MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிக்கு (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  செய்யும் வஞ்சகம்  இறைவனுக்கு செய்யும் வஞ்சகம் - அல் குர்ஆன்


யுகாதி வூனல்லாஹா வல்லசினா ஆமானு வமா யூகாதியூன இல்லா அன்ப்ஃசஹும் வமா யஷ்ஹுரூன்


குர்ஆன் ஷரிப் - பாகம் - 1, அத்தியாயம் - அல் பகரா - வசனம் - 9


(முனாபிகீன்(களே) ) அல்லாஹ்வையும் விசுவாசங்கோண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர் (இதனால்) அவர்கள் தங்களை தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை, (இதை) உணர்துகொள்ளவும்மாட்டார்கள்.


இந்த இறைவசனம் வெளிப்படையில் முனாபிகீன்களின் கேடுகெட்ட செயல்களை பற்றியும், அவர்களின் அசிங்கமான நிலைகளைப்பற்றியும் அல்லாஹ் கூறுகின்றான். மற்றும் இதை சற்று கூர்ந்து கவனித்தால் இந்த வசனத்தின் அந்தரங்க அர்த்தத்தில் நம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இறைவன் அணிவிக்கும் புகழ்மாலையின் மகத்துவத்தினை காணலாம். சுபானல்லாஹ்.


தப்சீர் க்ஹசாயின்-ல் இந்த இறைவசனத்தின் பற்றி கூறும் போது முனாபிகீன்கள் எவ்வாறு இறைவனை வஞ்சிக்கின்றார்கள் என்று கேட்டால் "ஜ்கர நப்சஹு வஅராத பிஹி ரசூலஹு வபி ஜாலிகா தப்கீமுன் லிஅம்ரிஹி வ தாஜிமுன் லிநிஷானிஹி.

அதாவது முனாபிகீன்கள் அல்லாஹுத்தாலாவிற்கு வஞ்சனை செய்ய ரசூல்லுல்லாஹ் அவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்கிறார்கள்.


அறிந்து கொள்ளுங்கள் ஹபிப் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் "ஜாத்"ல் எவ்வளவு சமீமமாக உள்ளார்கள் என்றால் அல்லாஹ்வின் ஹபிபிர்க்கு செய்யும் வஞ்சகம் இறைவனுக்கு செய்யும் வஞ்சகம் ஆகும்.


தப்சீர் மதாரிக்கில் இந்த இறைவசனதினை பற்றி கூறும் போது இது உடன்படிக்கை செய்வதினை எடுத்துகொள்ளலாம்.

"(நபியே) உங்களுடன் எவர்கள் உடன்படிக்கை செய்தார்களோ, அல்லாஹ்வின் கை அவர்கள் மீது உள்ளது"

"(நபியே) நீர் எந்த கற்களை எறிந்திரோ அந்த கற்கள் நீங்கள் எறிந்தது அல்ல மாறாக உங்கள் இறைவன் எறிந்தான்"


சுபானல்லாஹ். ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் செய்த செயல்களை இறைவன் தானே செய்ததாக கூறுகின்றான்.


மஸ்னவி ஷரிபில் மவ்லான ரூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வளவு அழகாக மஃரிபாத் பற்றி கூறுகிறார்கள்.


"குப்தயே அவ் குப்தயே அல்லாஹ் புத்

கர்சா அஸ் ஹல்கூம் அப்தில்லாஹ் புத்"


மஸ்னவி ஷரிபின் விளக்கம்:

குர்ஆன் இறைவனுடைய சொல்லாக இருக்கலாம், இருந்தாலும்

அது அப்தில்லாஹ் (முஹம்மத்) அவர்களின் நாவால் வெளிப்பட்டதே (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)


இமாம் அஹமத் ரழா காஃன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் புகழ்பாடுகிறார்கள்.

"ஜிஸ்கி ஹர் எக் சபான் வஹியே குதா

சஸ்மா எ இல்ம் ஒ ஹிக்மத் பே லாக்ஹூ சாலம்"


விளக்கம்:

"ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இறைவனின் வஹி


ஞானம் மற்றும் ஹிக்மத்தின் ஊற்றிக்கு லட்சாதி லட்சம் உண்டாவதாக"


ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்



உர்து மூலம்:

ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பாதயுனி (ரழியல்லாஹு அன்ஹு)

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன் என்ற நூலிலிருந்து

Shaan e Habibur Rahman min Aayathil Quran ( Praise of Rasoollullah from Holy Quran)