MAIL OF ISLAM

Knowledge & Wisdom



                                                    நபிமார்கள், வலிமார்கள் உயிரோடு இருக்கிறார்களா?























ஆம், நபிமார்கள், வலிமார்கள் அவர்களின் கப்ருகளில் இன்றும் ஹயாத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.



* இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.


அல் குர்ஆன் [2:154]



* அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.


அல் குர்ஆன் [3:169]



* நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.



அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத் – 120



* நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ர் அருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதை பார்த்தேன்.

முஸ்லிம் – 2-268