MAIL OF ISLAM

Knowledge & Wisdom




கோமான் எங்கள் திருநபியே ﷺ

***************************************************


கோமான் எங்கள் திரு நபியே!

ஈமான் கொண்டு பாடுகிறேன்!

பூமான் உங்கள் திரு முகமே!

ஈமான் கொண்டு தேடுகிறேன்!

இந்த பூமியில் நான் பிறந்தேன்!

தங்கள் பூவடி தேடுகிறேன்!

அந்த வானிலே நான் பறந்தேன்!

தங்கள் வதனத்தை தேடுகிறேன்!

நான் போகின்ற பாதை எல்லாம் தங்கள் ஜோதியை காணுகிறேன்.....! (கோமான்)


இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்...!

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்...!

என் காதலின் கீதம் மட்டும் எந்த நாளிலும் தேடி வரும்...! (கோமான்)


இந்த உலகமே அழிந்தாலும்,,,

எல்லா உயிர்களும் மறைந்தாலும்,

எந்த நிலையிலும் இருந்தாலும்...!

தங்கள் ஓளி மட்டும் மாறாது...!

ஜோதியில் ஜோதி ஜொலித்திடுமே...!

நூரிலே..நூர்...நின்றிடுமே...! (கோமான்)


நபிய்யுன் நபிய்யுன் நபிய்யுன் நபி..! ﷺ

************************************************************


அருவாய் இருந்து கருவான நபிக்கு கோடி ஸலாமே!

தருவோம் நாங்கள் எப்போதுமே நாடி ஸலாமே!


கருவாய் இருந்து உருவான நபிக்கு கோடி ஸலாமே!

தருவோம் நாங்கள் எப்போதுமே நாடி ஸலாமே


குருவாய் பிறந்த கோமான் நபிக்கு கோடி ஸலாமே!

தருவோம் நாங்கள் எப்போதுமே நாடி ஸலாமே!


விரிவாய் துலங்கும் வேந்தர் நபிக்கு கோடி ஸலாமே!

தருவோம் நாங்கள் எப்போதுமே நாடி ஸலாமே!


நிறைவாய் வந்த நேசர் நபிக்கு கோடி ஸலாமே!

தருவோம் நாங்கள் எப்போதுமே நாடி ஸலாமே!


அருள்வாய் அல்லா என்னுயிர் நபிக்கு கோடி ஸலாமே!

பொலிவாய் மௌலா இன்னுயிர் நபிக்கு, கோடி ஸலாமே!


முஸ்தபா..முஜ்தபா..முர்தளா.. முஸ்தபா

நபிய்யுன் நபிய்யுன் நபிய்யுன் நபி..! !


அந்நபி ஸல்லு அலைஹ் 

****************************************


அல்லாஹ்வின்,,அருட்சுடரே!

அன்பான அறிவமுதே!

பண்பான பேரழகே!

பாதமே பணிந்து விட்டேன்! (2)


பகலின் ஒளிக் கதிரே!

இரவின் குளிர் நிலவே!

வரவை எதிர்பார்த்திருப்பேன்!

வாசலை திறந்து வைப்பேன்!

யா ரசூலல்லாஹ்!,,,,,,,,! யா ரசூலல்லாஹ்,,,! (2)

யா ஹபீபல்லாஹ்,,,! யா ஹபீபல்லாஹ்,,,,!


கற்பனைக்கு எட்டிடாத காவியமே!  ஓவியமே!

அர்ப்பணமே செய்து விட்டோம்!

பெற்றவரும் நாங்களுமே!

இறை ஒளியே!  இன்னுயிரே!

மறை வழங்கும் மன்னவரே!

சிறை எடுத்து வைத்திடுவீர்!

சீலரே இரட்சகரே!

(யா ரசூலல்லாஹ்,,! யா ஹபீபல்லாஹ்,,!) (2)


எண்ணத்தில் நிறைந்தவரே!

என்னையே தந்து விட்டேன்!

வண்ண மிகு பேரொளியே!

வாழ வழி காட்டிடுவீர்!

மென்மையில் மலரை போல,

மேன்மையில் நிலவை போல,

ஆண்மையில் காலத்தை போல,

ஈகையில் கடலை போல,

முத்து நகை பெட்டகமே!

