MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மிஸாக் உடைய நாளில் 'நபியுல் அன்பியா' - அல் குர்ஆன்


வ இz அ'க்ஹசல்லாஹு மிஸாக்கன் நபியின லாம ஆ'தைதுகும் மின் கிதாபியோவ் வ ஹிக்மத்தின் சும்ம ஜா'அ கும் ரசூலும் முஸதிக்கல்லிமா ம'அகும் ளது மினுன்ன பிஹி வள தன்சுருன்னஹு கா'ல அ அக்ரர்தும் வ அக்zதும் அலா ஜா(z)'ளிகும் இஸ்ரி காலு அக்ரர்ணா கா'ல ப'அஹ்ஷதூ வ அனா ம'அகும் மினஷ் ஷஹீதீன் .


அல் குர்ஆன் ஷரிப், அத்தியாயம் - ஆல இம்ரான், வசனம் - 81


(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்  [3:81]


இந்த இறைவசனத்தில் "உஹீதே பைமான்" சம்பவத்தினை பற்றி சொல்லப்படுகின்றது. அல்லாஹு ரப்புல் ஆலமின் எல்லா ஆன்மாக்களிடம் சத்திய பிரமாணம் வாங்கிய சம்பவமாகும். இதை தான் 'உஹீதே பைமான்' என்று சொல்கிறோம். இந்த சம்பவம் நடந்த நாள் 'மிஸாக்' உடைய நாள் என்பர்.



மிஸாக் உடைய நாளின் போது எல்லா நபிமார்களின் ஆன்மாவிடம் இறைவன் சத்திய பிரமாணம் வாங்கிய இந்த சம்பவத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் புகழை பற்றி இந்த இறைவசனத்தை வைத்து விளக்குவது நம் சிறிய அறிவிற்கு அப்பாற்பட்ட விடயமாகும் எனில் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் சத்திய பிரமாணம் வாங்கப்பட்டதே நபிகளாரின் வருகை சம்மந்தப்பட்ட விடயங்களாகும்.


"மிஸாக்" உடைய நாளின் சம்பவமானது ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் சொர்கத்திலிருந்து ஹிந்துஸ்தானத்திற்கு 'கொழும்போ' என்ற மலையில் இறக்கினான் மற்றும் ஹஸ்ரத் ஹவ்வா அலைஹி ஸலாம் அரேபியாவில் 'ஜித்தா' எனும் இடத்தில் இறக்கி விடப்பட்டார்கள். 300 வருடங்களுக்கு பிறகு நபிகளாரின் பெயரின் பரகத்தால் பாவமன்னிப்பு கிடைத்தது. இதைப்பற்றி சம்பவம் நாம் முன்னே பகிர்ந்த வசனங்களில் காணலாம். அப்போது 'நுமான்' மலையில் ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்களுடைய முதுகு தண்டிலிருந்து அவர்களுடைய எல்லா வாரிசுகளின் (கியாம நாள் வரை வர இருக்கும் உயிர்கள்) ஆன்மாக்களை இறைவன் வெளிப்படுத்தினான். அங்கே மூன்று விதமாக சத்திய பிரமாணங்களை வாங்கினான்.


முதலில் எல்லா படைப்புகளிடம் இறைவன் கேட்டான் - "அலஸ்து பி ரப்பிகும்' - என்ன நான் உங்கள் இறைவன் இல்லையா? என கேட்டதும்.


எல்லோரும் "ப'அலா" (ஆம்) என்று பதிலளித்தார்கள்.



இரண்டாவதாக உலமாக்களிடம் இறைவன் கேட்டான் - இறைவனின் உத்தரவுகளை 'தாவாஹ்' பணி செய்யவேண்டும்.


மூன்றாவதாக "அம்பியாக்கள்' என்ற நபிமார்களிடம் இறைவன் கேட்டதை தான் மேற்சொன்ன இறைவசனத்தில் காணப்படுகின்றது.


இந்த சத்திய பிரமாணத்தை பற்றி அம்பியாக்களின் ஆன்மாக்களிடம் இறைவன் கூறும் போது 'நான் உங்களுக்கு நபித்துவத்தின் கிரீடத்தை அணிவிப்பேன், வேதத்தை கொடுப்பேன், என்னுடைய அடிமைகள் உங்கள் உம்மத்துகளாக ஆக்கி முற்றிலும் உங்களை பின்பற்ற வைப்பேன், உங்களுடைய பெயர் உலேகுங்கும் பிரபலப்படுத்துவேன், உங்களுடைய நுபுவத்தை முழுமையாக்கி வைப்பேன். அந்த தருணத்தில் நீங்கள் இருந்தீர்களானால் என்னுடைய இறுதித் தூதர் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் உங்களிடையில் அவதரித்தால்....!


