MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள் - பகுதி - 4  அல் –ஆதாப் - நடைமுறை ஒழுக்கங்கள்


இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.


மலசல கூடத்துக்கு செல்லும் போது கவனிக்கப்படவேண்டியவைகளும் ஸுன்னத்தான ஒழுங்கு முறைகளும்


1. தலையை மூடிக்கொள்ள வேண்டும்.


2. காலில் பாதணி அணிந்து கொள்ள வேண்டும்.


3. அல்லாஹ் மலக்குகள் நபிமார்களின் திருநாமங்கள் எழுதப்பட்டவைகள் மேலும் குர்ஆன் ஹதீஸ்கள் போன்றவற்றை தூரமாக்கிக் கொள்ளல். மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தால் உட்பக்கமாக்கி அதனை கையால் பொத்திக் கொள்ள வேண்டும்.


4. நுழைய முன் பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவேண்டும்.


பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஹூது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸி


அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்


5. இடது காலை முதலில் உள்ளே வைத்து நுழைதல்.


6. உட்கார்வதற்கு நெருங்கிய பின் துணியை உயர்த்துவதும் எழுந்து நிற்கும் முன்பே துணியை விட்டுவிடுவதும் ஏற்றமாகும்.


7. உட்காரும்போது வலது காலை நிறுத்தி இடதுபக்கம் சாய்ந்து உட்காரவேண்டும்.


8. சுத்தம் செய்வதற்கு முன் இடது கையை நீரில் நனைத்துக் கொண்டு அதேகரத்தால் நன்றாக சுத்தமாகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.


9. வெளியே வரும்போது வலது காலை வெளியே வைத்து வந்தபின் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.


குப்ரானகல்ஹம்துலில்லாஹி இல்லத்தி அத்ஹப அணியல் அதா வஆபனி


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: தபராணி, இப்னு ஸனீ


சுத்தம் செய்து வெளியே வந்தபின் கையை மண்ணுடன் சேர்த்துக் கழுவவேண்டும்.



தவிர்த்துக் கொள்ளவேண்டிய விடயங்கள்


1. புற்றுகள், கடினமான இடங்கள், மக்களின் உள்ளாசத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், நடைபாதை, பழம்தரும் மரங்களுக்குக் கீழ், மையவாடி, நீர் தேங்கிநிற்கும் இடங்கள் சிறிய அளவில் ஓடும் நீர் இவைப்போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது கூடாது.


2. காற்றடிக்கும் திசையை நோக்கி கழித்தல் கூடாது.


3. அல்லாஹ்வின் திருநாமங்கள் போன்று சங்கையானவைகள், உணவுப்பொருட்கள், எலும்புகள் என்பவற்றின்மீது சிறுநீர் கழிப்பது ஹராமானதாகும்.


4. தெறித்து விடும் என்ற பயம் இருந்தால் அவ்விடத்தில் சுத்தம் செய்தல் கூடாது.


5. நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது கூடாது.


6. திறந்த வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கவோ, பின் நோக்கவோ கூடாது.


7. திறந்தவெளியில் மலசலம் கழிக்கும் அவசியம் ஏற்பட்டால் ஒரு திரையை இட்டுக்கொள்ளல் சிறந்ததாகும்.



மலசல கூடத்தினுள் இருக்கும்போது தவிர்த்துக் கொள்ள வேண்டியவை:


1. பேசவும் கூடாது, யாருடைய பேச்சுக்குப் பதிலளிக்கவும் கூடாது.


2. அத்தானுக்கும், ஸலவாத்துக்கும் பதிலளிக்கக் கூடாது.


3. அதனுள் எதனையும் சிந்திக்கக் கூடாது.


4. தன்னுடைய அபத்தையோ, மலத்தையோ பார்க்கக் கூடாது.


5. எச்சில் துப்பக் கூடாது.



எச்சில் துப்பும் போது


1. முன்பக்கமாவோ, அல்லது வலது மக்கமாவோ, அல்லது கிப்லாவை நோக்கியோ துப்பக் கூடாது.


2. இடது பக்கம் குனிந்து துப்பவேண்டும்.


3. துப்பியதை மூடிவிடவேண்டும்.



நகம் வெட்டும் ஒழுங்குகள்


1. வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னிளிருந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குச் செல்லும் வரையிலான நேர இடைவெளியில் நகம வெட்டிக்கொள்வது சுன்னத்தாகும்.


2. கைவிரல் நகங்களை வெட்டும்போது வலது கலிமா விரலில் இருந்து ஆரம்பித்து வலது சின்னி விரலில் முடித்து பின் இடது சின்னவிரலிலிருந்து ஆரம்பித்து வலது பெருவிரலில் முடிக்க வேண்டும்.


3. காலில் வலதுசின்னி விரலில் ஆரம்பித்து ஒழுங்குமுரையாக வெட்டி இடது சின்னி விரலில் முடிக்க வேண்டும்.


4. வெட்டியா நகக் கழிவுகளைப் புதைக்க வேண்டும்.


5. நகம் வெட்டி முடிந்ததும் உடனடியாக கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும்.

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com