MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள் - பகுதி - 3 அல் –ஆதாப் - நடைமுறை ஒழுக்கங்கள்


இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.



நித்திரைக்குச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சுன்னத்தான முறைகள்


1. நித்திரைக்குச் செல்லும்முன் முதலில் வுழுச்செய்ய வேண்டும். முடியுமானால் வுழுவுடைய காணிக்கை இரண்டு ரகஅத்துக்கள் தொழுது கொள்ளவேண்டும்.


2. தூங்கும் விரிப்பை வெளியில் நின்று நன்றாக உதறிக் கொள்ள வேண்டும்.


3. சுவரின் ஓரம் அல்லாமலும், கிப்லாவின் பக்கம் காலை நீட்ட்டாமலும் விரிப்பை விரிக்க வேண்டும்.


4. விரிப்பின் மேலே அமர்ந்து அன்றாடம் செய்த அமல்களைச் செய்தோமா என்று சிந்தித்து விடுப்பட்டதில் தற்போது செய்ய முடிந்ததை செய்தல் வேண்டும்.


5. பின்னர்:

‘ஸுப்ஹானல்லாஹ்’ 33 தடவையும்

‘அல்ஹம்துலில்லாஹ்’ 33 தடவையும்

‘அல்லாஹு அக்பர்’ 34 தடவையும்

ஓதி இரு கைகளையும் துஆக் கேட்பது போல் ஒன்று சேர்த்து

குல் யா அய்யுஹல் காfபிரூன், குல் உவல்லாஹு அஹத், குல் அஹூது பிரப்பின் நாஸ், குல் அஹூது பிரப்பில் fபலக்


ஆகிய நான்கு சூராக்களையும் ஓதி இரு உள்ளங்கைகளிலும் ஊத்தி உடம்பில் தலை தொடக்கம் கால்வரை முடியுமான அளவு தடவிக் கொள்ளல் வேண்டும்.

(அபத்தையும், உள்ளங்கால்களையும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்)


6. தூங்கும் போது வலது கையை வலது கன்னத்தில் வைத்து இடது கையை இடது தொடையின்மீது வைத்து கீழ்வரும் துஆவை ஓதவேண்டும்.


அல்லாஹும்ம கினி அzஸாபக யவ்ம துப்அzஸு இபாதக


அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூதாவுத்


7. நித்திரையின் போது நல்ல கனவுகளைக் கண்டுவிட்டால் அது அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் உள்ளதென்பதால் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்ளல். நித்திரை விட்டெழுந்தபின் அந்தக் கனவை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால் கேட்ட கனவுகளைக் கண்டுவிட்டால் அது ஷைத்தானின் புறத்தில் நின்றுமுள்ளது என்பதால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல் வேண்டும். அதனை யாரிடமும் சொல்லுவது கூடாது. அத்தோடு தனது இடப்பக்கம் துப்புவது போன்று மூன்று தடவைகள் சைகைசெய்து கொள்ளவேண்டும். மேலும் தனது விலாப் பக்கத்தி மருபுறம்திருப்பி தூங்கவேண்டும். முடியுமானால் எழுந்து இரண்டு ரகஅத்துக்கள் தொழுதுவிட்டு கீழேவரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்.


அல்லாஹும்ம இன்னி அஹூது பிக மின் அமலி ஷைத்தானி வஸையிஹதில் அஹ்லமி

அறிவிப்பவர்: இப்னு ஸபர்


8. யாராவது நம்மிடம் வந்து கனவு கண்டேன் என்று கூறினால் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்.


கைரன் ரஅய்த்த வகைரன் யகூனு கைரன் தலகஹூ வஷர்ரன் தவக்காஹூ கைரன் லனா வஷர்ரன் அலா அஃதாயினா வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்


ஆதாரம்: இப்னு ஸனீ


9. தூக்கத்தை விட்டு எழுந்தவுடன் ஓத வேண்டிய துஆ


அல்ஹம்துலில்லாஹி இல்லத்தீ அஹ்யானா பஹ்த மா அமாதனா வ இலைஹி நுஷூர்.


ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்



இந்த தஸ்பீஹ்களை ஓதிக்கொள்ள வேண்டும்.


அல்லாஹு அக்பர் – 10 தடவைகள்


அல்ஹம்துலில்லாஹ் - 10 தடவைகள்


ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி - 10 தடவைகள்


ஸுப்ஹானல் மலிகுல் குத்தூஸ் - 10 தடவைகள்


அஸ்தக்பிருல்லாஹ் - 10 தடவைகள்


லா இலாஹா இல்லல்லாஹ் - 10 தடவைகள்


அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் லயகி துன்யா வல யகி யவ்மில் கியாமதி - 10 தடவைகள்

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com