நீங்கள் அனைவரும் தற்தன் உம்மதுக்களோடு அந்த நேசரான இறுதித்தூதர் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களுடைய உம்மதுக்களாக மாறிவிடவேண்டும். இந்த நேசர் வருகை புரிந்துவிட்டால் உங்களுடைய 'தீன்' முழுமையடைந்து நிறைவு பெற்று முற்றிவிடும். உங்களுக்கு அளித்த வேதங்களும் முற்று பெற்றுவிடும். அப்போது நீங்கள் அந்த நேசருக்கு திடமான உதவி புரியவேண்டிவரும். என்ன, இந்த உடன்படிக்கையை எற்றுகொள்கிறீர்களா? என இறைவன் கேட்டான்.


எல்லா அம்பியாக்களும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்கள். இதை ஏற்றுக்கொண்டவுடன் சத்திய உடன்படிக்கை நிறைவடையவில்லை. பின்னர் இறைவன் கூறினான். இதை நீங்கள் எனக்கு வாக்களிக்கையில் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றோவர்களுக்கு சாட்சியாளர்களாக மாறிவிடுங்கள். அதாவது ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள், ஹஸ்ரத் நூஹ் அலைஹி ஸலாம் அவர்களுக்கு சாட்சி, அது போல.


ஒருவர் மற்றொருவருக்கு சாட்சியாளராக மாறிய பின்பும் இந்த உடன்படிக்கை நிறைவடையவில்லை. பின்பு இறைவன் கூறினான், உங்கள் அனைவருக்கு நான் சாட்சியாளனாக இருக்கின்றேன் என சொன்ன பிறகுதான் இந்த சத்திய பிரமாணம் நிறைவடைந்தது.



இதில் என்ன ஹிக்மத் உள்ளது என்று அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம். இறைவனின் 'ரூபியத்' என்ற உள்ளமையை பற்றி குறிப்பிட்டிருந்தால் சாட்சியம் பற்றி இங்கே தேவை இருந்திருக்காது. எல்லோரும் "ப'லா" (ஆம்) என்றே கூறியமையில் எல்லாம் முடிந்துவிட்டது.


மேலும் சத்திய பிரமாணம் வாங்கிக்கொண்டும், மீண்டும் எல்லா விஷயங்களையும் கூறி சாட்சிகளை வாங்கியும், தானும் சாட்சியாளனாக இருக்கின்றான். அல்லாஹுதாலா-விற்கு இந்த இல்மும் இருந்தது, அதாவது ஏதேனும் ஒரு நபி தன்னுடைய காலத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை அடைந்தாலும் மீண்டும் இந்த விடயங்களை கூறி சத்திய பிரமாணம் வாங்கிக்கொண்டான்.


அதாவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வந்துவிட்டால் எனில் நாம் உம்மத்துகளாக மாறிவிடுவோம் குறைதபட்சம் இந்த விடயத்தில் ஈமானோடு இருப்போம் என்று உம்மத்துக்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வந்து விட்டால் ஈமான் கொள்ளலாம் என்பதை மெஹராஜ் உடைய இரவில் எல்லா அம்பியாக்களும் இந்த சத்திய பிரமாணத்தை முன் மொழிந்தார்கள் அதில் சத்தியத்தையும் காப்பாற்றினார்கள் எல்லோரும் உம்மத்துகளாக, முக்ததிகளாக நின்று பைத் அல் முகத்தஸ் உடைய புனித பூமியில் 'இமாம் அல் ஹரமைன் அலைஹி ஸலாம்' அவர்கள் பின் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள்.


'அஸ்ரா உடைய தொழுகையில் நபியின் சிரம் முன்னே இருந்த போது

அதன் அர்த்தம் அவ்வல் மற்றும் ஆகிர்;

பின்னே நின்று தொழுத அந்த நபர்கள் முன்னே (ஒரு காலத்தில்) தீனுடைய ஆட்சி நடாத்தியவர்கள்"


(இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டுரையில்)


இந்த இறைவசனத்தின் அர்த்தம் எல்லா நபிமார்களும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 'உம்மத்'. நபி ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம் 'நபியுல் அம்பியா"


அல்லாஹு ரப்பு முஹம்மதின் ஸல்லா அலைஹி வஸல்லம்


நஹ்னு இபாது முஹம்மதின் ஸல்லா அலைஹி வஸல்லம்



உர்து மூலம்:

ஹகீம் அல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயுனி ரஹ்மதுல்லாஹி அலைஹி

நூல்: ஷானே ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன்