MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மனிதன் அவ்லியாவாக மாறுவதற்கான உள்ளத்தின் நிலைகள்


பேராசிரியர் கலாநிதி  முஜீப்  ரஹ்மான் Phd.


சாதாரண மனிதன் அவ்லியாவாக மாறுவதற்கான உள்ளத்தின் நிலைகள் முக்கியமானவையாகும்.

முதலாவது தபக்கதுஸ் ஸுதுர். இது இஸ்லாம் உருவாகும் மனதின் முதல் நிலை. அதாவது கலிமாவை விளங்கியறிவது.

இரண்டாவது தபக்கத்துல் கல்பி. அதாவது ஈமான் உருவாகும் நிலை. இதில் அல்லாஹ்வை பற்றிய ஞானம் கிடைக்கும்.

மூன்றாவது தபக்கத்துஸ் ஸிஹாப். இது இறைவனின் மேல் கொண்ட இஷ்க்காக (காதல்) உருவாகும் நிலை ஆகும்.

நான்காவது தபக்கத்துல் புஆத் அதாவது முஸாஹிதா உருவாகும் நிலையில் கஸ்பு என்னும் ஞான வெளிப்பாடு தோன்றும்.

ஐந்தாவது தபக்கத்து முஹப்பதுல் கல்பி. இது அல்லாஹ்வுடைய முஹப்பத்துக்குரிய நிலைமை ஆகும். இதில் இம்மை, மறுமை பற்றிய எவ்வித மருட்சியும் இருக்காது.

ஆறாவதாக தபக்கதுஸ் சுவைதா அதாவது இல்முல் லதுன்னி என்ற ஞான கடாட்சம் உருவாகும் நிலை.

ஏழாவதாக தபக்கத்துல் இஸ்ஸத்தி இந்நிலையை அடைந்தவர்கள் சம்பூர்ணமான காமிலே இன்சானாக இருப்பதுடன் அல்லாஹ்வின் வஹ்தாநியத்தை அடைந்த அவ்லியாக்களாக இருப்பார்கள்.

அல்லாஹ்விடன் முறையிட்டால் இந்த அவ்லியாக்கள் தான் இறைவன் புறத்திலிருந்து உதவுவார்கள். இந்த உள்ளத்தின் நிலைகளை அடைய பயிற்சி முக்கியம்.அது ஞான குருவால் மட்டும் தான் உருவாகும்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

மனிதனும் மகானும்


​மனிதன் என்றால் யார்? மகான் என்றால் யார்? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.