MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மௌலித் ஓதினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்குமா?


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


மௌலித் என்றால் என்ன?


பள்ளிவாசலில், மத்ரஸாக்கள், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திர்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி, ஒரு நபீ அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதனைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும், அவர் மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர் குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுகள் தத்துவங்களைப் பேசி, அல்லது பாடி, அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை விநியோகம் செய்து, சிறுவர்களுக்கும் மேலும் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கி அவர்களை கௌரவித்தல் இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது.



♣ கண்மணி நாயகம் ﷺ அவர்களைப் புகழ்து கவி (மௌலித்) பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்



♦ ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அறிவித்தார்கள் மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு,



அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா? “ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.



நூல்: புகாரி 3212



அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு கூறினார்கள்: (ஹஸ்ஸானே) நீங்கள் இறைவனுக்காகவும், இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காகவும் கவி பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) உங்களை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.


முஸ்லிம் 4545



♦ ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைப் போன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள்.



இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள், ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.


அறிவிப்பவர்: ஹழ்ரத் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) நூல்கள் - புகாரி 453, முஸ்லிம் 4545, மிஷ்காத்