MAIL OF ISLAM

Knowledge & Wisdom




கப்ருகளை ஸியாரத் செய்யலாமா?

























ஆம், செய்யலாம்,


கப்ருகளை ஸியாரத்து செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும்.



*  கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154



*  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 - 241



* ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் – 154



*  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.

முஸ்லிம், மிஷ்காத் - 154