MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஷஹீத் இப்னு ஷஹீத், ஸையதுஸ் ஷுஹதா ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு


ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சையதுஸ் ஷுஹதா என்று சொல்லக்காரணம், ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் முதல் இப்போது உள்ள உயிர்கள் வரை, இமாம் ஹுசைன் அவர்களை போன்று கஷ்டங்களை சந்தித்ததும், பலவிதமான இன்னல்களுக்கு ஆளானவர்கள் எவரும் இல்லை.


கர்பலாவினுடைய மைதானத்தில் காzஸிகளும் (Ghaazi) [The one who fight for the Sake of ALLAH] இருந்தார்கள், பர்தேஸ்'ஸி -களும் (A person who lives in another Land), முஹாஜிர்-களும் (Rally to My help) இருந்தார்கள், முஸாபிர்-களும் (A traveler) இருந்தார்கள்.


3 நாட்களுக்கு பட்டினி நோன்போடும், மனைவி, குழந்தைகளோடும் இறைவனுக்காக தங்களை காணிக்கை செய்பவர்களும் இருந்தார்கள். மேலும் இறைவணக்கம் புரிந்தவர்கள் தன் இறைவனை வணக்கம் செய்துகொண்டு இருக்கையில் ஷஹீத் ஆனவர்களும் இருந்தார்கள்.


முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியிருந்தார்கள், "ஹசன், ஹுசைன் சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்கள் ஆவர்கள்". சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்கள், சொர்கத்தின் தலைமையை ஏற்க எல்லா பலப்பரிட்சைகளிலும் நின்றும் வெற்றிபெற்றுவந்தார்கள்.


இமாம் ஹுசைனார் முதலில் முஜாஹிர், முஜாஹித், காஃஸி (Gazi) யாக இருக்கவில்லை. இதற்க்கு முன்பே இமாம் ஹுசைனார் அவர்களுக்கு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் "சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்" என்று கிரீடம் அணிவித்துவிட்டார்கள் . சுபானல்லாஹ்.


ஒரு ஹிக்மத் என்னவென்றால் எவரேனும் ஒரு சொர்கவாசி என்னுடைய சொர்கத்தின் தலைவர் (இமாம் ஹுசைன்) அவர்களுக்கு சில "சிப்பாத்"-கள் இல்லை எல்லாம் அல்லாஹ்வினுடைய விருப்பமாக இருந்தது என்பாராயின்.


கர்பலாவின் ஒரே மைதானத்தில், எல்லாவித இன்னல்களுக்கும் உட்பட்டு எல்லா பலப்பரிட்சைகளிலும் சந்தித்து ஒவ்வொன்றாக வெற்றியும் கண்டுவந்தார்கள். இமாம் ஹுசைனாரின் அனைத்து "சிப்பாத்"-களும் வெளிப்பட்டுவிட்டன.


இமாம் ஹுசைன் அவர்களை போன்று எவரும் தொழுததும் இல்லை, எவரும் பட்டினி நோன்பும் வைத்ததில்லை, இமாம் அவர்களை போன்று எந்த ஒரு போர்வீரனும் இல்லை, இமாம் அவர்களுக்கு சென்ற "ஜூலுஸ்" (a gathering of People) போன்று எந்த ஒரு "ஜூலுஸ்"-ம் இதுவரை சென்றதில்லை.


எல்லோரும் தொழுகைக்காக "ஒளு" செய்வார்கள் அல்லது "தயம்மும்" செய்வார்கள். இமாம் ஹுசைனார் அவர்களின் இறுதி தொழுகை "ஒளு" மற்றும் "தயம்மும்" கடந்து இருந்தது.


விஷயம் என்னவென்றால் 3 நாள் பட்டினியுடன் குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத பட்சத்தில், "ஒளு" செய்ய தண்ணீர் கிடைக்கவா போகிறது?


சரி தயம்மும் செய்துவிடலாமே என்று நினைத்தால் காய்ந்த சுத்தமான மண் அல்லது கட்டாந்தரை அல்லது சுவர் கொண்டு கைகளினால் செய்துவிடலாம் என்று நினைத்தால்....


கைகளிலோ காயங்களுடன் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்து கொண்டு இருக்கையில் எவ்வாறு தயம்மும் செய்ய இயலும்?


"நா மஸ்ஜித் மே, நா பைத்துல்லாஹ் கி திவாரோ கே சாயமே;

நாமாஜ் எ இஷ்க் அதா ஹோதி ஹே தல்வாரோன்கே சாயா மே..."


"பள்ளிவாசலிலும் இல்லை, அல்லாஹ்வின் வீட்டின் சுவர் நிழலிலும் இல்லை,

யா ஹுசைன், உங்கள் இறைக்காதலின் தொழுகை போர்வாளின் நிழலில் நிறைவேறியது"


--Mufti Ahmad Yaar Khan Nayami Badayuni Razhiyallahu Anhu--


இமாம் ஹுசைன் அவர்களுடைய தொழுகை "ஒளு", "தயம்மும்" போன்றவற்றினை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கவில்லை. அதையும் கடந்து இமாம் அவர்களின் இறைக்காதல் இருந்தது.


இமாம் அவர்களின் நோன்பை போன்று இந்த உலகில் எவரும் நோன்பு பிடித்ததில்லை, எல்லோருக்கும் நோன்பு ஒரு நாள் ஆகும், இமாம் அவர்களின் நோன்போ 3 நாட்கள் கொண்டதாகும். இல்லாருக்கும் "இப்தார்" நேரம் சூரியன் மறையும் போதாகும், இமாம் அவர்களுக்கோ கதிரவன் உச்சத்தில் இருந்த போது.


எல்லோரும் தண்ணீரை கொண்டு "இப்தார்" செய்வார்கள். இமாம் அவர்களோ "ரத்தத்தை" கொண்டு செய்தார்கள்.


கணவனை இழந்துவிட்ட பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் "இத்தத்" உடைய காலத்தினை தனியே ஒரு இடத்தில் இருந்து களிப்பார்கள். ஆனால் இமாம் ஹுசைன் அவர்களின் மனைவி, அலி அஸ்கர்-ன் அன்னை, அலி முர்தஸா அவர்களின் மருமகள், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் குடும்பத்தின் "குலவிளக்கு", முஸ்லிம்களின் கண் இமை தன்னுடைய கணவனை (இமாம் அவர்களை) இழந்துவிட்ட பிறகு....


கர்பலாவிலிருந்து குஃபா- வரையும் பின்பு குஃபா-விலிருந்து சிரியா வரைக்கும் கைதிகளாக அலைகிலிக்கப்பட்டார்கள். இமாம் ஹுசைனார் அவர்கள் ஷஹீத் ஆன பிறகு அவர்களை போன்று எவரும் இதுவரை ஊர்வலம் சென்றிருக்க மாட்டார்கள்.


இந்த வானமும், பூமியும் இது போன்ற சம்பவத்தினை இதுவரை பார்த்தது இல்லை. துண்டிக்கப்பட்ட இமாம் ஹுசைனார் அவர்களின் புனித சிரம் ஈட்டியின் முனையில் சொருகியபடி முன்னே செல்ல கைதிகளாக ஒட்டகங்களை இழுத்துக்கொண்டு பெண்கள் பின்னே தொடர்ந்தனர்.


இறந்து போகும் நபர், இறப்பதற்கு சற்று முன் தன்னுடைய நேசபந்துக்களுக்கு நல்லுபதேசம் செய்வார்கள். ஆனால் இமாம் ஹுசைன் அவர்களோ எவ்வாறு இவ்வுலகை விட்டு பிரிகிறார்கள் என்றால் கடுமையான வெட்டுக்காயங்களுடன் குதிரையிலிருந்து கிழே விழும் போது தன்னை வெட்ட வந்த கொடுங்கோலன் ஷிமர் என்பவனிடம் "இரு 'ரகாத்' கசர் உடைய தொழுகையினை நான் தொழ வேண்டும் என கேட்டார்கள்" .


இறைவன் மீது ஆணையாக நம் முழு வாழ்கையும் லட்சக்கணக்கான தொழுகைகளை தொழுது இருந்து காணிக்கை ஆக்கினாலும், இமாம் ஹுசைன் அவர்களுடைய ஒரு "சஜ்தா" விற்க்கு ஈடாகாது. சுபானல்லாஹ்.


(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (Al-Fajr 89:27-30)



பிறகு ஏன் முஸ்தபா ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய தோட்டத்தின் "பூ" விற்க்கு சிறப்பு இல்லாமல் போகும்? முஸ்தபாவின் உம்மத்தில் மதிப்பிட முடியாத அந்தஸ்தும் கண்ணியமும் என்டேன்ரும் இமாம் ஹுசைன் அவர்களுக்கு இருக்கும். இமாம் அவர்கள் தீனை பாதுகாப்பவராக இருந்தார்கள்.


