MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - அகீதா (ஈமான்)

அகீதா - இஸ்லாமிய கொள்கை விளக்கம்


ஈமான்


ஈமான் என்னும் அரபி சொல்லின் அர்த்தம் நம்பிக்கை என்பதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் ஈமான் என்பது ஆறு முக்கிய விடயங்களை உள்ளத்தால் பரிப்பூரணமாக ஏற்று நம்பிக்கை கொள்வதை குறிக்கும்.


அவையாவன:

* அல்லாஹ்வை நம்புதல்

* மலக்குமார்களை (வானவர்களை) நம்புதல்

* வேதங்களை நம்புதல்

* நபிமார்களை (இறைத்தூதர்களை) நம்புதல்

* இறுதி நாளை நம்புதல்

* நன்மை, தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடக்கும் என்னும் விதியை நம்புதல்


இந்த ஆறு விடயங்களையும் ஒருவன் நம்பிக்கை கொண்டால் அவன் முஸ்லிமாக கருதப்படுவான். அவற்றில் ஒன்றையேனும் ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் முஸ்லிம் அல்ல என்பதே இஸ்லாமிய அடிப்படை கொள்கையாகும்.



அகீதா


அகீதா என்பது மாறுப்பட்ட பல்வேறு நம்பிக்கைகளுக்கு மத்தியிலும் கொள்கைகளுக்கு மத்தியிலும் சரியான கொள்கையை நம்பிக்கை கொண்டு பின்பற்றுதலை குறிக்கும்.


உதாரணமாக – ஈமானின் முதல் அம்சம் அல்லாஹ்வை நம்புதல் ஆகும். அந்த அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையானது இறைவனுக்கு உடலோ உருவமோ இல்லை என்பதாகும். ஆனால், ஒரு முஸ்லிம் இறைவனுக்கு உருவம் உண்டு, உடல் உண்டு என்று நம்பிக்கை கொண்டால், பெயரளவில் அவன் முஸ்லிமாக இருந்தாலும் அவன் உண்மை முஸ்லிமாக கருதப்பட மாட்டான்.