MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தின் வமிசத்தில் வந்த கிளையார்களை ஸையத் என அடைமொழியிட்டு தனித்துவத்துடன் ஏன் அழைக்கின்றோம்...?


ஹதீஸின் வகைகள்:


நபிகள் நாயகத்தின் சொல், செயல், உத்திரவு, தடுத்தல், மௌனம் என எல்லாமே ஹதீஸ்கள் எனப்படுகின்றன.


அவைகளை ஹதீஸே குத்ஸி, ஹதீஸே சஹீ, ஹதீஸே முதவாதிர், ஹதீஸே ஹசன், ஹசன் லிகைரிஹி, ஹதீஸே மவ்ஜூ, ஹதீஸே மஷ்கூக், ஹதீஸே ஜயிஃப் என இன்னும் பல வகைகளாக பிரிக்கிறார்கள்.


இதன் விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் பிறகு வரும் கட்டுரைகளில் காணலாம். அதன் துவக்கமாக பரகத்துக்காக வேண்டி கண்மணி நபிகளாரின் திரு குடும்ப கிளையாரின் சையத் என்று, எப்போதிலிருந்து, ஏன் அப்படி விளிக்கின்றோம் என்பதை பார்போம்.


ஹதீஸ் எண்: 1

ஹஜ்ரத் முக்பிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நாங்கள் ஹஜ்ரத் அபூஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கூட்டமாக அமர்ந்து இருந்தோம். ஹஜ்ரத் சையதினா ஹசன் பின் அலி ரழியல்லாஹு அன்ஹு வருகை புரிந்து எங்களுக்கு சலாம் கூறினார்கள். நாங்கள் பதில் சலாம் கூறினோம். ஹஸ்ரத் அபூஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓடி அருகில் சென்று வ அலைக்கும் முஸ்ஸலாம் " யா சையதி" என்று பதில் பகர்ந்தார்கள். நாங்கள் இவர்கள் யார்? என கேட்டோம். அப்போது அபூஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் "திடமாக நான் சாட்சி பகர்ந்தவனாக கூறுகின்றேன் நபிகள் நாயகம் இமாம் ஹசன் அவர்களை சையத் என்றே விளிப்பார்கள் ! "


ஆதாரம்:

அஸிஹ்ஹுல் மகாளிப் ஃபி அத்தி மனாகிபே அஸதில்லாஹில் காலிப் - பக்கம் 343



ஹதீஸ் எண்: 2

முதலாம் கலிஃபா ஹஸ்ரத் அபூபக்கர் ரழியள்ளஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மிம்பரில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அவரருகில் இமாம் ஹசனும் உட்கார்ந்திருந்தார். அப்போது நபிகள் நாயகம் கூறினார்கள். "இந்த என் மகன் சையதாய் இருப்பார். இரு சமூக பிரிவனர்கிடையே சமாதானம் செய்வார்" என கூறினார்கள்.


இந்த ஹதீஸ் இமாம் அஹ்மத் அவர்கள் புகாரியை கொண்டு ரிவாயத் செய்கிறார்கள் மற்றும் அபுதாவூத், நஸாயி, தப்ரானியிலும் பதிவாகியுள்ளது.



ஹதீஸ் எண் : 3

முஹம்மத் பின் முன்கதிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் இமாம் ஹுசைனாரை அபா அப்துல்லாஹ் என்ற புனைப் பெயருடனும், சையத் என்ற பட்டதுடனும், ஜகீ, ஸப்த், ரஷீத், வகீ, முபாரக், தாபே மர் ஜாதுல்லாஹ், தலில் அலா ஜாதில்லாஹ், ஷஹீத் எ அக்பர் என்ற காரண பெயர்களுடனும் விளிப்பார்கள்.


இன்னும் இதை போன்று பல ஹதீஸ், ஹதீஸ் கிரந்தகளில் பதிவாகியுள்ளது. இவைகை எடுத்துக் காட்டுவதற்காகவே இவைகளை சுருக்கமாக இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது....



ஹதீஸ்கள் கூறும் பாடம்:


1. நபிகள் நாயகம் அவர்களின் குடும்பத்திற்கு தனித்துவம் வழங்கப்பட்டு சையத் என்ற அடைமொழி வழங்கப்படுவது ரசூல்லுல்லாஹ்வின் வழிகாட்டுதலே ஆகும்.


2. மிக அதிக ஹதீஸ்களை ரிவாயத்து செய்த ஹஸ்ரத் அபூஹுரைராஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் ஹசன் அவர்களை கண்டு மிக மரியாதை ஓடு அருகில் வந்து " வ அலைக்குமுஸ்ஸலாம் யா சையதி !" எனக் கூரியோதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த முக்பிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூடதார்க்கு திடமாக அப்படி கூற வேண்டும் என அறிவித்திருக்கின்றார்கள்.


3. இமாம் ஹுச்சைனாரின் பல பட்டங்களில் மிக முக்கியமானது " அஸ் சையத்" என்பதாகும் என்பதால் சையத் என்ற அடைமொழியின் முக்கியத்துவம் தெரியவருகிறது.



அஹ்லே பைத்:


குர்ஆனில் வல்ல அல்லா எடுத்துரைக்கும் கிருஸ்தவ பாதிரிமார்களுடன் நடைப்பெற்ற முபஹால சம்பவத்தின் போது நபிகள் நாயகம் தன்னுடன் போர்வைக்குள் இருந்த ஹஸ்ரத் அலி, சுவர்கலோக தலைவி பாத்திமா, இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹும். ஆகியோரை காட்டி இவர்கள் என் குடும்பத்தினர்கள் என பொருள் படும் விதமாக அஹ்லே பைத் எனக் கூறியதிலிருந்து அவர்களின் வமிசத்தில் 1400 வருடங்களாக வந்த குடும்பத்தினரை "சையத்மார்கள்" என்று கண்ணியமும், சங்கையும் செய்து முஸ்லிம் சமூகம் அழைத்து வருகிறது.


ஷஜராயே நஸப் :


இவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் நபிகள் கோமான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் வரை சென்றடையும் "ஷஜராயே நஸப்" என்னும் ஆதாரப்பூர்வமான வம்சாவழிப் பட்டியல் Descendant by Descendant Lineage by Lineage இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


இக்காரணங்களால் பொதுவாக இவர்களின் பெயர்களுக்கு முன் சையத் என்ற குடும்ப அடைமொழி உலெகெங்கும் ஆலே நபி, அவ்லாதே அலி என்ற பக்கீர்மார்களும், அஹ்லே பைத் என்று அரபு தேசங்களிலும், சதாத் என்று வட நாட்டிலும், சாஹெப்பெல்லா என்று ஆந்திராவிலும், தங்கள் என்று கேரளாவிலும், சாபுமார்கள் என்று நாகூர் ஷரிபிலும் ஆங்காங்கே அழைக்கப்பட்டு வருவது வரலாற்று நடைமுறை உண்மையாகும்.


நம் முநூர்களும், மூதாதையர்களும் சையத்மார்களை போற்றி சங்கை செய்து கண்ணியப்படுத்தி வந்ததைப் போன்று நாமும் செய்வோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பஞ்சதனே பாக் சையதுமார்களின் பொருட்டால் கண்மணி நாயகத்தின், எஜமான் ஷைக் அப்துல் காதிர் ஜிலானியின், அதாயே ரசூல் காஜா அஜ்மீர் நாயகத்தின், தமிழகத்து பாதுஷாவாம் காதர்வலி காதிரி கஞ்சே சவாயி நாகூரி ஆகியோரின் கடைக்கண் கடாட்சம் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க வேண்டுமாய் பணிந்து வேண்டுகிறோம்.


ஆமீன் ! பிஜாஹே சையதுல் முர்சலீன் !