MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சுத்தமின்றி குர்ஆனை தொட கூடாது


   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.


ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு

ஹாகிம் - 6066, தாரகுத்னீ - 386, தப்ரானி (கபீர்) - 3067



♣  இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மொழிந்தார்கள். 

பரிசுத்தமானவர் தான் குர்ஆனைத் தொட வேண்டும்.


அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

தாரகுத்னீ - 383, பைஹகீ -377, தப்ரானி(கபீர்)- 13049, தப்ரானி(ஸஙீர்)- 1160



  நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக்கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொடவேண்டும்.


உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு

தப்ரானி (கபீர்) - 8255



  இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இருந்தது. தூய்மையான நிலையில்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.


அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

முஅத்தா - 466, தாரமீ - 2195, பைஹகீ - 376