MAIL OF ISLAM

Knowledge & Wisdom



 முஸ்லிம் சனத்தொகை புள்ளிவிபரம்  (2009 மதிப்பீடு )


* மொத்த உலக சனத்தொகை - 680 கோடிகள் 


* மொத்த முஸ்லிம் சனத்தொகை -  ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை


இது ஒவ்வொரு அமைப்புக்களின் கருத்து கணிப்புபடி வேறுப்படுகிறது. என்றாலும் www.adherents.com மற்றும் Pew Research Center ஆகியவைகளின் 2009 ஆம் ஆண்டுக்கான கருத்து கணிப்புப்படி உலக முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை ஏறத்தாள 150 -  157 கோடி என்பதாகும். அதாவது மொத்த உலக சனத்தொகையில் 23%


* மொத்த முஸ்லிம்களில்,


​   சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள்  87 % 


   ​ஷீயா முஸ்லிம்கள்   10 % 


  வஹாபி/ ஸலபிகள்  3 % 


* முஸ்லிம்கள் உலகிலுள்ள 5 கண்டங்களிலும் வாழ்கின்றனர்.


* மொத்த முஸ்லிம்களில் 60% க்கும் அதிகமானோர் ஆசிய கண்டத்தில் வாழ்கின்றனர்.


* மொத்த முஸ்லிம்களில் 20%கும்  அதிகமானோர் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் வாழ்கின்றனர்.


* மொத்த முஸ்லிம்களில் சுமார் 67% ஆனோர் 10 நாடுகளில் வாழ்கின்றனர். அவையாவன: இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, நைஜிரியா,ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொரோக்கோ. 


* சுமார் 31 கோடி முஸ்லிம்கள் அதாவது 20% முஸ்லிம்கள், இஸ்லாம் சிறுப்பான்மை மதமாக காணப்படும் நாடுகளில் வாழ்கின்றனர். ஆனாலும் பல கட்டங்களில் இந்த சிறுப்பான்மை நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கை முஸ்லிம் நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையைவிட  அதிகமானது.


உதாரணமாக இந்தியா உலகின் 3 வது மிகப்பெரிய முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. சீனாவின் முஸ்லிம் சனத்தொகை சிரியாவை விடவும், ரஷ்யாவின் முஸ்லிம் சனத்தொகை ஜோர்தான் மற்றும் லிபியா ஆகிய இரு நாடுகளின் கூட்டுத்தொகையை விடவும், ஜெர்மனியின் முஸ்லிம் சனத்தொகை லெபனானை விடவும் கூடியது.


* சனத்தொகையின்படி உலகின் மிகபெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா -

முஸ்லிம்கள் எண்ணிக்கை - ஏறக்குறைய 20 கோடி -  மொத்த முஸ்லிம் சனத்தொகையில் 13%


* மொத்த ஷியாக்களின் சனத்தொகையில் சுமார் 68% - 80% ஆனோர் 4 நாடுகளில் வாழ்கின்றனர்.   

அவையாவன: ஈரான், பாகிஸ்தான், இந்தியா, ஈராக்


* உலக நாடுகளில் ஏறக்குறைய 50 நாடுகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள்.


* உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முதல் 10 நாடுகள்: