MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மனிதர்களும்  மாடமாளிகைகளும்


ஒரு நாள் ஸெய்யதுனா ஈஸா (அலைஹிஸலாம்) அவர்கள் ஒரு மலை மீது ஏறி சென்றார்கள். அங்கு ஒருவர் வெயிலில் தொழுது கொண்டு இருப்பதை கண்டனர். அவர் தொழுததும் அவரிடம் சென்று "தாங்கள் வெயிலையும் மழையையும் விட்டு தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு வீட்டை அமைத்து கொள்ளக்கூடாதா?" என்று கேட்டனர்.


அதற்கு அவர் "இறைவனின் தூதரே, நான் எழுநூறு வயதுக்கு மேல் வாழமாட்டேன் என்று பல நபிமார்கள் என்னிடம் கூறி உள்ளனர். இத்தனை குறைந்த வயதை பெற்றுள்ள நான் வீட்டை கட்டுவதில் என் வாழ்நாளை செலவு செய்ய விரும்பவில்லை" என்று கூறினார்.


அப்போது ஸெய்யதுனா ஈஸா (அலைஹிஸலாம்) அவர்கள், அவரை நோக்கி "இதை விட ஆச்சர்யமான ஒரு விடயத்தை சொல்லவா? என்று கேட்டார்கள்.


"என்ன அது" என்று வியப்புடன் கேட்டார் அந்த மனிதர்.


"உலகின் இறுதி காலத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயது கூட வாழ மாட்டார்கள். ஆனால் அவர்களோ ஆயிரம் வருடங்கள் வாழ்வது போல் எண்ணிக்கொண்டு மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டுவதில் தமது வாழ் நாளை செலவு செய்வார்கள்" என்றனர் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்)


அப்போது அந்த மனிதர் "அச்சமயம் நான் உயிரோடு இருப்பின் நான் என் வாணாளை ஒரே சஜ்தாவில் கழித்து விடுவேன்" என்று கூறினார்.