தேடுகின்றோம் ரெத்திணமே..!

கட்டழகு வாச மலரே!

கனிவுடனே கரம் பிடிப்பீர்!

(யா ரசூலல்லாஹ்,,,,யா ஹபீபல்லாஹ்..!) (2)


ஏன் என்ற கேள்வி இல்லை..!

தான் என்ற பெருமை இல்லை!

வீண் ஆசை எதுவும் இல்லை!

காரணமே கண் திறப்பீர்!

முக்காலத்தின் உத்தமரே!

இஞாலத்தின் வித்தகரே!

ஜாலங்கள் எதுவுமில்லை!

என்கோலத்தை பொறுத்தருள்வீர்!

(யா ரசூலல்லாஹ்,,,,,யா ஹபீபல்லாஹ்..!)(2)


நூறு முறை, பிறந்தாலும்,

நூறு முறை இறந்தாலும்,

உயிரோடு உயிரானபின்,

உன்னதம் மறைவதில்லை...!

எல்லாமே இருந்து மென்ன!

இன்னிசையாய் பாடி என்ன!

வள்ளல் முகம் காணாமலே,

வாடிடுதே என் மனமே..! (2)


சீர் மிகும் ஜியாரத்தையே !

மேன்மை ஷபாஅத்தையே!

கோடி சலாம் உரைத்து...!

நாடி நாம் வந்து நின்றோம்,,!

(யா ரசூலல்லாஹ்,,,,யா ஹபீபல்லாஹ்...!) (2)


உத்தம தோழர்களை,

உன்னத வீரர்களை,

உவஹையுடன் போற்றிடுவோம்,

உவந்து சலாம் உரைப்போம்..!

சத்தியத்தின் வீட்டினரை,

சாந்த நபி உறவினரை,

போற்றி நாம் புகழ்ந்திடுவோம்..!

புரிந்து சலாம் உரைப்போம்..!

( யா ரசூலல்லாஹ்....யா ஹபீபல்லாஹ்..!) (2)


சூபியான நாதாக்களை,

ஜோதியான வலிமார்களை,

வாஹையுடன் பாடி நின்று,

கூடி சலாம் உரைப்போம்..!

எத்துறைக்கும் தங்களையே..!

அத்தனைக்கும் உங்களையே..!

அனுப்பி தந்த அல்லாஹ்வையே!

புகழ்ந்திடுவோம்..வணங்கிடுவோம்..!

அல்லாஹ்,,,,,அல்லாஹ்,,,அல்லாஹ்,,, அல்லாஹ்,,,!



பாலைவனம் காணும் போதெல்லாம்

**********************************************************


பாலைவனம் காணும் போதெல்லாம் பத்ரு படையரசர்

நினைவால் ஏங்குதே ...?

எங்கோ ஓர் ஒட்டகம் கண்டாலும்

உங்கள் கஸ்வா நினவு வருதே..!


குதிரைகளின் குளம்போசை கேட்டவுடன் ,

குணக்குன்றின் நினைவால் ஏங்குதே ..!

பச்சை குப்பா கண்டவுடன்

பயகம்பர் நினைவால் ஏங்குதே ..!


பாங்கோசை ஒலிக்கக்கேட்டு நாவில்

பாங்கான சலவாத்தால் நிறையுதே ..!

மதீனா என்ற சொல்கேட்டு

மதி மயங்கி குதூகளிக்கிதே..!


நினைவெல்லாம்  நீங்களாக ஆகியதால்

நினைத்து நினைத்து நெஞ்சம் மருகுதே..!

புன்னகை பூத்திடும் கோலம் கண்டால்

கடல் முத்தெல்லாம்  நீரடியில் அமிழ்ந்து கொள்ளுமே ...!


ஆணி முத்தே ..! அழகு முத்தே ! என்று பாடினால் ..!

முத்துக்களுக்கு ஈடாகி விடுமே..!

சந்திரரே..! சூரியரே..! என்று பாடினால் ..!

படைப்புகட்க்கு ஈடாகி விடுமே ...!


படைப்பினங்களுடன் ஒப்பிட்டு பாடி பாடி மகிழ்ந்தோம்...!

ஆனால் படைப்பினங்களுடன் ஒப்பிடக் கூடாது

என்ற மடமை அறியோம் ..!

எத்தனை கவிதைகள் இதமாய் புனைந்தாலும் என்

கர்த்தரை கண்மணியை புகழ முடியாது !


எப்படி எப்படி எடுத்துரைத்தாலும்

அவர்கள் சொற்படி நடக்க அருள் வேண்டுமே !

கண்மணியே எங்கள் பொன் நிலவே ..!

எங்கள் இதயத்தை கொடுத்து விட்டோம்..!


வின்னமுதே எங்கள் வெண்ணிலவே ..!

எங்கள் கல்பினில் கரைத்து விட்டோம்

தங்கள் காலடியில் எங்கள் சிரம் வைத்து

தங்கள் காவலை தேடுகிறோம் !


மனமே நாடும் கண்மணியே...!

***********************************************


மனமே நாடும் கண்மணியே...!

தினமே நாடும் என்னுயிரே...!

தேவரீர் அருள்வீர் ..! ஞானப்பேரோளியே...!

காமில் நபியே ஹாத்தமுன்னபியே...!

ஜொலித்திடும் நூரானியே...!

களித்திடும் இறை ஒளியே...!

அற்புதமான சொற்பத நேசர்..!

எங்கள் நபி மணியே! எங்கள் நபி மணியே..!

விரிகதிர் சுடரே..! குளிர் தரும் நிலவே..!

அண்ணலே வரம் தருவீர்...!

அண்ணலே வரம் தருவீர்..!


கடல் அலைகளைப் போலே எங்கள் இடையில்,

கருணை புரிந்திடுவீர்..! பேரருளைப் பொழிந்திடு வீர் ..!

தேட்டங்கள் கொண்டு மதீனாவை நாடி,

தங்களைத் தேடி நின்றோம்..!

தங்களைத் தேடி நின்றோம்..!

நாட்டங்கள் கொண்டு வாட்டமுடனே,

இருப்பதும் தெரியலையா...?

இருப்பதும் தெரியலையா...?


கருணை பார்வையைக் காட்டி எங்கள்

பாவத்தை நீக்கிட வருவீரா..! இல்லை..

கிருபை செய்வீரா!

அடிமை எனது பிழைகளை நீக்கி,

ஆதரவு தர வேண்டும்..!

ஆதரவு தர வேண்டும்...!

மிடுமை நீக்கி பொறுமை தேடி,

நிற்பதும் தெரியலையா...!

நிற்பதும் தெரியலையா..!

ஜெக ஜோதியாய் வந்து ஏற்றமே தந்து

கிருபை புரிந்திடுவீர்...! தரிசனம் தந்திடுவீர்..!


எல்லாம் வல்ல நாயனின் பிஞ்சொளியே...!

******************************************************************


எல்லாம் வல்ல நாயனின் பிஞ்சொளியே !

நல்ல வழி தேடுகிறேன் பேரொளியே !

எல்லா படைப்புகளுக்கும் முந்தின முத்தொளியே !

நல்ல வழி தேடுகிறேன் தீனொளியே !

அரண்மனையில் வாழாத அரசரே !

கானகத்தில் வாழாத சிங்கமே !

குடிசையில் வாழ்ந்த கோபுரமே !

குன்றினிலே தவமிருந்த ஞானமே !

ஏழையாய் வாழ்ந்த செல்வரே !

பட்டினியில் வாழ்ந்த சீமானே !

விண்ணவரும் போற்றுகின்ற மன்னவரே !

புனிதராய் நின்றிலங்கும் ஜோதியே !

பொறுமையில் வாழ்ந்த எங்கள் பெருமையே !

வறுமையில் வாழ்ந்த எங்கள் அருமையே !

ஆன்மீக ஞானிகளின் தலைவரே !

இன்முகம் மாறாத நேசரே !

ஈருலகம் போற்றும் நாதரே !

உண்மையின் உதாரண செம்மலே !

ஊக்கமும் ஆக்கமும் பெற்ற வீரரே !

மடைமைகள் நீக்கிய பொது உடைமையே !

மாறாத எழி லோங்கும் வதனமே !

என்னாத நேரமில்லை சர்தாரே !

ஏங்காத மூமினில்லை வள்ளலே !

ஐயமின்றி சூளுரைக்கும் கண்மணியே !

