MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

தொகுப்பு:  அப்துர் ரஹீம் முஹம்மத் ஜௌபர்  (ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்)​​


​ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்த ஸஹாபா பெருமக்களில் பலரை அன்ஸாரியீன்களான ஸஹாபாக்கள், அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இன்னும் சில ஸஹாபாக்கள், எங்கும் போகாமல் ஆதி தூதர் அருமை நபி ﷺ அன்னவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே ஒரு மேடை அமைத்து அதிலேயே தங்கி விட்டார்கள்.


​​இந்த மேடையே இஸ்லாமிய உலகின் முதலாவது பல்கலைக்கழகம். அதன் அருள் மிகுந்த ஆசானாக அதிபராக ஜோதி நபி ﷺ அன்னவர்கள் திகழ்ந்தார்கள்.

எத்தனை வறுமை வாட்டிய போதும் இவர்கள் வாடிவிடவில்லை. பசியோடு பலநாள் இருந்தார்கள். உடையில்லாமல் இடுப்பில் மாத்திரம் ஒரு துண்டை அணிந்தவர்களாக இருந்தார்கள். சிலர் முன்னால் மாத்திரம் மறைத்து பின்புறத்தை காட்டாமல் இருந்தார்கள்.

ஏதாவது உணவு கிடைத்தால் மிகவும் பசியோடு இருப்பவர்களுக்கு முன் உரிமை கொடுத்து அவர்களை உண்ண வைத்தார்கள். காருண்ய மாநபி ﷺ அன்னவர்களுக்கு ஏதாவது உண்ண கிடைத்தால் அதை இவர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் இவ்வாறு இருந்தார்கள். ஸையுதுனா அபூஹுரைரா, ஸையுதுனா அபூதர் ரலியல்லாஹு அன்ஹும் போன்றவர்களெல்லாம் இதில் அடங்குவார்கள்.

இவர்கள் தொழில் ஏதும் செய்து செல்வத்தை தேடவில்லை. சிலர் விறகு வெட்டி விற்பனை செய்து சிறிது செல்வம் தேடினார்கள். அது அவர்களுக்கு போதியதாக இருக்கவில்லை.

அறிவு ஞானத்தைக் கற்பதற்காகவே இத்தனை தியாகங்களையும் இவர்கள் செய்தார்கள். இஸ்லாம் பிற்காலத்தில் பல பாக்கியங்களை இவர்களால் பெற்றது.

அண்ணலார் ﷺ அன்னவர்களின் அருகிருந்தே பல அறிவு ஞானங்களை இவர்கள் கற்றார்கள். நற்குண நல் இயல்புகளைக் கற்றார்கள். இலட்சகணக்கான ஹதீஸ்களை மனனம் செய்து அறிவித்தார்கள்.

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என கூறப்படும். இவர்களாலேயே சூபி ஞானகலை உருவாகி பிற்காலத்தில் ஏராளமான ஸுபி ஞானவான்கள் உருவாகினார்கள்.

இவர்கள் இஸ்லாமிய ஆத்ம ஞானத்தை உலகெங்கும் எடுத்து சென்று இஸ்லாத்தின் யதார்த்தத்தை போதிக்கத் தொடங்கினார்கள். இதனால் இஸ்லாம் திக்கெல்லாம் பரவியது. அந்த திண்ணை தோழர்கள் வாழ்ந்த அருள்மிகுந்த மேடையே இது.

உத்தம மாநபி ﷺ அன்னவர்கள் இதில் தன் தஹுஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றி உள்ளார்கள். இன்றும் கூட மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் இடம் இது.


எழுதியவர்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜௌபர் (ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்)​​​​


​​

மெயில் ஒப் இஸ்லாம்:

பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து தீனை ஹயாத்தாக்கியவர்கள் தான் உண்மை தௌஹீத்வாதிகளான ஸஹாபாக்கள், உண்மை ஸுபி ஞானிகளான ஸஹாபாக்கள், உண்மை தீன்தாரிகளான ஸஹாபாக்கள்.


ஆனால் இன்று வெளிநாட்டு பணத்திற்கு வயிற்றை வளர்க்கும் கூட்டங்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட பெயர் தௌஹீத்வாதி. கூட்ட கூட்டமாக குந்தி உட்கார்ந்து வயிற்றை வளர்க்கும் போலிகள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட பெயர் தீன்தாரி. அதேபோன்று வருடத்திற்கு ஒரு முறை வயிற்றை நிரப்பி விட்டு தங்களுக்கு தாங்களே வைத்துகொண்ட பெயர் ஸுfபிவாதி அல்லது தரீக்காவாதி.


இத்தகைய போலிகளை விட்டும் ஒதுங்கி உண்மை தௌஹீத்வாதிகளான, உண்மை ஸுfபிகளான, உண்மை தீன்தாரிகளான ஸஹாபாக்கள், தாபிஈன்கள், ஸுபியாக்கள், அவ்லியாக்கள் சென்ற ஞான வழியில் செல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​