MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மனிதனும் மகானும் 


அப்துர் ரஹீம் முஹம்மத் ஜௌபர்

*மனிதன் மண்ணில் வாழ்கின்றான்

மகான் விண்ணில் வாழ்கின்றார்


​*மனிதன் படைப்பினங்களால் ஈர்க்கப்படுகிறான்

மகான் படைத்தவனால் ஈர்க்கப்படுகிறார்


​*மனிதன் எண்ணங்களின் அடிமை

மகானுக்கு எண்ணங்கள் அடிமை


​*(இரையை) உண்டு வாழ்வது மனிதனின் இலட்சியம்

(இறையை) கண்டு வாழ்வது மகானின் இலட்சியம்


​*மனிதன் வாழ்நாளை உணவில் கழிக்கிறான்

மகான் வாழ்நாளை உணர்வால் கழிக்கின்றார்


​*மனிதன் நாவினால் அழிகின்றான்

மகான் உள்ளத்தால் உயர்கின்றார்


​*மனிதன் முகத்தால் காணுகின்றான்

மகான் அகத்தால் அறிகின்றார்


​*மனிதனின் வாழ்வு ஒரு கனவு

மகானின் கனவும் ஒரு வாழ்வு


​*மனிதன் தனக்காக வாழ்கின்றான்

மகான் மற்றவருக்காக வாழ்கின்றார்


​*மனிதனின் உறக்கம் ஒரு மரணம்

மகானின் மரணம் ஓர் உறக்கம்


​*மனிதன் மரணத்தை வெறுக்கின்றான்

மகான் மரணத்தை நேசிக்கின்றார்


​*மனிதனின் மரணம் தண்டனையின் தொடக்கம்

மகானின் மரணம் மகிழச்சியின் தொடக்கம்


​*மனிதனின் புதைக்குழி நெருப்புக் குண்டம்

மகானின் புதைக்குழி ஒரு பூஞ்சோலை


​*மனிதன் நரகை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறான்

மகானை நோக்கி சொர்க்கம் அழைத்து வரப்படுகிறது

‎செய்யத் முஹ்யித்தீன் சாஹிப்‬


சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக பொன்மொழிகள்


ஆன்மீக பெரியார்களின் விலை மதிப்பில்லா சூபிச தத்துவங்கள், கருத்துகள் மற்றும் பொன்மொழிகள். கண்டிப்பாக வாசித்து பயன்பெறுங்கள்.


பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​