ஒருவனே ஒருவனே என்ற ஒருவரே !

துன்மார்க்கம் நீக்கி

சன்மார்க்கத்தில் நின்று

வின்மார்க்கம் ஏகி

என் கண் மார்க்கம் வந்து குளிர்ச்சி தர

தஞ்சம் தஞ்சம் தஞ்சம் !


காதலுடன் கவிதை சொல்லி

*********************************************


காதலுடன் கவிதை சொல்லி

தாங்கள் கரத்தால் பொன்னாடை போற்ற

தகுதி பெற்ற இமாம் பூசிரி நாயகம் ....நானல்லவே ...!

தமிழில் இலக்கணப்பிழை இன்றி சீறாப்புராணம்

எழுதி அரங்கேற்றி அழகு பார்க்க

உமறுப் புலவர் நானல்லவே....!


இந்த சிற்றடிமையின் சிறுமையுள்ள கரத்தால்,

எழுதி நான் கற்றறிந்த தமிழில் கவிதை பாடி காண துடிக்கும்

ஆவலை கட்டுப்படுத்த வருவீர்களா..!

பச்சை தலைப்பாகையுடன் பவனி வரும் அழகை கண்டால்

பச்சை மரகதமும் பயந்து கொண்டோடுமே!

யா ரஸூலல்லாஹ்! வெண்மை தலைப்பாகை யுடன் வீற்றிருக்கும் வேந்தரைக் கண்டால்...!

வெண்பனியும் வெட்கி உருகி விடுமே ...! யா ரஸூலல்லாஹ் !


கருமை தலைப் பாகையுடன் தானைத் தலைவரைக் கண்டால்

கருமேக கூட்டமும் கண்டு ஒளிந்தோடுமே யா ரஸூலல்லாஹ்!

ரோஜா நிற தலைப்பாகையுடன் எங்கள் ராஜாவைக் கண்டால்

ரோஜாக்கூட்டம் தன் வாசமிழந்து வாடிடுமே !

யா ரஸூலல்லாஹ் !


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ் !

யா ஹபீபல்லாஹ் ! யா ரஹ்மத்தில் லில் ஆலமீன் !


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும்!

*****************************************************************


அல்லாஹ்வின் தூதராக

அன்பியாக்களின் தலைமையாக

அவ்லியாக்களின் பீடமாக

அரசர்களின் மகுடமாக

அன்பர்களின் கிரீடமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும்!


தங்கத்தை விட தகதகப்பாக

வைரத்தைவிட  ஜொலி ஜொலிப்பாக

முத்துக்களை விட பளபளப்பாக

ரத்தினத்தின் உயர் மதிப்பாக

வந்து விட்டது மீலாத் வசந்தம்!

படைப்புகளுக்கு முந்தியதாக 

இனி படைக்கவே படாததாக

பண்பாளர்களின் பாக்கியமாக

அன்பாளர்களின் ஆதரவாக

வள்ளல்களின் உதாரண செம்மலாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும்!


ஞானிகளின் ஞானமாக

மௌனிகளின் மோனமாக

தேனீக்களின் ரீங்காரமாக

ஓசைகளின் ஓங்காரமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


காலத்தை விட மேன்மையாக

இஞ ஞாலத்தை விட உயர்வாக

வார்த்தை ஜாலங்களுக்கு ஈடுஇணை இல்லாததாக

இப்பிரபஞ்சமே தாங்களாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


சுவனங்களின் திறவுகோலாக

சூட்சுமத்தின் விளக்கமாக

அறிவுகளின் அரசராக

அன்பிற்கினிய தங்கமாக

இன்பங்களின் ஊற்றாக

இனிமையான பேச்சாக

இருலோகத்தின் மூச்சாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


தென்றலை விட குளிராக

திங்களை விட செழுமையாக

பாலை விட வெண்மையாக

பணியை விட இனிமையாக

தேனை விட தீஞ்சுவையாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


இசைகளிலே இன்னிசையாக

கலைகளிலே கடாட்சமாக

கனிகளிலே அருஞ்சுவையாக

காற்றினிலே தென்றலாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


அறிவிற்கே இலக்கணமாக

ஆற்றலுக்கே இலட்சணமாக

கதைகளிலே காவியமாக

உயிர்களிலே ஓவியமாக

உணர்வுகளிலே உன்னதமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


வறுமைக்கே வாழ்வாக

தனிமைக்கே துணையாக

வெறுமைக்கே இனிமையாக

அடிமைக்கே ஏற்றமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


கொடுமைக்கே தவிடு பொடியாக

மிடுமைக்கே தூள் தூளாக

மடமைக்கே சுடர் ஒளிவாக

கடமைக்கே கருப்பொருளாக

வந்த என் கண்மணியே ..

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


துன்பதிற்க்கே வடிகாலாக

துயரதிர்க்கே கொடிக்காலாக

கவலைகளுக்கே மருந்தாக

கஷ்டதிற்க்கே ஊன்று கோலாக

நோய்களுக்கே நிவாரணமாக

தாய்களுக்கெல்லாம் தாயாக

சேய்களுக்கு தாங்கும் கிளையாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


அழகுக்கெல்லாம் பேரழகாக

அறிவுக்கெல்லாம் பேரறிவாக

ஆன்மீக ஊற்றின் பிறப்பிடமாக

இனிமைக்கெல்லாம் இன்னமுதாக

ஈன்ற தாயின் உளமகிழ்வாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக

ஊக்கங்களுக்கெல்லாம் மேம்பட்டதாக

எளியோர்க்கெல்லாம் இனிமையானதாக

ஏனையோர்கெல்லாம் விஞ்சியதாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


கோடிக் கவிஞர்களின் அற்ப்புதமாக

பாடும் புலவர்களின் சொற்ப்பதமாக

தேடும் சூபிகளின் கற்கண்டாக

வாடும் எங்களின் சற்குருவாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


சூரியனின் ஜொலி ஜொலிப்பாக

சந்திரனின் ஜிலு ஜிலு ப்பாக

வானங்களின் விரிவுயர்வாக

மேகங்களின் தொடர் அழகாக

நட்ச்சதிரங்களின் மினு மினுப்பாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


கருணைக் கடலே நாயகமாக

ஞானக்கடலே தாங்களாக

பொறுமைக் கடலே நீங்களாக

உண்மைக் கடலே உள்ளமையாக

வல்லமைக் கடலே வீரமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


மக்கா பதியை பிறப்பிடமாக

மதீனா ஷரீபை இருப்பிடமாக

குறைஷி குலத்தின் கோபுரமாக

ஹாஷிம் இனத்தின் ஹிருதயமாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


ஆமீனா அம்மாவே ஈன்ற தாயாக

ஹலீமா அம்மாவே செவிலித்தாயாக

ஹதீஜா பிராட்டியின் கணவராக

ஆயிஷா நாயகியின் மாப்பிள்ளையாக

ஹஸன்,ஹுஸைனாரின் பாட்டனாராக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


உலகே அழிந்தாலும் அழியா புகழ் பெற்றவராக

உருவே மறைந்தாலும் மறையா புகழ் கொற்றவராக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


ஒன்றே குலம் என்றுரைத்ததாக

ஓர்மையே புலம் என்று விண்டதாக

கொள்கைகள் தந்ததோ கோடி கோடியாக

உண்மைகள் உரைத்ததோ ஏணிப்படியாக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


சித்தீக்குல் அக்பரின் சிறந்த தோழராக

உமர் ஃபாரூக்கின் உண்மை தோழராக

தின்ன்நூரைன் உத்மான் கனியின் நேசராக

வீரர் அஸதுல்லாஹ் வின் மாமனாராக

வந்த என் கண்மணியே

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்கும் !


அண்ணலை அறிந்து

**********************************


அண்ணலை அறிந்து  அண்ணலை அறிந்து

அன்பையும் சொறிந்து  அன்பையும் சொறிந்து

மெட்டுக்கள் பாடுகின்றோம் !

எங்களின் இதயக் கதவு திறந்து,,

இன்னிசை ராகங்கள் ஒலிக்க ஒலிக்க

கீதங்கள் பாடி நின்றோம் !

தங்களின் எண்ணத்தில் நுழைந்த நினைவு

உயிரைத் தடவி திரும்பும்போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே !

காதலின் அலைகள் கருத்தை எடுத்து

இதயம் கடந்து இறங்கும்போது

முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே !  (அண்ணலை )


தனது ஒளியை பிரித்து எடுத்து

அமுதில் நனைத்து  அறிவில் இணைத்து

அருட்சுடறாய் ஆக்கி வைத்தான் !

உயிரில் நபியின் உருவம் அமைத்து

உலகம் அனைத்தும் படைத்து படைத்து

பூமிக்கு அனுப்பி வைத்தான் !

அழகு என்பது ஆண்பாலா ? பெண்பாலா ?

என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது ...!

அழகு என்பது நிச்சயம் அண்ணலம்மா ...!

கவிதை என்பது மொழியின் வடிவம்

என்றொரு கருத்தும் இன்று உடைந்தது !

கவிதை என்பது அண்ணல் வடிவமம்மா ..!


என்ன தரம் உண்டு என்னிடம்

*********************************************


என்ன தரம் உண்டு என்னிடம்

உங்கள் புகழ் பாட என்னிடம்

புலுக்கையிலும் புலுக்கையான என்னிடம்

புழுவிலும் கீழான என்னிடம்


பொல்லாத பேர் பெற்ற என்னிடம்

செல்லரித்த சிந்தையுள்ள என்னிடம்

சிதிலமாகி போன உடல் என்னிடம்

கோபத்தீ நாக்கு பெற்ற என்னிடம்


பொறாமைப் பேய் பிடித்த என்னிடம்

பெருமை என்னும் சிறுமை என்னிடம்

ஆணவமும் அகந்தையுமுள்ள என்னிடம்


என்ன தகுதி உண்டு என்னிடம்

உங்கள் புகழ் பாடி மகிழ என்னிடம்

என்ன ஞானம் உண்டு என்னிடம்

என்ன பேறு உண்டு என்னிடம்

ஏங்கி ஏங்கி துடிக்கிறேன் யா ரசூலல்லாஹ்!!


ஒரு போதும் உமை மறவாத இனிதான வரம் வேண்டும் !

********************************************************************


ஒரு போதும் உமை மறவாத இனிதான வரம் வேண்டும்!

உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்!

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்!

எமை யாளும் ரசூலல்லாஹ்!!

எமையாளும் ஹபீபல்லாஹ்!


சுட்டு விரல் நீட்டுங்கள்! சொன்னபடி மாறுவேன்!

உம் அடிமை நான் என்று கையெழுத்து போடுவேன்!

உம் சமூகம் கீழே நான் கண்குளிர்ச்சி தேடுவேன்!

உங்கள் சொந்தம் தானே என் குடும்பமாய் எண்ணுவேன்!

எமையாளும் ரசூலல்லாஹ்!

எமையாளும் ஹபீபல்லாஹ்!


உம்மை  காணாத கண்ணும் கண்ணல்ல!

***************************************************************


உம்மைக் காணாத கண்ணும் கண்ணல்ல..!

உம்மை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..!

நபி சொல்லாத சொல்லும் சொல்லல்ல..!

நபி இல்லாமல் நானும் நானல்ல..!


எங்கும் நிறைந்த நல் நீதி மங்காத ஜோதி !

உம்மை மறுக்கின்றவர் மாபெரும் பாவி !

நீங்களோ ஜோதி நாங்களோ பாவி !

பாவம் பொறுத்து  எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்...!

(உம்மை காணாத )


எங்கள் கண்மணி உள்ளம் யாம் பெற்ற செல்வம்....!

அவர் புன்னகை ஒன்றே போதுமே ....என்றும்

உம்மத்தி .. உம்மத்தி .. என்றே நவிலும்,

சொல் ஒன்றே போதும்...போதும்...போதும்...எப்போதும்...!


உங்கள் சுந்தரப் புன்னகை என் மனம் தேடும்...!

உங்கள் பொன் மனக்கோயிலில் என் மனம் தஞ்சம் ..!

வந்துவிடுங்கள்.. என் கண்ணான கண்மணி ..

ஏனின்னும் தாமதம் ...ஏக்கம்..ஏக்கம்...தீருங்கள்...!

(உம்மை காணாத )


ஏற்ற மிகும் அறிவே !

*********************************


ஏற்ற மிகும் அறிவே..!

தேட்டமிடும் அழகே !

