MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குர்ஆன் கூறும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனிச்சிறந்த படைப்பு


வ இன்குன்தும் பிஃ ரைபின் மிம்மா நஸ்ஸல்நா அலா அப்தினா பாஅ'து பி சூரதிம் மிம்மிஸ்லிஹி வா'அத்'வூ ஷுஹதாஅகும் மின்துநில்லாஹி இன்குந்தும் சாதிகீன்.

(அல் குர்ஆன் ஷரிப், பாகம் - 1, அத்தியாயம் - அல் பகரா, வசனம் - 23)


(காபிர்களே) மேலும் நமது அடியார் மீது நாம் இறக்கி வைத்த(இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இது போன்ற ஒரு அத்தியாத்தை கொண்டு வாருங்கள்.


மக்கத்து காபிர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள், கண்ணியமிக்க குர்ஆன் ஷரிபினை நாயகத்திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தாமாகவே உண்டாக்கிக்கொண்டு கூறுகிறார்கள் எனவும் இது இறைவனுடைய வசனங்கள் இல்லை எனவும் வாதம் செய்தனர்.


இந்த காபிர்கள் செய்யும் இந்த வாதங்களுக்கு அல்லாஹ் பதில் அளிக்கும் வகையில் இந்த வசனத்தினை இறக்கினான்.


ஒரு மனிதனின் ஆக்க சக்தியானது ஒரு பொருளை தயாரிக்கும் போது அதே பொருளை மற்ற மனிதர்களால் செய்து முடிக்க வல்லது. அதே போல் எந்த பொருளை மனிதனால் உருவாக இயலாததோ அந்த பொருள் முற்றிலும் இறைவனின் கைவண்ணமே.


ஈக்களும், கொசுக்களும் பலமில்லாத சிறிய உயிரினங்களாக இருந்தாலும் எவரும் இதை மனிதனால் செய்யப்பட்டது என்று கூறுவதில்லை. ஆனால் ரயில் இஞ்சின், மின்சாரம் மிகப்பெரிய பலமான ஒருவிஷயமாக இருந்தாலும் எல்லோரும் அறிவர் இது மனிதனால் செய்யப்பட்டதே. ஏன் ? இன்றும் இதனை மனிதனால் உருவாக இயலும், கொசுக்களையும், ஈக்களையும் உருவாக்கும் கைவண்ணம் மனிதனிடத்தில் இல்லை.


அதே போல் தான் குர்ஆன் ஷரிபானது மனிதனால் உருவாக்க பட்டுள்ளது என்று நினைத்தால் இதை போன்று ஒரு அத்தியாயத்தினை கொண்டு வாருங்கள் என்று இறைவன் கேட்கின்றான். சுபானல்லாஹ்.


இந்த வசனத்தில் வெளிப்படையாக குர்ஆன் ஷரிபின் மகத்துவத்தை பற்றி இறைவன் பேசினாலும், சற்று கவனித்து பார்ப்போமானால் இதில் குர்ஆனுடைய மகத்துவதுடன், இந்த குர்ஆன் எந்த அடியார் மீது இறக்கி வைப்பட்டதோ அவர்களின் மகத்துவமும் தெரிகின்றது. ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம்.


ஏனெனில் நம் கண்மணி நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எந்த ஒருபடைப்பினத்தின் மாணவர் அல்ல. அதாவது அல்லாஹ் சுபானஹுதாலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசான் ஆவான். நம் நாயக திருமேனியோ அல்லாஹ் ஜல்லஷானஹுதாலாவின் மாணவராவார்கள்.


"படிக்கவில்லை, எழுதவில்லை எங்கள் நாயகமே, ஆனால் தாங்கள் படைப்பாளனின் மாணவராம் !!!"

ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்....


கூற்று என்னவென்றால் பெரிய ஆசானுடைய மாணவரும் பெரிய மாணவராம், அல்லாஹ்வின் மாணவராக இருந்த நம் நாயகம் அவர்கள் எவ்வளவு ஹிக்மத் என்ற நுணுக்கங்களை கற்று இருந்து இருப்பார்கள்.


அதற்காக தான் இறைவான் கூறினான் எல்லா உதவியாளர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ்வை தவிர, உலெகெங்கும் சுற்றித்திரிந்து எல்லா ஆலிம்களையும் ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள். எப்படிப்பட்ட ஆலிமாக இருந்தாலும் அவர் ஒரு படைப்பிடமே கல்வியை கற்றறிந்து இருப்பார்கள்.


