MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நான் ஏன் படைக்கப்பட்டேன்?
எழுதியது: மெயில் ஒப் இஸ்லாம்
இறுதிநாள் நெருங்கும் போது ஏற்படக்கூடிய பித்னாக்களை பற்றி எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் முன் அறிவிப்பு செய்துள்ளார்கள். அன்னவர்கள் கூறிய அனைத்து அடையாளங்களும் இன்று நம் கண்முன்னே நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட காலத்தில் நாம் செய்ய வேண்டியது முடிந்தளவு மக்களை விட்டு ஒதுங்கி உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறியவும், அடையவும் முயற்சி செய்ய வேண்டும்.
இறைவன் நம்மை எதற்காக படைத்தானோ அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றினால் மட்டுமே நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இறைவன் மனிதர்களை ஏன் படைத்தான் என்று அல் குர்ஆனில் கூறும்போது ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை அறிவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (தப்ஸீர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு)
மேலும் இறைவன் கூறும்போது: உள்ளத்தை தூய்மைப்படுத்தி கொண்டவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார். (92:9)
ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆயிரம் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்று சொல்லுவார்கள். அதே போல எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பார்வை இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.
இறைவனை அறிவோம்! இறைவனை அடைவோம்!
இன்ஷா அல்லாஹ்!
1. இஹ்யாவு உலூமூத்தீன்
2. பத்ஹுர் ரப்பானி
3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்
4. கல்வத்தின் இரகசியங்கள்
சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உலகின் பெரும் இரு மத வேதங்களில் காணக்கிடைக்க கூடிய பொதுவான சில கருத்துகளும் அவற்றில் இருந்து பெறக்கூடிய முடிவுகளும்
இஸ்லாத்தில் இசை கூடுமா? கூடாதா? அவற்றில், எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய இதனை வாசியுங்கள்..