MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதப்படும் மௌலிது  ஷரீபிற்கு குர்ஆன் , ஹதீஸே முதன்மையான ஆதாரம்


மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மௌலிது எனும் புகழ்பாக்களை பாடலாமா? அவைகளுக்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உண்டா? என்று கேள்வி வருவது விவரமற்ற வினாவாகும் .


குர்ஆன் , ஹதீஸ் இவ்விரண்டுமே பூமான் நபியின் புகழுக்கு ஆதாரங்கள்தான்.


இவ்வுலகில் மனிதக்கரங்களில் ஊடுருவலுக்கு உட்படாமல் காலங்காலமாக கவினுயர் குர்ஆன் காக்கப்பட்டு வருவதே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டதால்தான் .


ஓவ்வொரு இறைத் தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன அவற்றைக்காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டியதிருந்தது . எனக்கு வழங்கப்பட்ட அற்புதமெல்லாம் எனக்கு அல்லாஹ் அருளிய வேதஅறிவிப்பு(வஹீ) தான் . ஆகவே மறுமைநாளில் பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் .

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு ; நூல் : புகாரி ஷரீப் 498


மேற்கண்ட இப்பொன்மொழியின் வழியே குர்ஆன் என்பது வாழ்வு நெறி போதிக்கும் வான்மறையாயினும் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் அற்புதப் பேழையே ஆகும் என்பதை நாம் அவசியம் உணர்ந்தாக வேண்டும் .


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதன் மூலம் அல்குர்ஆன் புகழ் பெறுகிறது .


பூமான் நபியின் புகழ்பாடும் புனித மௌலிது காவியங்களில் முதன்மையானது குர்ஆனே என்பது மறுக்க முடியா உண்மையாகும் . அருள் மறையின் திருவசனங்கள் நெடுகிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகுப்புகழையே , விண்டுரைக்கின்றன என்பது உலகம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டிய உண்மையாகும் .


அல்ஹதீஸ் என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன , செய்த , பிறர் செய்ததைப் பார்த்து அங்கீகரித்தவைகளுக்குத் கூறப்படும் .


O إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى Oوَمَا يَنطِقُ عَنِ الْهَوَى

அவர்கள் எதையும் சுயமாகப் பேசமாட்டார்கள் . அவர்களின் பேச்சுக்கள் யாவுமே இறைவசனங்கள்தான் (அல்குர்ஆன் ஸூரா அந்-நஜ்ம்:3,4)

அண்ணலின் பேச்சு அல்லாஹ்வின் பேச்சே என்று அருள்மறை மூலமே அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான் .


ஹதீஸ் என்பது அண்ணல் நபியின் கன்னல்மொழிகள் என்று அகிலமே அறிந்து வைத்து இருக்கிறது . அதுவும் அல்லாஹ்வின் வார்த்தைகளே ! என்று அறிவிப்பதன் மூலம் ஹதீசையே மௌலிதாக மான்பேற்றி மெருகூட்டுகிறது மாமறை.



நன்றி :

நூல் : மாநபியின் மவ்லித் ஷரீப் மார்கத்திற்கு அரணா ? முரணா ?

ஆசிரியர் : T.S.A. அபூதாஹிர் ஆலிம் மஹ்ழரி

வெளியீடு : ஃபஹீமியா பப்ளிஷர்ஸ்