MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றால் என்ன?


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♣  ஷரீஅத் & தரீகத் என்றால் என்ன?

ஷரீஅத் & தரீகத் என்பதற்கு இன்று தவறாக விளக்கம் சொல்லப்படுகிறது. அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி சுட்டிக்காட்டுவதும் மேலும் தெளிவாக விளக்கிக் கொள்வதும் நம் மீது கடமையாகும்.


​​ஷரீஅத் என்பது குணம், தரீகத் என்பது உள்ளமை. ஷரீஅத் உடல் என்றால் தரீகத் என்பது அதன் உயிர். ஷரீஅத் என்பது (வெளிப்படையானது) பகிரங்கமானது, தரீகத் என்பது (மறைமுகமானது) அந்தரங்கமானது. அந்த அடிப்படையில் நினைவில் நாம் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்.


ஆகவே ஷரீஅத் என்பது தரீகத்தின் அடிப்படையாகும் ஆனால்.! இன்று சில அறிவிலிகள் இறைநேசர்கள் போதித்த ஆன்மீக போதனைகளையும், ஞானங்களையும் சரியாக விளங்கிக் கொள்ளாமல். தான்தோன்றித்​தனமாக, இன்னும் அறை குறை மதியோடு ஷரீஅத் என்பது வேறு தரீகத் என்பது வேறு என்று கூறுகிறார்கள். அதாவது - ஷரீஅத் என்பதும், தரீகத் என்பதும் வெவ்வேறு பாதை ஒன்றோடு ஒன்று சேராது என்று தவராக நினைத்து கொண்டு மக்களுக்கு மத்தியில் சிலர் தவராக சொல்கிறார்கள். இது தவறான கருத்தாகும்.


​​அந்த அடிப்படையில் ஷரீஅத் என்பது தரீகத்தின் அடிப்படையாகும். ஹகீகத்திற்க்கு வழி காட்டியாகும், மஅரிஃபத்தின் திரையை விலக்குவதாகும். ஆகவே ஷரீஅத்தினை பின்பற்றி செல்லுதல் முஸ்லிம்கள், மற்றும் ஞான குருவின் சீடர்கள் ஆகிய ஒவ்வொருவரும் மீதும் மிகவும் இன்றியமையாததாகும்.

♦  ஷரீஅத் என்பது உடல் தரீகத் என்பது உயிர். இதில் ஒன்று இல்லை என்றாலும் மற்றொன்றை பெற முடியாது. என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஷரீஅத் வெளிப்படையானது தரீகத் அந்தரங்கமானது என்பதை நாம் ஒவ்வொரு இபாத்ததிலும் காணலம் ஷரீஅத், தரீகத் என்பது ஒரு உடல் ஒரு உயிர் போல. எனவே இவ்விரண்டும் ஒன்று சேர்துதான் இருக்க வேண்டுமே தவிற இதில் ஒன்றை விட்டாலும் நாம் செய்யும் எந்த ஒரு வணக்க வழிபாடும் இறைவனால் அங்கிகறீக படமாட்டது என்பதற்கு ஹதீஸூகள் உள்ளன.

♦  ஷரீஅத் - துக்கு உதாரணம்  (ஷரீஅத் - வெளிப்படையானது)

ஹதீஸ் :- நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் சூரத்துல் பாதிஹாவை ஓதவில்லையோ அது தொழுகை அல்ல!

♦  தரீகத் - துக்கு உதாரணம் (தரீகத் - அந்தரங்கமானது)


ஹதீஸ் :- நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உள்ளம் ஈடுபடாமல் எந்த தொழுகையும் இல்லை!

♦ நாம் தொழுகிற தொழுகை இறைவனிடம் இபாதத் (வணக்கம் ) என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் ஷரீஅத் (வெளிரங்கமான) என்ற சூரத்துல் பாதிஹாவும் (அல்ஹம்து சூராவும்) இன்னும் தரீகத் (அந்தரங்கமான) என்ற உள்ளம் பரிசுத்தமானதாகவும் இருக்க வேண்டும். எனவே ஷரீஅத்தும், தரீகத்தும் வெவ்வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதை விளங்கி கொள்வோம். யாரவது ஷரீஅத் என்பது வேறு தரீகத் என்பது வேறு என்று சொன்னால் அவருக்கு ஆன்மீக ஞானம் அறவே கிடையாது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

♣  ஹகீகத் என்றால் என்ன?

ஹகீகத் என்பது (இரகசியம், யதார்த்தம்) எனப்படும். வழிகேடர்களாகிய வஹ்ஹாபிகளின் வழியில் சென்று வழிகெட்டு பாவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மனிதர்கள், மார்க்க விளக்கம் பெற நேர்வழி பெற்ற சூபியாக்களை, ஷைகுமார்களை நாடும் போது முதலில் ஷரீஅத் சட்டங்களை முடிந்தளவு கடைப்பிடித்து நம்மை தரீக்கத் எனும் நேர்வழியில் செல்ல வேண்டும் எனவும் மேலும் அவர்களிடம் (பைஅத் - ஞான தீட்சை) பெற்ற பின்னர் நமக்கு சூபியாக்கள், ஷைகுமார்கள் குர்ஆன், ஹதீஸ்களில் அடிப்படையில் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு விடயங்கலும் இரகசியம்தான், இதுதான் ஹகீக்கத் எனும் எதார்தமான விடயங்கள். இது ஒரு ரகசியம் இது தான் உண்மை – யதார்த்த நிலை . ஆனால் இவ்வுண்மை அனைவருக்கும் தெரிவதில்லை.

♣  மஃரிபத் என்றால் என்ன?

மஃரிபத் எனும் (இறைவனை அறியும் தத்துவம்) இதை அறிந்தவர்கள்தான் (ஞானி – ஆரிப்) என இவர்கள் அழைக்கப்படுவார்கள். இறைவனின் நினைவில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அவனுக்கு அதிகம் அஞ்சி நடந்த இபாதத், வணக்கம் உட்பட அனைத்து விடயங்களிலும் சூபியாக்கள், ஷைகுமார்கள் அல்லாஹ்வின் சிந்தனையில் மூழ்கியதால் 'பனாஃ' எனும் நிலை ஏற்படும். இதற்கு இறை நினைவால் மூழ்கி கொள்ளல் என சொல்லப்படும்.


​​இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரிபீன்கள் என்று சொல்லப்படும். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே கூறினார்கள் : 'வமா அரப்னாக்கா ஹக்கை மஃரிஃபதிக' (உனது தரத்திற்கு ஏற்றவாரு உன்னை நாங்கள் அறியவில்லை) என்று சொன்னார்கள்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி     

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்    

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன               (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன                (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​