MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
 வஹாபிஸ மற்றும் ஏனைய பித்னாக்கள்
வஹாபிஸ மற்றும் ஏனைய பித்னாக்கள்
♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனஙகளை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி) லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களுடைய இறை நம்பிக்கை அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில் அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களை கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி - 3611, முஸ்லிம் 1 - 342
♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கடைசி காலத்தில் பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும், உங்களின் மூதாதையர்களும் கேட்டிராத விஷயங்களையெல்லாம் உங்களிடத்தில் கொண்டு வருவார்கள். அவர்களைப் பற்றி (உங்களிடம்) எச்சரிக்கை செய்கிறேன். (எனது எச்சரிக்கையின் படி அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டீர்களானால்) அவர்கள் உங்களை வழி கெடுத்துவிட முடியாது. உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவும் முடியாது.
முஸ்லிம் 07, முஸ்னத் அஹ்மத் 2-349, மிஷ்காத் 28
♣ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
இந்த உம்மத்தைச் சார்ந்த பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க (சபிக்க) ஆரம்பித்தார்களானால் கியாமத்து நாளை எதிர்பாருங்கள்.
திர்மிதி - 221 மிஷ்காத் - 470