MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மனிதர்களுக்கு மரணம் ஒரு முறை

எழுதியவர்:  அஸீஸ் மரைக்கா காதிரி


மனிதர்களுக்கு மரணம் ஒரு முறை தான் ஆனால் மாமனிதர்களுக்கு மரணம் பல முறை நிகழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டு இருப்பார்கள்.


​​மனிதன் முதல் பிறப்பு எடுத்து சில காலம் கழித்து ஞானகுரு ஒருவரிடம் ஞானதீட்சை (பைஅத்) பெறுகிறான். இது அவனுடைய இரண்டாம் பிறப்பு ஆகும். இந்த பிறப்பு எடுத்ததும் இவனுடைய மனதை ஞானகுரு ஆக்கிரமிப்பு செய்கிறார். 

அன்று முதல் இவன் ஏதாவது ஆகாத ஒன்றை செய்ய நாடும்போது குறுக்கே ஒரு எண்ணம் புகுந்து அதை செய்யாமல் தடத்து விடும். இதுவே ஞான குருவின் ஊடுருவல்.

இந்த நிலையில் இவனுடைய சுயம் மரணிக்கிறது. ஒரு ஞானகுருவின் கட்டளைக்கு தன்னைத்தானே கீழ்ப்படிய செய்ததும் தானென்னும் அகங்காரம் மரணிக்கிறது. நாளடைவில் ஞானகுருவின் உபதேசத்தைக் கேட்க கேட்க உலகப் பற்று மரணிக்கிறது. இவனுக்கு உண்மையான விபரங்கள் அறிய அறிய இவன் முன்பு தெரிந்து வைத்திருந்த மாற்றமான கருத்துக்கள் ஒன்றின் பின் ஒன்றாக மரணிக்கிறது.


​​ஞானகுருவின் கட்டளைகளை இவன் முறையாக செய்து வந்தால் ஞானகுருவின் தன்மை இவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிக்கும். இந்நிலையில் இவனிடம் இருந்த ஆசை மரணிக்கிறது. மிதமிஞ்சிய உணவு, மிதமிஞ்சிய தூக்கம், மிதமிஞ்சிய புணர்ச்சி, மிதமிஞ்சிய கோபம் இவைகளை முறைப்படுத்தும் போது இவனிடம் (அம்மாரா) என்ற முதல் நப்ஸ் மரணிக்கிறது. இது சிலருக்கு மிக கஷ்டமானது. ஞானகுரு இருந்தாலும் நம்மிடம் கட்டுப்பாடு வேண்டும்.


​​அடுத்து இரண்டாம் நப்ஸ் (லவ்வாமா). இதில் இருப்பது மதில் மேல் பூனை போன்றது. இதிலிருந்து கீழேயும் வரலாம் மேலேயும் போகலாம். இதைக்கடந்து விட்டால் மூன்றாம் நப்ஸ் (முல்ஹிமா) இதற்கு வந்துவிட்டால் இறங்குவதில்லை இனி ஏற்றம்தான்.

இப்படி தனக்குள் பல மரணங்களை கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்ளே மாமனிதர்கள். இவனுடைய நிலை உயரும் போது ஆரம்பத்தில் அறிவுக்கூர்மை அவசியமாக இருக்கும். நல்ல நிலை வரும்போது ஆரம்பத்தில் அவசியமான அறிவு புலன்களை ஒடுக்குவதற்கு அறிவு இடையூராக இருக்கும் இதற்கு அதிக அப்பியாசம் தேவை.

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​

நப்ஸின் வகைகளும், அவைகளின் தன்மைகளும்


​​மனிதர்களின் மனம் எனும் நfப்ஸின் வகைகளையும் அவைகளின் தன்மைகளையும் பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.