முபஅஸ்ஸிறிங்கள் இந்த வசனத்தில் ஒரு ஹிக்மதினை கற்றுத்தருகிறார்கள். எப்போது இந்த குர்ஆனுடைய ஒரு வசனத்தினை கொண்டு வர இயலாதோ. நம் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை போன்று எவரேனும் வர இயலுமா ? அப்பேற்பட்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் "ஜாத்"தை போன்று எவர் இருக்கின்றார்?

(தப்சீர் கஹ்சாயின், தப்சீர் மாதாரிக்) .


இந்த வானத்தின் கீழ் எவர் இருக்கின்றார் அல்லாஹ்வின் மாணவனாக? ஹதீஸ் ஷரிபில் கூறப்பட்டுள்ளது "அய்யுகும் மிஸ்லிஹி" (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் என்னை போன்று எந்த இடத்தில எவர் இருக்கின்றார்?)


"வலா கிண்ணி லஸ்து கா'அஹதிம் மிங்கும்" ஆனால் என்னை போன்று உங்களில் எவரும் இல்லை மற்றும் அறிவிலும் சிறந்தவர் இல்லை.


இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளுவது ரசூல்லுல்லாஹ் அவர்களை போன்று எந்த படைப்பினமும் இல்லை. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.



1. நாங்கள் மூஃமின்கள் என்றால் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் ஈமான்.

2. நாங்கள் உண்மையாளர்கள் என்றால் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் உண்மை.

3. நாங்கள் ஆலிம்கள் என்றால் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் ஞானம்


ஏனென்றால் ரசூல்லுல்லாஹ்வை அறிந்து கொள்ளுதலே ஞானம். நம்முடைய கழிவுகள் நமக்கு அசுத்தம், இதே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கழிவுகள் நமக்கு சுத்தம் (ஷாமி, பாகம் 1).


நம்முடைய தூக்கம் ஒளுவை முறித்துவிடும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் உறங்கினால் ஒளு முறியாது. நாங்களோ சொர்க்கம், நரகம் அவற்றின் உள்ளவைகளை கேட்டு ஈமான் கொண்டுள்ளோம். நாங்கள் கேட்டு வைத்துள்ள ஈமான் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் அவர்களால் பார்த்து சொல்லப்பட்டதே.


நமக்கோ ஐவேளை தொழுகை கடமை, ரசூல்லுல்லாஹ் அவர்களுக்கோ ஆறு வேலை தொழுகை கடமை, தஹஜ்ஜுத் தொழுகை "வ மினல்லைல பFதஹஜ்ஜுத் பிஹி நாபிலதள்ளக. அதாவது (நபியே) தாங்கள் இரவில் தஹஜ்ஜுத் தொளுவிரக இது உங்களுக்கு அதிமானதாகும். எல்லோருக்கும் இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து, ரசூல்லுல்லாஹ் அவர்களுக்கு 4 கடமைகள் அதாவது ஜகாத் (ஏழைவரி) கடமை இல்லை. (ஷாமி, கிதாப் ஜகாத்). நமக்கோ 4 மனைவியர் ஆகுமானதாகும் ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் எவ்வளவு மனைவிமார்களையும் நாடலாம்.


நாங்கள்இறந்த பின் எங்களுடைய மனைவியர் யாரை நாடினாலும் மணமுடிக்கலாம். ஆனால் ரசூல்லுல்லாஹ் அவர்களின் பரிசுத்த மனைவியர் ரசூல்லுல்லாஹ்வின் மறைவிற்கு பிறகு எவர் கண்களிலும் பட கூடாது. இறைவன் கூறுகின்றான், வலா அன் தன்கிஹூ ஆஜ்வாஜதன் மிம் பாத்'இ அபதா.


இது போன்று எண்ணற்ற வித்தியாசங்கள் நமக்கும் நம் நபிகளாருக்கும் உள்ளன. இன்ஷா அல்லாஹ் இதனை பற்றி விரிவான விளக்கம் "குல் இன்னமா அனா பஷரம் மிஸ்லுகும்" உடைய வசனத்தில் வரும்....



உர்து மூலம்:

ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயுனி (ரழியல்லாஹு அன்ஹு)

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன் என்ற நூலில் இருந்து,,,

Shaan e Habibur Rahmaan Min Ayathil Quran (Praise of Rasoollullah from Quran)