MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸுபி நடனம்


ஹபஷிகளான தோழர் பெருமக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடையே ஆடி அசைந்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஸாலிஹான நல்லடியாராகும் என அவர்களுடைய பாஷையில் பேசி கொள்வார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள். அதற்கு "முகம்மதுன் அப்துன் ஸாலிகூன் " என கூறுகின்றனர் என அவர்கள் விடையளித்தனர்.


முஸ்னத் அஹ்மத் - 3:152



  நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களை பார்த்திருக்கிறேன் . அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. அவர்கள் இரவு காலங்களில் வணக்கம் புரிந்தவர்களாகும். பயணம் செய்தவர்களை போன்று அவர்கள் களைப்படைந்தவர்களாக காலையில் காட்சி அளிப்பார்கள். பொழுது புலர்ந்து விட்டால் புயல் வீசும் போது மரங்கள் ஆடி அசைவது போல் அவர்களும் ஆடி அசைந்து திக்ர் செய்வார்கள். இன்னும் அவர்கள் கண்களில் இருந்து வழிந்தோடும் கண்ணீர் அவர்கள் ஆடைகளை எல்லாம் நனைத்து விடும்" என்று சொன்னார்கள்.


இமாம் இப்னு கதீரின் அல் பிதாயா வல் நிகாயா பாகம்-8 பக்கம் -6,

இமாம் அபூ நுஅயிமின் - ஹில்யத் அல் அவ்லியா


​​