MAIL OF ISLAM

Knowledge & Wisdom




பெண்கள் ஸியாரத் செய்யலாமா?





















கப்ருகளை ஸியாரத் செய்வது ஆண், பெண் இரு பாலாருக்கும் சுன்னத்தும், முஸ்தஹ்பும் ஆகும்.



* ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத்  3- 61



* ஸியாரத்துக்கு செல்லும் போது என்ன ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு சொல்லி கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம், மிஷ்காத் - 154



* அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.

முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக்  3-572,  முஸ்தத்ரக் 1- 377



* மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் - 149, முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079