MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தொழுகை


  இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலைநிறுத்துவது. 3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றேhர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.

ஸஹீஹுல் புகாரி - 08.



  அம்ரு இப்னு ஷுஜபு (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள்.

அபூதாவுத் , அஹ்மத்



  உம்முஃபர்வா (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அமல்களில் சிறந்தது எது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.

திர்மிதி, ஹாகிம், அபூதாவுத்



  இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும்.

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி