MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தமிழ் பகுதி - இமாம்கள் வரலாறு - இமாம் இப்னு மாஜா ரலியல்லாஹு அன்ஹு

இமாம் இப்னு மாஜா ரலியல்லாஹு அன்ஹு


இவர்களின் முழுப்பெயர் அபூ அப்துல்லாஹ் முஹம்மதிப்னு யஸீத் அல் கஸ்வீனி (ரலியல்லாஹு அன்ஹு). இப்னு மாஜா என இவர்கள் அழைக்கப்படுவதற்கான காரணம், சிலர் கூற்றின்படி, இவர்களின் தாயாரின் பெயர் மாஜா என்பதனாலாகும். இப்னு மாஜா என்பது மாஜாவின் மகன். வேறு விதம் சொல்வாருமுளர். இவர்களின் பெயர் முஹம்மத். தந்தையின் பெயர் யஸீத். அபூ அப்துல்லாஹ் என்பது புனைப் பெயர்.


இவர்கள் மஃமூன் அரசரின் காலத்தில் 209 இல் கஸ்வீன் நகரில் பிறந்தார்கள். ஊரில் ஆரம்பக் கல்வி கற்ற பின்னர் பஸரா, கூபா, எகிப்து, மக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசேஷமாய் ஹதீஸுக் கலையிலும் பொதுவாக ஏனைய கல்விகளிலும் தேர்ச்சியுற்றனர். உண்மை ஹதீஸ்களைத் திரட்டப் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். “ஸுனனு இப்னு மாஜா” எனும் ஆறாவது பரிசுத்த ஹதீஸ்

கிரந்தம் இவர்களால் இயற்றப்பெற்றதாகும். இதில் 4000 ஹதீஸ்கள் அடங்கியிருக்கின்றன.

இக்கிரந்தமா அல்லது இமாம் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ‘முவத்தஃ’ எனும்

​கிரந்தமா ஆறாவதாய்க் கருதப்பட வேண்டுமெனும் விஷயத்தில் சில அறிஞர்களிடத்தில்

​அபிப்பிராய பேதங்களுண்டு.


இவர்கள் ஹிஜ்ரி 273 இல் ரமழான் 22 இல் தங்களின் 64 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள்.


அல்லாஹ் இவர்களை பொருந்தி கொள்வானாக