சந்தோஷத்திலும், சங்கடங்களிலும் "தீன்" உடைய பக்கமே திரும்புபவராக இருந்தார்கள்.


"காற்று விளக்கை அணைக்கும் என்பதற்கு தான் குமிழ் !

காற்றே குமிழாக மாறிவிட்டால் பின்பு விளக்கை யார் அணைப்பது ? "


-- அல்லாமா இக்பால் அலைஹி ரஹ்மா--


ஹஸ்ரத் இஸ்மாயில் அலைஹி ஸலாம் அவர்கள் தன்னை இறைவனுக்காக வேண்டி "பலியிட" சென்று இருந்தபோது. தன்னுடைய தந்தை ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தார்கள்.


உயிர் பிரியும் பொது எல்லோருக்கும் துடிப்பு இருக்க செய்யும் எனவே என்னுடைய கை, கால்களை கட்டிவிடுங்கள், என் முகத்தினை பார்க்காமல் வெட்டுங்கள் ஏனென்றால் நான் வெட்டுப்படும் பொது துடிக்காமல் இருப்பேன் என்று கூறினார்கள்.


இமாம் ஹுசைன் அவர்களும் வெட்டுப்படும் போது துடிக்கவில்லை, பதறவில்லை.


"த்ஹா கண்ஜீர் பி நா தடப்'பா பஷர் ஷேர் எ குதா

எ தக்லீப் தொ பஅக்த் பாத்திமா கே ஷேர் மே ஹே"


"புலியும் துடிக்கவில்லை, புலியின் மகனும் துடிக்கவில்லை

இந்தக் கஷ்டம் பாத்திமாவுடைய புலிகளுக்கு மட்டுமே"


-- Mufti Ahmad Yaar Khan Nayami Badayuni Alahi Rahma --


ஷஹீத் ஆன பிறகும் இமாம் ஹுசைன் ஈட்டி முனையில் இருந்த வேளையிலும் தன்னுடைய கண்களை திறந்தார்கள், இந்த புவியையும் கண்டார்கள்.


சுபானல்லாஹ்... எவ்வாறு அதை சொல்லுவது. வார்த்தைகளில் அடங்காத ஒன்று....


"பா ஆங்கேன் சரே நேஸ்-எ பர் சவா ஹே சமீன் ஹே ரோ

யானி ஹே சஜ்தா சாநி கி ஆர்சோ"


இமாம் ஹுசைன் ஈட்டி முனையில் இருந்து பார்த்த போது இப்புவி அழுதது, யா ஹுசைன் உங்கள் "சஜ்தா" கிடைக்காத என்று?


இமாம் ஹுசைன் அவர்கள் ஒரு சஜ்தா செய்து இருந்த வேளையிலே இரண்டாம் சஜ்தா செய்ய முடியும் என்ற நினைத்த நேரத்தில் கொடுங்கோலனால் வெட்டப்பட்டுவிட்டார்கள் "சையதுஸ் ஷுஹதா" ஆனார்கள்.


ஹகிகதில் ஷஹீத் உடைய பரக்கத்துக்கள் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் திருமடியிலிருந்து பங்கிடுகிறார்கள். இன்னும் ஷுஹாதக்கள் இமாம் அவர்களின் கரத்தினை பற்றி பிடித்துக்கொண்டு தான் இறைவனின் சந்நிதானத்தில் போய் சேருகிறார்கள்.


-- ஹகீம் அல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி அலைஹி ரஹ்மா கூறுகிறார்கள் --


ஹகிகதில் இமாம் ஹுசைன் அவர்களின் மகத்துவத்தினை என்னால் இன்னும் எழுத இயலும், என்னால் முடிந்த அளவிற்கு சில வரிகள் தான் முடிவுற்றது. ரப்புல் ஆலமின் இதை கபூல் செய்வானாக. நான் எழுதியதிலிருந்து பயன் பெற்றவர்கள், இந்த "பஃகிர்" மற்றும் முஸ்தபா-வின் அடிமைக்காக இறைவனிடம் "மஃக்பிரத்" வேண்டி பிராதிப்பீராக.


முற்றும்.


அஹ்மத் யார் காஃன் நயமி அஷ்ரஃபி

14 முஹர்ரம் அல் ஹராம் ஹிஜ்ரி 1345


உர்து மூலம்:


ஹகீம் அல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி அஷ்ரஃபி பதாயுனி அலைஹி ரஹ்மா


நூல்: ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயாதில் குர்ஆன்