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377



  மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.


அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு

மிஷ்காத் - 149, முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079