MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மிஃராஜும் இறைஞானமும்
எழுதியவர்: ஷாஹுல் ஹமீத் (காதிரி)
இறைவன் தனது ஹபீப் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நூரே முஹம்மதியா என்னும் ஜோதியை தன்னில் தரிசித்து தன்னை அறியும் ஞானத்தை புகட்டவே மிஃராஜிற்கு அழைத்தான்.
இறைவன் தமக்களித்த அந்த ஞான ரகசியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஞானத்தின் தலைவாயில் அலி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு பைஅத் எனும் ஞானதீட்சை வழங்கி அந்த நூரே முஹம்மதியா என்னும் ராஜை "ரகசியத்தை" காண்பித்து கொடுத்து, யார் உங்களை நாடி இந்த ஞான இரகசியத்தை அறிய ஆர்வமுடன் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பைஅத் வழங்குவதன் மூலம் இந்த இரகசியக் கல்வியை கற்று கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்.
அன்றைய காலத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அலி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு செய்த பைஅத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கலீபாக்கள் வாயிலாக ஷெய்குமார்கள் (அவ்லியாக்கள்) மூலம் இன்றைய காலம் வரை தொடர்கிறது. இறுதி நாள் வரையிலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே ஷரிஅத் எனும் சட்ட கல்வியுடன் தரீகத் எனும் இறைஞான கல்வியும் அவசியம் என்பதை இறையின் கூற்றும் ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் வலியுறுத்துகின்றன.
ஒரு ஞான குருவின் உதவியின்றி தன்னறிவைக் கொண்டோ ஏடுகளின் வாயிலாகவோ மஃரிபா எனும் மெய்யறிவை தேடுவது முடியாத காரியம்.
இறைவன் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இறைஞானத்தை புகட்ட ஹிழ்று அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஞான குருவாக அனுப்பி கற்றுக் கொடுத்தான்.
குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராதே
திருக்குர்ஆனும் ஒரு நூர். திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நூரானவர்கள். நூரை நூரால்தான் சுமக்க முடியும். ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.