என்னுயிரில் தங்கள் நினைவே.....!

என் நினைவில் இருக்கும்

தங்களது நெருக்கம்

எடுத்துரைக்க முடியலையே....!

விண்வெளியில் பறந்து

வேதனையை மறந்து

விழி திறந்து கனவு கண்டேன் ....! ஹபீபே,

விழி திறந்து கனவு கண்டேன் !


அரபு நாட்டில் பிறந்து

இறுதி தூதாய் வாழ்ந்து

நிலைத்ததும் அதுவும் ஒன்று ...!

இறை மறையை தந்து

இங்கிதமாய் வாழ்ந்து

நிலைத்ததும் அதுவும் ஒன்று...!

உள்ளமையிலா  இல்லை வல்லமையிலா..!

பேர் சொன்னாலே கோடி அழகு ....! ஹபீபே...

சொன்னாலே கோடி அழகு...


எண்ணமெல்லாம் நீங்கள்....!

எதுவென்றாலும் தாங்கள்....!

எண்ண....எண்ண....என்னுள்ளே இன்பம்...!

இதயத்திலே நீங்கள்...இருப்பதெல்லாம் தாங்கள்...!

சொல்ல ..சொல்ல..நாவினில் இன்பம்....!

கற்ப்பனையிலா இல்லை கனவுலகிலா ...!

காணும் பேறை கண் தேடுதே...! ஹபீபே...!

காணக்கோடி கண் வேண்டுமே...ஹபீபே...!

காணக் கோடி கண் வேண்டுமே..!

தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள்  - ஷபியத் காதிரியா கவிதைகள்

 


கண் கோடி வேண்டும் ரப்பே !

*************************************************


கண் கோடி வேண்டும் ரப் பே... என் கண்மணியை காண...
உண்ணாசை கற்பனையின் பொன் மேனியை காண..

சிந்தாமல் சிதறாமல் பெறுகின்ற..அருள் போல்..
எந்நாளும் பொன் நாளாய் வருகின்ற நிலையே....கண் கோடி..


பொறுமையும்..அருமையும்..நிறைந்திட்ட..அழகை..
அருமையுடன் யானும் பருகிட வந்தேன்...
எண்ண எண்ண அடங்காத ஆவல் தீர வேண்டும்..
கண்டு கண்டு ..நிண்று நின்று.. கொண்ட இன்பம் வேணும்...


கண் கோடி...


ஒப்பாரும் மிக்காருமில்லா இவ்வுலகில்..
கற்பூரம் கமழும் காமில் நபியை கொண்டேன்..
ஒளி காட்டி வழி காட்டும் மின்னொளியே... என்றேன்..
உள்ளம் உருகி அள்ளி அணைக்க ஏங்கி தவித்து நின்றேன்..


கண் கோடி



அண்ணல் இல்லாத வாழ்க்கை வெறுமையே !

*************************************************


அண்ணல் இல்லாத வாழ்க்கை வெறுமையே...!!!
அன்பு கண்ணல் இல்லாத வணக்கம் சிறுமையே...!!!

இதையே இறைவன் சொல்கிறான்..
அவனின் கலாம் அதனிலே...!!
தெளிவீர் உண்மை உலகிலே...
கேள்....மனமே...!!!


கவிதை தேவை என்றேன் ..உம்
புகழை சொல்லிடவே...
காதல் தேவை என்றேன்...உம்..
அருமை அறிந்திடவே
வாரும் வாரும் மெய் ஞான காமில் கண்மணியே...!!


மொழிகள் இனிக்கவில்லை உம் பெயரை சொல்லும் வரை
அமைதி இருக்கவில்லை .உம் நேசம் தோன்றும் வரை
கண்ணின் மணியின் சுடரை ஷுஹுத் செய்யும் வரை


உலகம் மாயை என்றேன் உண்மை தெரியும் வரை
உள்ளம் தேவை என்றேன்
அதில் உங்கள் ஆட்சி எனில்...
காப கவ்ஸைநின் நடுவில்
காட்சி காணும் வரை



சொல்லி முடிக்கவில்லை உம் புகழை எப்பொழுதும்
எண்ணி முடிக்கவில்லை .. உம் பெருமை இன்றளவும்
அள்ளி எடுத்திடுங்கள் என் கல்பை ... உம் கரத்தில்.
(அண்ணல்)




கண் உள்ளே என்றும் 

பொன் நபி நூரே..

