MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிமார்களின் சிறப்புகள்


♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.


அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத் பக்கம் 120



♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்ர் அருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதை பார்த்தேன்.


ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹ் முஸ்லிம் 2 -268



♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபியவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.


ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹ் முஸ்லிம் 1 – 96



♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூர்வது பாவபரிகாரமாகும்.


அல்ஜாமிஉஸ் ஸகீர் 2 - 299



♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

ரசூல்மார்களும் நபிமார்களும் தங்களின் கப்ர் அறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்.


ஜாமிஉஸ் ஸகீர் 3089



♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

உங்கள் நாட்களிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை ஆகும். ஆதம் அலைஹிஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதும், மரணித்ததும், மேலும் சூர் ஊதப்படுவதும், பூமியில் வாழும் மக்களெல்லாம் மரணித்து விடுவதும் வெள்ளிக்கிழமையில் தான். ஆகவே அந்நாளில் என்மீது அதிகம் அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஸஹாபாக்கள் கேட்டனர், "யா ரசூலுல்லாஹ்! ஸலவாத் உங்கள் மீது எவ்வாறு எடுத்துக்காட்டப்படும்? தாங்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுவீர்களே? அதற்கு கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்களின் உடலை மண் (தின்பதி)னை விட்டு அல்லாஹ் ஹராம் ஆக்கிவிட்டான்.

அபூதாவுத் - 1047 , நசாயி - 1666 , இப்னு ஹிப்பான் - 910 , ஹாகிம் - 1029

​​