MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒட்டக சவாரியும்


பாலகர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய அருமை பாட்டனார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒரு ஒட்டகதினை கேட்டார்கள். நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய பேரப்பிள்ளை கேட்டுக் கொண்டதினால் தன்னுடைய இரு உள்ளங்கைகளையும் இரு முட்டிகால்களையும் தரையில் வைத்து குனிந்து கொண்டு இமாம் ஹுசைன் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தன் மீது ஏறி தோள்பட்டைகளில் ஏறி அமர சொன்னார்கள்.


பாலகர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ மகிழ்ச்சி சிரிப்புடன் தன்னுடைய பாட்டனாரின் மீது ஏறி அமர்ந்தார்கள். சாதாரண ஒட்டகங்களின் மேல் காணப்படும் சாட்டையை இங்கு நான் காணவில்லை என் பாட்டனார் அவர்களே என்று பாலகர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற கேட்டு. கண்மணி நாயகமோ தன்னுடைய அருள் மின்னும் தலைமுடிகளை பின்பக்கத்தில் பிடித்து கொள்ளுமாறு கூறினார்கள்.


இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ தன்னுடைய பிஞ்சு கைகளினால் பெருமானாரின் தலைமுடிகளை பிடித்து கொண்டு பெருமானாரின் தலையை அசைத்தார்கள். பாட்டனாரே மதீனத்து ஒட்டகைகளை போல் குரல் கொடுங்கள் என்று இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க..... எங்கள் கண்மணி நாயகமோ ஒட்டகைகளை போன்று குரல் ஒலித்தார்கள்.


சற்று நேரத்தில் அங்கு வருகை புரிந்த ஹஸ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோ. மாஷா அல்லாஹ் ! நாயகமே இது போன்ற ஒரு பயணத்தை இந்த கண்கள் இது வரை கண்டதில்லை என்று கூறலானார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ உமர் (ரழியள்ளஹு அன்ஹு) அவர்களே... பயணத்தை பார்க்காதீர்கள் பயணம் செய்பவரை (இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு) காணுங்கள்.



Source: Excellence of Imam Hussain