MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - அறிவின் அறிவு


"வ அல்லமா ஆதம அல் அஸ்மாஅ குல்ளஹா ஸும்ம அரதஹும் அலல் மலாயிகதி"

குர்ஆன் ஷரிப் - பாகம் - 1, அத்தியாயம் - அல் பகரா வசனம் - 31


"(ஆதமை படைத்தது ) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்களை அவையனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை (அந்த) வானவர்கள் மீது எடுத்துக்காட்டினான்"


இந்த இறைவசனத்தில் ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களின் சிறப்புகளும், மகத்துவமும் பற்றி இறைவன் புகழ் பாடியுள்ளான். பிறகு ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களின் அவர்களின் விசாலமான அறிவினை பற்றி கூறப்பட்டுள்ளது.


அல்லாஹ் சுபானஹுதால ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களுக்கு சிறிய மற்றும் பெரிய பொருட்களை காண்பித்து அவற்றின் பெயர்களை கற்றுக்கொடுத்துவிட்டான். மேலும் எல்லா பொருட்களின் பயன்கள் மற்றும் நஷ்டங்களையும் அவற்றின் அமைப்புகளையும் கற்றுக்கொடுத்தான்.


தப்சீர் "மதாரிக்"-ல் பார்ப்போமானால் கியாமத் வரை தோன்ற இருக்கும் எல்லா பொருட்களின் பெயர்களையும் எல்லா மொழிகளிலும் ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களுக்கு கற்றுகொடுத்து உள்ளான்.


எடுத்துக்காட்டாக "தண்ணீருக்கு" அரபி மொழியில் "மாய்" உர்து மொழியில் "பாணி", ஆங்கில மொழியில் "வாட்டர்", பாரசீக மொழியில் "ஆப்" என்னும் என்ன என்ன மொழிகள் இருக்கோ அவை அத்தனை மொழியிலும் எல்லா பொருட்களின் பெயர்களை அதற்குரிய மொழிகளில் ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களுக்கு இறைவன் கற்றுக்கொடுத்தான். சுபானல்லாஹ்.


தப்சீர் கபீர்-இல் எல்லா பொருட்களையும் வெளிப்படுத்தி காண்பித்து, இல்ம் உடைய சிறப்பினை கொடுத்து "கிலாபத்" (கலீஃபா) உடைய கிரீடம் அணிவித்து மலக்குமார்களை சுஜூத் செய்ய வைத்து பெருமைபடுத்தி உள்ளான்.


(ஏ-கத்துவோம் !) என்ற ஒரு வஹாபிய கூட்டம் இதற்கு என்ன பதில் அளிக்க போகிறது....???


இந்த இறைவசனத்தில் இதனுடன் நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை எங்கு உள்ளது என்று உற்று நோக்கி பார்த்தோமானால். சுபானல்லாஹ். இது முஸ்லிம்களுடைய விஷயமாகும் ஆம் ! நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் "ஜாமியா உலூம்" ஆவர்கள்.


நம்முடைய எல்லா (நபிமார்கள்) பைகம்பர் அலைஹி சலாம் அவர்களுக்கு ரப்புல் ஆலமின் எந்தெந்த நிஃமத்துகளை வழங்கினானோ அவை அனைத்தும் எம் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டதே.


நபிகளார் கூறுகிறார்கள்:

அல்லாஹு மூதிஃ வ அனா காசிமு

இறைவன் கொடுக்கின்றான் நான் பங்கிடுகின்றேன்.


இறைவன் கூறுகின்றான் " வுலாயிக்க அல்லஜி ஹதல்லாஹு ப(ப)பி ஹுதா ஹுமு முஃததிஹி"

அதாவது அன்பியாக்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்கு இறைவன் நேர்வழியில் செலுத்தினான், நீங்களும் அவர்கள் வழியில் செல்லுங்கள்.


இதன் மூலம் அறிவது முஹம்மது ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஜாமி எ அன்பியா ஆவர்கள் (எல்லா நபிமார்களையும் கொண்டவர்கள்)


நபியே தாங்கள் தீனில் முன்சென்ற நபிமார்களை போன்று நடந்துகொள்ளுங்கள் என்று இந்த வசனத்திற்கு அர்த்தம் கொள்ள கூடாது.


கண்மணி நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் ஜாமி எ அன்பியா எவ்வாறு என்றால்...

நபி நூஹ் அலைஹி சாலம் அவர்களின் நன்றி

நபி இப்ராஹிம் அலைஹி சாலம் அவர்களின் சுன்னத்

நபி மூசா அலைஹி சாலம் அவர்களின் நடத்தை

நபி இஸ்மாயில் அலைஹி சாலம் அவர்களின் உண்மை

நபி யாகூப் மற்றும் நபி அய்யூப் அலைஹி சாலம் அவர்களின் பொறுமை

நபி யூசுப் அலைஹி சாலம் ஆவர்களின் அழகு


இவ்வாறு எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நபிமார்களுக்கும் இருந்த தனி தனி சிறப்புகளையும் ஒன்று சேர நம் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் காணலாம்.


