MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அன்பு - பாசம் - காதல்


தொகுப்பு: மெயில் ஒப் இஸ்லாம்

​​

இறைக்காதலர்களான இறைநேசர்கள் தனது காதலியான இறைவனை சற்று நேரம் மறந்தால், அவர்களுக்கு ஏற்படும் சோதனைகளை எமக்கு அழகான முறையில் விளக்கப்படுத்தி  தருகிறார்கள் கௌதுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.​

​​"ஞானமற்ற மறதியாளனே, உன்னை நேசிப்பவனையே நீ நேசி, உன்னை தேடுபவனையே தேடு. தன்னை நேசிப்பவனையே அல்லாஹ்வும் நேசிக்கிறான்." 


​​“அடியானே, உன்னைச் சந்திக்க அதிக ஆவல்படுகிறேன். என்று அல்லாஹு தஆலா கூறியிருப்பதை சிந்தித்துப்பார். அவனை துதித்து போற்றவே உன்னைச் சிருஷ்டித்துள்ளான். நீ வீண் விளையாட்டில் பொழுது போக்காதே!

  ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூட இறைவனை ஒரு கண நேரம் மறந்து சுவர்க்கத்திலேயே இருந்து விட நினைத்தார்கள். அதனால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.


  மீண்டும் இறைவனை மறந்து ஹவ்வாவோடு இருந்து விட நாடினார்கள். அவர்கள் இருவரும் தென் துருவத்துக்கும், வட துருவத்துக்கும் பிரிக்கப்பட்டனர். அது மட்டுமா?


♣  ஹழ்ரத் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு கணம் இறைவனை மறந்து தம் செல்வ மகனுக்கு இதயத்துனுள் இடம் கொடுத்தார்கள். என்ன ஆனதென்றால் கன்ஆனில் தந்தையும், எகிப்தில் மகனுமாக ஒதுக்கப்பட்டனர்.


♣  ஏன், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களின் மஹ்பூபான அல்லாஹ் இருக்க வேண்டிய இடத்தில் லேசாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சிறிது நேரம் ஏற்றி வைத்தார்கள். அன்னை மீது வஞ்சகர்கள் அவதூறு கூறவும் அதனால் சில நாட்கள் வரை அன்னவர்கள் தர்ம பத்தினியின் முகத்தை கூட பார்க்காமல் மன சஞ்சலமடையவும் நேரிட்டதல்லவா!



கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பத்ஹூர் ரப்பானி

சுவனத்து ஆத்மாவின் சுவனத்து ஜோடி


​​ஆத்மீக ஜோடிகளின் ஆத்மீக ரகசியங்கள் பற்றிய உண்மைகளை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

இன்பமும் துன்பமும்

​ 

இன்பத்தையும் துன்பத்தையும் அல்லாஹ் நமக்கு ஏன் தருகிறான் என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

அன்பை கொண்டு சோதனை

​ 

மனிதன் அன்பை கொண்டு எப்படி சோதனை செய்யப்படுகிறான்? என்பதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பெண்கள் பைஅத் செய்யலாமா?


​இஸ்லாத்தின் பார்வையில் பெண்களும் பைஅத் செய்துகொள்ளலாமா? என்பதை அல் குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.