எல்லாம் அவனே..என்றேன்..
எல்லாம் அவனே....என்றேன்..


நான் கொண்ட எண்ணம் தவறான போது..
நீர் சொல்லி தந்தீர் சரியான கொள்கை..
என் மனதில்.


கசடுகளே....இருந்ததினால்..
தெளிவு இல்லை!!!
நீர் இன்றி நானில்லை..
தேன் இன்றி சுவை இல்லையே..?
கல்பில் ..கண்ணில்....காணும்..
காட்சி....எல்லாம் ...நீரே...!!!


அடங்காத உள்ளம் அலை பாய்ந்தபோது...
அருகாமை தந்தீர்.. ம்
குருநாதர் வடிவில்...
வரவேற்று நானும்
குடியேற்றி வைத்தேன்..
தெளிவற்ற கல்பில் ஒளியேற்றி வைத்தேன்!!!



என்னகமும் .
என் விழியும்.. ம்
சொல்லாமல் ..
கொள்ளாமல்...
உம் பாதை ஓடி வரும்..
கேட்டேன் ...பெற்றேன்...கொண்டேன்...ஞான முத்து.





கண்மணியின் இஷ்க் பற்றி..


பாங்கு ஒலிக்கையிலே...,உங்கள்..
நாமம் கேட்க்கயிலே...விரல்,,
முத்தி கண்களிலே... நான் ஒற்றி தடவிடுவேன்...


என் கண்கள் குளிர்ந்திடுமே..


வெண்ணிலவே...வெண்முகிலே....
கொஞ்ச நேரம் நில்லுங்களே....
கோடி ஸலாமை சொல்லுங்களே...
எங்கள் ..அண்ணலின் காதினிலே....பதில்..
விரைவாய் சொல்லுங்களே...



மனசு ஆரலையே...
என் தாகம் தீரலையே...
பூர்வ ஜென்ம புண்ணியமாய்..
உங்க முகத்தை பார்த்திடனும்..
என் ஆவல் தீர்ந்திடனும்..


இறை ஞானம் கற்றிடனும் ..
அரும் சாதனை பெற்றிடனும்.....நீர்..
எமக்குள் இருக்கையிலே..
ஏது.
வேதனை.
எந்தனுக்கே...?


நன்றிகள் சொல்லிடுவேன்
என் நாயனே உந்தனுக்கு...என்
கண்மணி நாயகத்தை..என்
அருகே தந்த தற்கு...


(கிழக்கு சிவக்கையிலே..ராகம்)



தூயவன் ஆதீனத்தில்...ஜெக ஜோதி நிலவு உதித்தது...!!

அந்த மாயவன் நோக்கியதில் .. நூரில் நூராய்... விரிந்து.. ஜொலித்த து...
ஐவகை வர்ணங்கள்... அஹ்மத் .. முஹம்மத்...
நாமங்கள் .. ரூபத்தில் பிறவிகள் எடுத்தது..


தூயவன் ஆதீனத்தில்...


ஜோதி.. ஏன்..வந்தது?
காதலால் வந்தது...!!
அரூபம் மாறாதது!!!
ஆட்சி...தானானது...!!!


அஹ்மத் என்ற ஆண் பிறவியின் ஹர்பு...நான்கு வேதங்களோ...


முஹம்மத் எனும் மயில் தாளை விழுங்கி.... கலிமா ஒலியானதோ..


அந்த நாள் என்பது.... காண அறிதென்பது(2)


காணும் காட்சிகளில் தேடி கிடைக்காதது!!


(தூயவன்)


வர்ண ஜாலமுள்ள பெண் ஆன பிறவி .....,
தாவூஸ் மயிலானதோ...!!!
முஹம்மது என்ற பெண் பிறவியாகி ....
எழிலில் வெளியானதோ...!!!


நூரே..முஹம்மதியா...அர்ஷ்.. குர்ஷ் ..ஆனது
நூரே முஹம்மதியா ...லவ்ஹ்
கலமானது


நூரே முஹம்மதியா....ஹக்...ஹல்க்கானது


(தூயவன்)