இமாம் ஷர்புத்தின் பூஸிரி அலைஹி ரஹ்மதுளில் ரித்வான் தன்னுடைய கஸிதா புர்தா ஷரிபில் அருமையாக புகழ்கிறார்கள்


"பa இன்னக ஷம்ஷு பஸ்லின் ஹும் கவா கிபுஹா

யுத்ஹிர்ன அன்வாரஹா லின்னாசி பிஸ்ஜுல்மி"


ஹபிபே! தாங்கள் மகத்துவத்தின் கதிரவனாக இருக்கின்றீர்கள் மற்றும் மற்ற எல்லா நபிமார்களும் உங்கள் நட்சத்திரங்கள் ஆவர். எல்லோரும் உங்களிடமிருந்தே பெற்று இரவில் உங்கள் நூர்-ரை வெளிப்படுத்திகிரார்கள்.


இந்த அம்பியாகளும் முர்சலின்களும் நட்சத்திரங்கள் ஆவர்கள் தாங்களோ இவைகளின் முபீன்(seal) ஆவீர்


காசீம் நானுத்வி தேவ்பந்தி , மதரசா எ தேவ்பந்த் (வஹாபியா) தஹ் சிற்ரூன்நாஜ் என்ற நூலில் எழுதி இருக்கின்றார். ஆதிமுதல் ஆகிர் வரை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஞானங்களின் ஊற்று ஆவார்கள்.


எவ்வாறெனின் அறிவின் வெளிச்சம், அகத்தினுடைய இல்ம், புறத்தினுடைய இல்ம் என எல்லா ஞான நுணுக்கங்களையும் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஆலம் எ ஹகிகி ஆவார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ஞானம் மற்ற அனைத்தும் அவர்களிடத்தில் இருந்து பெற்ற அறிவு துளிகள்.


பஃத்துஹாதே மக்கியா என்ற நூலில் ஷைக் இப்னு அரபி அலைஹி ரஹ்மதுளில் ரித்வான் 10-வது பாகத்தில் குறிப்பிடுகிறார்கள் ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முதலாம் கஃலிபா ஆவர்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இல்மிர்க்கு முன்னால் ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்களின் இல்ம் ஒரு துளியே. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் எவ்வளவு இல்ம் வைத்து இருக்கின்றார்கள் என்பதனை அல்லாஹ்வும் நம் கண்மணி நாயகமும் மட்டுமே அறிவர். இந்த ஞானங்கள் நம் சிறிய அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும்.


ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நூர் ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களின் நெற்றியில் பிரகாசித்து கொண்டு இருந்தது. ஹகீகத்தில் இந்த நூரிற்காக தான் மலக்குமார்களை ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களுக்கு சுஜூது செய்ய கட்டளை இடப்பட்டது.


சுஜூது செய்யாத காரணத்தினால் சொர்க்கத்தில் இருந்த (ஷைத்தானை)வனை வெளியேற்றப்பட்டு காபிர் ஆனான். இருந்தாலும் ஷைத்தான் இன்னும் தவ்ஹீத் வாலா ஆவான். சுஜூது இறைவனுக்கு செய்யும் இறுதிகட்ட அடிமைத்தனம்.


ஹஸ்ரத் நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு சுஜூது செய்யாத காரணத்தினால் சொர்கத்திலிருந்து வெளியில் அனுப்பபட்டவனை கண்டு பாடம் படித்து இந்த கால (ஏ-கத்துவோம் !) தவ்ஹீத் வாலாக்கள் திருந்த வேண்டும். போலி தவ்ஹீத் வாலக்களே சொர்க்கத்தில் இருந்தவனே வெளியேற்றப்பட்டு விட்டான். இன்னும் நீங்கள் சொர்க்கம் செல்லும் boarding pass (ஈமான்) கூட பெறவில்லை. ஈமான் அளித்த நபிக்கு நன்றி நிமித்தமாக நின்று சலாம் கூட சொல்லாதவர்கள் நீங்கள் ! ஷைத்தானை உங்களிடம் ஒப்பிட்டு பார்த்தால் ஷைத்தான் மிகைத்தவனாக இருக்கின்றான்.


ரஸுலுல்லாஹ்வை புகழ்வதில் முஃமின்கள் மரித்துவிடுவார்கள் !

சஜ்தா செய்கிறார்கள் வஹாபிகள் பிணம் போன்ற மனதை கொண்டு !

-- Imaam Ahmad Raza Khan Fadil e Barelwi Razhiyallahu Anhu



உர்து மூலம்: ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயோனி ரழியல்லாஹு அன்ஹு

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன் நூலிலிருந்து

SHAAN E HABIBUR RAHMAN MIN AAYATHIL QURAN (PRAISE OF RASOOLLULLAH FROM HOLY QURAN)