MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மறைவான ஞானம்


நபிகள் நாயகம் ﷺ​ அன்னவர்களின் மறைவான ஞானம்

   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

"மண்ணறையின் வேதனைக் குரலை நான் என் செவிகளால் கேட்பதே போன்று நீங்களும் கேட்பீர்களாயின், இனிமேல் எந்த ஜனாசாவையும் நல்லடக்கம் செய்யாதிருந்து விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன். அத்தகைய அச்சம் எனக்கு இல்லையாயின் உங்களுக்கும் புதைகுழிகளில் இருப்பவர்களின் அவலக்குரலைச் செவியேற்க வைக்குமாறு பிரார்த்தனை செய்திருப்பேன்" என உத்தம நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உரைத்தார்கள்.


ஹழ்ரத் ஸைத் பின் ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு)

முஸ்லிம், மிஷ்காத் - 25



  ஒரு சமயம் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் எங்களுக்கு அறிவுரை பகர்ந்துகொண்டிருக்கும்போது சிருஷ்டிகளின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விடயங்களையும் கூறிக்காட்டினர்கள். அவற்றைப் பாடமிட்டவர்கள் பாடமிட்டுக் கொண்டனர். ஏனையோர் மறந்துவிட்டனர்.


ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி, மிஷ்காத் - 506



நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு வரை) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார்.

ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 3192


நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, 'நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்று கூறினார்கள்.


ஹழ்ரத் உஸாமா (ரலியல்லாஹு அன்ஹு)

புகாரி 1878


​​

வலிமார்களின் மறைவான ஞானம்


♣  மரணத்தருவாயிலிருந்த அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “ஆயிஷாவே! நான் விட்டு செல்கின்ற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள்.  


​​நான் கேட்டேன்: “எனது அருமை தந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே எனக்கு உள்ளார். இன்னொரு சகோதரி யார்? (ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவே தான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்).

அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள்.


அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

முஅத்தா எண் 1242, பைஹகீ எண் 12267



♣   திண்ணமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘யா சாரியா! அல் ஜபல்!’ (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்) என சப்தமிட்டார்கள்.

பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது ‘யா சாரியா அல் ஜபல்’ என்று சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கி கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.


ஹழ்ரத் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல் – பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) – 2655​​​​​​


​​​